மணிமேகலையின் உடல் சிலிர்த்தது. இதென்ன இப்படி ஒரு நினைவு? முற்பிறவியில் இராகுலன் என்ற அரசகுமாரன் தன் கணவனாக அமையப்பெற்று கொடிய நாகம் தீண்டி இறந்து விட்டான், அவன் மனைவியாகிய தானும் அவனுடன் தீயில் வீழ்ந்து மாய்ந்து. மணிமேகலை என்ற பெயருடன் காவிரி பூம்பட்டிணத்தில் பிறந்திருக்கிறோம் என்றால், இராகுலனும் மறுபிறவி எடுத்திருக்க வேண்டுமே, அவன் யாராக இருக்கும் என்ற ஐயம் அவளுக்கு எழுந்தது.
View More பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10Tag: மணிமேகலை
மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]
புத்தபிரானுக்கு என்று வடிவமைக்கப்பட்ட பத்மபீடிகை அது. மரங்கள் அதன்மீது மணமில்லாத மலர்களைச் சொரிவதில்லை. பறவைகள் அதன்மேல் அமர்ந்து சப்தம் எழுப்பவோ, எச்சமிடவோ செய்யவில்லை. தேவர் தலைவன் இந்திரனால் புத்தபெருமானுக்கென்று சிறப்புடன் செய்துகொடுக்கப்பட்ட பீடிகை அது. அதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், அதனைக் காண்பவர்களுக்குத் தங்களது முந்தையப் பிறப்புகளை நினைவுபடுத்தும் தன்மையேயாகும்.
View More மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]
எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர்.
View More துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]
எரிப்பவர்களும்,கொண்டுவந்து கிடத்துபவர்களும், குழிபறித்து அதில் இறந்த உடல்களை இடுவோரும், பள்ளத்தில் உடலைப் போடுபவர்களும், முதுமக்கள் தாழியில் போட்டுப் புதைக்க வருபவர்களும் இரவு-பகல் என்று பாராமல் வந்துபோய்க்கொண்டிருப்பதால் பலத்த ஓசை உடைய இடமாக அது இருந்தது… “இறந்த பிறகு உடலைப் பிரியும் உயிரானது, இப்பிறவியில்செய்த நன்மை-தீமைகளுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கும் என்பதை அறிந்தவள்தானே நீ? பின் எதற்குக் கலங்குகிறாய்? உயிர் உடலைவிட்டு நீங்கியபின், அதனை மீட்டுத்தரும் ஆற்றல்கொண்டவளல்ல நான். தெரிந்துகொள்…”
View More சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]
கணிகையர் இல்லங்களில் பிறந்த பெண்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒருவழி பாட்டி சித்திராபதி கூறுவதுபோல சகல கலைகளையும் கற்றுக்கொண்டு பேர்பெற்ற கணிகையாக ஆடம்பரவாழ்வு வாழலாம், அல்லது அம்மாவைப்போல இளம்வயதில் துறவு மேற்கொண்டு புத்தபிக்குணியாக சமயவிற்பன்னர்களுடன் ஊர் ஊராக மதம்பரப்பச் செல்லலாம். இரண்டுமே ஒரு பெண்ணிற்கு இரண்டு உச்சங்களைத்தொடும் வாழ்க்கை. இதற்கு இடையில் ஒரு வாழ்க்கை உள்ளது. உரியபருவத்தில் காதல்மணவாளன் ஒருவனைக் கைப்பிடித்து, வேதியர் வேள்விவளர்த்து, தீவலம்வந்து, இல்லறம்தொடங்கும் வாழ்க்கையே அது.
View More மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]
வேந்தன்முன்பு ஆடப்படும் வேத்தியல் கூத்தும், பொதுமக்கள்முன்பு ஆடும் பொதுக்கூத்தும் நன்குகற்றவள் நீ. இசையும், எழுவகைத் தூக்குகளும், தாளக்கட்டும், யாழ்வகைகளும், அவற்றின் பண்வகைகளும் கற்றுத் தேர்ந்தவள் நீ. பல மொழிகளில் பாடல்வகைகள் அறிந்தவள் நீ. மத்தளமும், வேய்ங்குழலும் கற்றவள் நீ. பள்ளியறையில் என்னவிதமான அலங்காரம் செய்துகொள்ளவேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் நீ. ஒழுங்கமைவுடன்கூடிய பருவமாற்றங்களை உடையவள். உடலின் பல்வேறு உறுப்புகளால் செய்யும் அறுபத்துநான்கு கரணங்களை அழகாக அபிநயம்பிடிக்கத்தெரிந்தவள் நீ. மற்றவர் மனதில் இருப்பதை அறிந்து இதமான வார்த்தைகளைப் பேசத்தெரிந்தவள் நீ. மற்றவர்முன்பு தோன்றாமல் இருக்கத் தெரிந்தவள் நீ. ஓவியம்தீட்டுவதில் வல்லவள் நீ. மாலைதொடுக்கத்தெரிந்தவள் நீ. ஒவ்வொரு பொழுதிற்கும் ஏற்ப அழகாக அலங்காரம்செய்துகொள்பவள் நீ…
View More ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]விழா அறை காதை (மணிமேகலை – 2)
முன்னொருகாலத்தில் கொடிகள் அசையும் தேர்ப்படையை உடைய சோழர்குல மன்னர் ஒருவரின் துன்பத்தைத் தீர்த்தது, நாளங்காடிப்பூதம் என்னும் பூதம். அந்த நாளங்காடிப்பூதம் இந்திராவிழா எடுத்து, அந்த இந்திரனை வணங்காத மக்களைத் தனது கோபத்தால் சிவந்த வாயினில், கோரமாக விளங்கும் பற்களினால் துன்பம் விளைவிக்கும். அதேபோல சதுக்கப்பூதம் என்றொரு பூதமும் இந்த நகரில் உள்ளது. அந்தச் சதுக்கப்பூதம் கையிலுள்ள பாசக்கயிற்றினை வீசி இந்தப் பழமைவாய்ந்த புகார்நகரில் பாவம்செய்பவர்களைப் பிடித்து உண்ணும்.
View More விழா அறை காதை (மணிமேகலை – 2)பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)
ஏன் மணிமேகலை என்ற கேள்வி எழலாம். மணிமேகலை ஒன்றுதான் அது வாழ்ந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்த காவியம். குறிப்பாகப் பெண்களின் நிலையையும், பெண்களை வெறும் உடலாகவே பார்க்கும் ஆடவர்களின் தன்மையையும் அறச்சீற்றத்தோடு எடுத்துச் சொல்கிறது. இது புத்த மதத்தின் சிறப்பைச் சொல்லவந்த காவியம்.. பண்டித மொழியிலும் இல்லாமல், கொச்சையாகவும் இல்லாமல் –ஆங்கிலத்தில் readability என்பார்கள்-அப்படியொரு வாசிப்புத் தன்மையான நடையில் மணிமேகலையை எழுதலாம் என்று இருக்கிறேன். கதைப் போக்கில் தடங்கல் இருக்காது எனினும் சில மௌன இடைவெளிகளில் என்னுடைய கருத்துக்களைச் சேர்த்து கதை சொல்லப்போகிறேன்… அகத்தியர் என்ற முனிவரின் மேற்பார்வையில் காவிரி தமிழ் நிலத்தில் பாயும் செய்தி சொல்லப்படுகிறது. சம்பாபதி என்ற பெண்தெய்வம் காவிரியைவிட வயதில் மூத்தவள் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பாபதி என்ற தெய்வம் மேருமலையை விடுத்து தென்திசைப் புலம் பெயர்ந்த குறிப்பும் உள்ளது. இதன் காரணமோ, பின்னணியோ கூறப்படவில்லை…..
View More பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)மணிமேகலையின் ஜாவா – 2
கண்ணைக் கூச வைக்கும்படி வெள்ளைப்பாறைகளிலிருந்தும், வெள்ளை மணற்படுகையிலிருந்தும் சேர்ந்து ஒளிரும் வெளிச்சம். அதனுடன் வெண்புகைபோல் வருடிப்போகும் மஞ்சுப்பொதிகள் தரும் மயக்கம். உண்மையில் அதுதான் தண்மைமிகு தவளமால்வரை….. இன்றும் ஒட்டுமொத்த ஜாவானியரும் வணங்கியிருக்கும் இந்தோநேசியாவின் காவல் தெய்வம் இந்த மணிமேகலா தெய்வமே. அவள் பெயர் ராத்து கிடுல் (Ratu Kidul). அவளே திரை இரும் பௌவத்துத் தெய்வமமான கடலரசி! ஜாவாவின் மேற்கு முனையிலிருந்து பாலியின் கிழக்கு முனைவரை அவளை வழிபடாத இடங்களே இல்லை. இன்றும் இந்தோநேசிய அரசகுடும்பத்தினர் அனுதினமும் அவளுக்குப் படையல் வைத்து வணங்காமல் எந்த வேலையும் தொடங்க மாட்டார்கள்…
View More மணிமேகலையின் ஜாவா – 2மணிமேகலையின் ஜாவா – 1
மணிமேகலை காப்பியத்தில் ஒரு முக்கியமான கட்டம் சாவகம் எனும் ஜாவாவில் நிகழ்கிறது. நாகபுரத்தின் அருகே சோலை ஒன்றில் வந்திறங்கி அங்கே தருமசாவகன் என்ற முனிவருடன் மணிமேகலை தங்கியிருக்க அங்கு வந்து அவளைச் சந்திக்கிறான் ஆபுத்திரன்… சாவகத்தீவில் வரும் முக்கியப்பாத்திரங்களைப் பற்றிய பெயர் முதலான குறிப்புகளோ, இடங்களோ நிச்சயம் ஜாவாவின் மேற்குப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, தேடலைத் தொடங்கினேன். நான் அங்கேயே மேற்குஜாவாவில் வசிக்க நேர்ந்ததும் என் நல்லூழ்…ஆபுத்ரா என்ற பெயரை மேற்குஜாவாவின் சுந்தானிய இன (Sundanese) மக்கள் அவன் கதையை மறந்து விட்டாலும் இன்றும் பரவலாய் வைத்துக் கொள்கின்றனர்…
View More மணிமேகலையின் ஜாவா – 1