அடிப்படையில் இது ஒரு புராண மீட்டுருவாக்கக் கதை. இதை வைத்துக் கொண்டு ஒரு அழகான, கவித்துவமான, தத்துவமும் அங்கதமும் சுய விமர்சன நோக்கும் சுவாரஸ்யமும் இழையோடும் ஒரு இலக்கியத் தரமுள்ள ஒரு புதுமையான *நவீன* சிறுகதையை புதுமைப் பித்தன் எழுதியிருக்கிறார்… கட்டுடைப்பு” என்ற வகையில் கதையின் போக்கில் இரண்டு சிறிய மாற்றங்களை மட்டுமே செய்திருக்கிறார்… எது அந்த பொற்பிரம்பு? இயற்கையா? விதியா? பிரபஞ்ச லீலையின் ஒரு சாயலா? அல்லது இவற்றை எல்லாம் கட்டி வைத்து விளையாடும் ஒரு இலக்கிய கர்த்தாவின் எழுதுகோலா? அவனது எழுத்தே தானா அந்தப் பொற்பிரம்பு? …
View More புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…Tag: மதுரை
ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?
2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?
View More ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்
மக்களின் நம்பிக்கை, வழிபாடு, சமயம் சார்ந்த செயல்பாடுகள் இவற்றில் வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் ஒரு மடத்துக்கு எந்த குற்றச்சாட்டோ அல்லது குறைபாடுகளோ இல்லாத நபர் தலைமை ஏற்பதுதான் பொருத்தமாக இருக்கும்… சிவ தீட்சை பெற்ற சிலர் அவர்கள் ஆதீன கோயில்களில் கட்டளைத் தம்பிரான்களாகப் பல காலம் பணியாற்றித் தங்களை பக்குவப் படுத்திக் கொண்டு அவர்களில் தகுதி அடிப்படையில் அந்த ஆதீனத் தலைமை பண்டாரமாக நியமிக்கப் பெறுகின்றனர், முதிய வயதில் கூட அந்தத் தலைமை கிடைக்காமல் போனவர்களும் உண்டு… பல சடங்குகள் இருக்க திடீர் சாம்பார் போல திடீர் மடாதிபதியாக ஆவது எப்படி என்பது புரியாத புதிராக இருக்கிறது…
View More மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)
திருவிழாவின் போது நடுத்தெருவில் பொங்கல் வைத்ததாக குற்றம் சாட்டப் பட்டு 1000 பெண்களை திருவனந்தபுரம் காவல்துறை கைது செய்து தடை உத்தரவை மீறியதற்காக வழக்கும் பதிவு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது… சிந்த் மாகாணத்தில் சிறுமிகள், திருமணமான பெண்கள் உட்பட 25-30 இந்துப் பெண்கள் ஒவ்வொரு மாதமும் கடத்தப் பட்டு மதமாற்றப் படுகிறார்கள்… மதுரை மீனாட்சி கோயிலைச் சுற்றி சட்டத்தை மீறிக் கட்டப்பட்டுள்ள 770 கட்டடங்கள் குறித்து இன்னும் 60 நாட்களுக்குள் நடவடிக்கை… உபனிஷத ஞானச் செல்வத்தினை வாராவாரம் தொலைக்காட்சித் தொடர் வடிவில் வழங்கும் ஒரு சீரிய முயற்சி “உபநிஷத் கங்கா”…
View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு
காலக்கிரமமான சில சம்பவங்களை காலம், இடம், பேச்சு வழக்கு, வாழ்க்கை முறைகள், கள்ளர்களின் கலாசாரங்கள், உணர்ச்சி கொப்பளிக்கும் சித்திரங்கள் போன்ற எதைப் பற்றியும் எந்த பிரக்ஞையுமின்றி, சிறிது கூடக் கவலைப்படாமல் படு செயற்கையான சொதப்பலான ஒரு சினிமாவாக மாற்றியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்… இப்படி, படம் முழுவதும் இவை போன்ற எண்ணற்ற பொருத்தமில்லாத, இயல்பில்லாத, செயற்கையான, அபத்தமான, செறிவற்ற, சொதப்பலான, ஆழமற்ற காட்சிகளாலும் வசனங்களினாலும் நடிப்பினாலும் நிரம்பி வழிகின்றன.
View More அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்குஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)
இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, “விஞ்ஞானம் – ஆன்மிகம் – சமூக சேவை’ கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்…
View More இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)அஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மி
தன் சிறு வயது முதல் தெய்வீக இசை பாடியும், சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும்…
View More அஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மிஅத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்
கண்டு பிடிக்கப்பட்ட பைப் குண்டு 6 அடி நீளமுள்ளதும், அதனுள் 7 கிலோ டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் [..] இந்த வெடி குண்டை கண்டு பிடித்தது காவல் துறையினர் கிடையாது [..] அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழி இஸ்லாமியர்களின் பயங்கரவாத சம்பவங்கள் நடந்த பகுதி என்பதை காவல் துறை கவனிக்கவில்லை [..] முக்கிய பிரமுகருக்கான பயண பாதுகாப்பு திட்டத்திலேயே மதுரை மாவட்ட காவல்துறையினரும், உளவுத்துறையினரும் அலட்சியம் காட்டி இருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என ஐ.பி அதிகாரியிடம் விசாரித்த போது அவர் கொடுத்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. தொடர்ச்சியாக அத்வானியின் உயிருக்கு ஆபத்து என்பதும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா, சிமி , இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளால் எந்த நேரமும் ஆபத்து நிகழலாம் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.
View More அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2
“திடீர்னு ஒரு வயசான பெரியவரு பண்டாரம் மாதிரி வந்து எதிர நிப்பாரு………டேய் அப்பா………சாப்பிட்டு நாலு நாளாவுது ஏதாச்சும் சாப்பிட வெச்சிருக்கியான்னு கேப்பாரு………இந்த ஆள இதுக்கு முன்னாடி இந்த மலைல பாத்ததில்லயே………என்ன ஏதுன்னு விசாரிச்சா சரியா பதில் சொல்ல மாட்டாரு………சரின்னு சாப்பிட ஏதாச்சும் கொடுத்தா.……கைல வச்சு சாப்டுக்கிட்டே அப்டியே நாலு அடி நடந்து பொகையா மறஞ்சுடுவாரு………இங்க இருக்கற நாய் மட்டும் கத்தி ஊளையிடும்………அந்த மாதிரி விதவிதமா சித்தருங்க நடமாடிட்டே இருப்பாங்க………” அவர் சொல்லச்சொல்ல சிலிர்ப்போடு கேட்டுக்கொண்டே இருந்தேன்..[..]
View More சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1
இந்த மலைக்கு செல்ல மதுரைக்கு அருகேயிருக்கும் வத்திராயிருப்பில் இருந்து ஏறக்குறைய நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள மலையின் அடிவாரப்பகுதியான தாணிப்பாறையிலிருந்து போவதுதான் கடினம் குறைந்த பாதை [..] சதுரகிரியில் இருந்து அருள்பாலிக்கும் சுந்தரலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் ஆகிய லிங்கத்திருமேனியனை தரிசிக்க அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் குறைந்தது 10000 முதல் 70000 பக்தர்கள் வரை இந்த மலைக்கு வருகிறார்கள் [..]
View More சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1