அண்மையில் எம்.டி. முத்துகுமார சுவாமி எனும் தமிழக அறிவுஜீவி இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக் குழுக்களை தன் மனிதர்களாகவே கருதவில்லை; அவை தீண்டாமை குறித்துப் பேசின என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு சான்றாக, மகாபாரதத்தில் உள்ள அரக்கு மாளிகை சம்பவம், காண்டவ வன அழிப்பு, கடோத்கசன் மரணம் ஆகிய சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தார். .. இதனை மறுத்து, உண்மையில் இச்சம்பவங்கள் வியாச பாரதத்தில் சித்தரிக்கப் பட்டுள்ள விதம் என்ன, இவற்றில் உள்ள மானுடவியல், சமூக வரலாற்று பார்வைகள் என்ன என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதற்காகவே இந்த எதிர்வினை…
View More தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1Tag: மானுடவியல்
நம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்
கடவுளை நீங்கள் உணரத் தான் முடியும், அனுபவிக்கத் தான் முடியும். *நம்ப* முடியாது, நம்பவும் கூடாது… எரிச்சலும் பொறாமையும் கொண்ட தேவன்களின் பிள்ளைகளாக இருப்பதைக் காட்டிலும், சிம்பன்சிகளின் பரிமாணப் பங்காளிகளாகவும், கொரில்லாக்களின் தாயாதிகளாகவும் இருப்பது.. ஒரு மூன்று பக்கக் கட்டுரைக்குக் கூட அவர் அமைக்கும் பரந்துபட்ட களமும், தரும் உழைப்பும் சாதாரணமானவை அல்ல. இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருமே அதனை மனப்பூர்வமாக உணரமுடியும்…
View More நம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்
விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….
View More வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்