மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…

View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்

“வேதம் புதுமை செய்” என்று தான் எழுதியதைத் தாமே செய்தும் காட்டியிருக்கிறார் பாரதியார் என்பது ஆசிரியரின் கருத்து. ஶ்ரீ அரவிந்தரின் “யோகரகசிய ஞானமொழி” என்பதை பாரதியார் நன்கு உள்வாங்கித் தனது வீரியமிக்க மொழியில் பலவாறு வெளிப்படுத்துகிறார்.. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வரிகளே பாரதி உண்மையில் எழுதியவை, அவரது இதயத்தைப் பிரதிபலிப்பவை. இதனை “சாதி பெருமையில்லை பாப்பா” என்று திருத்த முயன்ற திரிபு முயற்சிகளை ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக மறுதலிக்கிறார் ஆசிரியர்.. இதுவரை யாரும் தொடாத, வெளிச்சம் பாய்ச்சாத பாரதியின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொண்டு வருகிறது என்பதால் மிகவும் முக்கியமான நூலாகிறது…

View More வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்

வைதிக மாமணி அப்பர்

அந்தியில் சூரியதேவனை உபாசிக்கின்றனர். அந்த சூரியனும் சிவஸ்வரூபம் அன்றோ? என்கிறார் அப்பர். இக்கருத்து எங்கிருந்து வருகிறது? நேரடியாக வேதத்திலிருந்து தான். “கரிய கழுத்துடைய நீலக்கிரீவராகிய அவரே சிவந்த வர்ணமுடைய இந்த சூரியனாக வெளிக்கிளம்புகிறார். (சூரிய ரூபியாகிய) இவரை இடையர்களும் கூடக் காண்கின்றனர். தண்ணீர் சுமந்து வரும் பெண்களும் காண்கின்றனர். இந்த ருத்திரனை மற்றும் எல்லாப் பிராணிகளும் கூடக் காண்கின்றன” என்கிறது ஸ்ரீருத்ரம்…

View More வைதிக மாமணி அப்பர்

ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்

ரிக்வேதத்தில் அறம் என்னும் சொல் 35 இடங்களில் கீழ்க்கண்டவாறு வருகிறது. இச்சொல்லின் முக்கிய பொருள் – போதும் என்ற நிலை, த்ருப்தி, நிறைந்த நிலை. ரிக்வேத சொல்லை அரம் என்று கூறாமல் வேண்டுமென்றே அறம் என்று கூறக் காரணம் என்ன? என்று கேட்கலாம். புறம் என்னும் சொல்லிற்கு சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஊர், மதில், உடல் என்றெல்லாம் பொருள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறன் என்ற சொல்லும் இவ்வாறே… அறம், ருதம் இரண்டு சொற்களும் ‘ரு’ என்னும் தாதுவில் (வேர்) இருந்து வருகின்றன. ருதம் என்றால் உண்மை, இயற்கையின் நியதி என்று பொருள்.. ஆரியன் என்னும் சொல்லுக்கும் இதே வேர் தான்.. தமிழில் உள்ள “அறம்” எனும் சொல், இந்த ரிக் வேத சொல் “அறம்” என்பதுடன் தொடர்புடையதா?..

View More ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்

வேதம் தமிழ் செய்த மேலோன்: ம.ரா.ஜம்புநாதன்

ஜம்புநாதன் செய்த பணியில் மகத்தானது, நான்கு வேதங்களையும் தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டதாகும். வேதம் எல்லோருக்கும் பொதுவானது. அவை தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என அவர் விரும்பினார்.. மும்பை, அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. ஆரிய சமாஜத்தில் ஆர்வம் பிறந்தது. சாலையோரச் சிறுவர்கள் படும் கஷ்டங்களையும், அங்கு வசிக்கும் தமிழர்கள் படும் அவலங்களையும் கண்டு ஜம்புநாதன் மிகவும் மனம் வருந்தி 1924ல் தாராவியில் ஒரு பள்ளியை அவர்களுக்காக ஏற்படுத்தினார்…

View More வேதம் தமிழ் செய்த மேலோன்: ம.ரா.ஜம்புநாதன்

ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்து

டாக்டர் கோயன்ராட் எல்ஸ்ட் மிகவும் ஆபத்தான அறிஞர். இடதுசாரிகள் அவர்மீது வன்மத்தைப் பொழிகின்றர் எனில், சில இந்து ஆசாரவாதிகளுக்கும், சமூகவளைதளக் காவிகளுக்கும் கூட அவரை ஒப்புகொள்வதில் சங்கடம் உள்ளது இந்த சலசலப்புகளைத் தாண்டி, அவரது வரலாற்று நூல்கள் காலத்தை வென்று நிற்கும்.. மனுஸ்ம்ரிதி ஒரு “ஜாதிய அறிக்கை” கிடையாது. மனுவின் பார்வை மிகவும் விரிவானது, அதே சமயம் முரண்கள் நிறைந்தது. வர்ணக்கலப்பு விஷயத்தில் அறநெறிப் பார்வையும் உள்ளது.. குதிரையின் இருப்பு ஹரப்பா நாகரீகத்தில் இன்று தொல்லியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைவைத்து இந்துத்துவ சார்புள்ள வரலாற்று அறிஞர்கள் மீது மோசமான, கீழ்த்தரமான அவமதிப்புகள் நிகழ்ந்தன… வள்ளுவர்கள் பிராமணர்கள் போலவே கோவிலில் பணியாற்றினார்கள் என்று தெரிகிறது..

View More ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்து

புதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி

மரபணுவியலை வைத்து, கலாசார நகர்வைத் தீர்மானிப்பது எடுத்த எடுப்பிலேயே பிழையான முயற்சி… ரிக்வேதம்தான் மிகப்பழைய இந்தோ-ஆரிய நூல். ஹரப்பாவின் மொழி இந்தோ-ஆரிய மொழி கிடையாது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அதைவிட, அது திராவிட மொழி என்பதற்கு (அப்படி யாரேனும் சொல்லத் துணிந்தால்) அடிப்படைச் சான்றுகூடக் கிடையாது… “இந்தியாவில் இருந்து வெளியே சென்ற மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி, கலாசார ஒற்றுமைக்குக் காரணமாக இருக்கலாம்” என்பதுதான் “இந்தியாவிலிருந்து வெளிப்போதல்” கொள்கை (OIT). ஆனால், பல ஐரோப்பிய, அமேரிக்க இந்தியவிலாளர்கள் படையெடுப்புக் கொள்கையை கைவிடத் தயாராக இல்லை…

View More புதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10

இயக்கம் என்றாலே வெளிப்படுவது, அல்லது சக்தியின் தொழில் என்றாகிவிடுகிறது. அதனால் சக்தியிடம் சரண் புகுவதே சரியான வழி. சரணடைந்ததால் சக்தி போல் ஆகி ‘சித்’தாகிய இறைவனை அடைந்து, பேரின்பப் பெருவெள்ளமாகிய ஆனந்தத்தை அறிவுடன் இருக்கும் நிலையில் உணரலாம்… அருள் தரும் பராசக்தி ஒன்றே என்றாலும் காணப்படும் இயற்கைத் தோற்றங்களை ஒட்டி, பெண் தெய்வங்களையும் அந்த முனிவர்கள் கண்டார்கள். தன்னை அறிவதே அறியப்படும் அனைத்திலும் முதன்மையானது என்பதால் அறிவை வழங்கும் பரம்பொருளாகச் சரஸ்வதியைக் கருதினார்கள்…

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9

“மனமற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் சுபாவமான அச்சுகம்” என்று ரமணர் குறிப்பிடுவது சோமனின் துளிகள் பெருகி வெள்ளமாக நம்முள் ஓடும் அந்த நிலையைத் தான். தினந்தோறும் அது நம்முள் ஓடுவதை நாம் அறியாவிட்டாலும், அதை நன்கு அனுபவித்துக்கொண்டு சுகமாக உறங்கிக்கொண்டிருக்கிறோம். அதை ஏன் அப்போது மட்டுமே நாம் அனுபவிக்கிறோம் என்றால், அந்த நிலையில் மட்டுமே நாம் மனம் அற்று இருக்கிறோம். அதாவது எந்த விதமான எண்ணங்களின் குறுக்கீடுகளும் இல்லாமல், இருப்பதை அது இருக்கும்விதமாக மட்டுமே அனுபவித்து, ஆனந்தமாகத் தூங்குகிறோம். அப்போது ‘நான்’ என்றோ ‘எனது’ என்றோ எண்ண வைக்கும் அகங்காரம் நமக்கில்லை. அதனால் ‘பிறர்’ என்ற வேறுபாடும் கிடையாது. அந்த நிலையில், இருக்கும் பிரம்மமான ஒன்றை உள்ளூற உணர்வதால், சோம வெள்ளம் பிரவாகமாக ஓடி நம்மை ஆனந்த நிலையில் அப்போதைக்கு நிறுத்திவைக்கிறது….

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8

ஞானக் கண்ணால் மட்டுமே உணரக் கூடிய ஞானச் சூரியன், மற்றும் ஊனக் கண்ணால் காணக் கூடிய ஊனச் சூரியன் இரண்டையும், அவைகளின் தன்மைகளைக்கொண்டு, சூரியனின் இருவேறு முகங்களாக ரிக் வேதம் வர்ணிக்கிறது. ஊனச் சூரியன் உதிப்பதால் உலகின் பல வளங்கள் செழிப்பதற்குக் காரணமாய் இருப்பதாலும், அது இன்னார்க்குத்தான் என்றில்லாமல் எவர்க்குமே தன் சக்தியை அளிப்பதாலும், அதை அனைவரின் ஆப்த நண்பனாக உருவகித்து மித்ரன் என்றழைத்தனர். ஞான சூரியன் உதிக்கும்போது, அது அனைவர்க்கும் பரம ஆனந்தத்தை அளிப்பதுடன், ஓர் உயிருடன் வேறு உயிர்களைப் பிரித்துப் பார்க்கும் தன்மையையும் களைந்தெடுத்து, சீவராசிகள் அனைத்தும் பரவலான ஓரினமே என்று காட்டுவதால் அதை வருணன் என்றழைத்தனர்…

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8