அக்பர் நீதிக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷனாக, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாக இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் நெடுக புகழ்கின்றன. ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானது. அக்பரது ஒவ்வொரு செயலும் குரூரமும், மனம் நிறைய துரோக எண்ணங்களும், கொள்ளை, கொலை செய்யத் தயங்காத எண்ணமும் உள்ள, மத அடிப்படைவாதமும், ஹிந்துக்கள் மீது பெரு வெறுப்பும் உள்ள மனிதன் என்பதினை பெரும்பாலோர் அறிந்ததில்லை…அக்பர் திருமணம் செய்ததாகச் சொல்லப்பட்ட அத்தனை பெண்களுமே போர்களில் தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர மற்றும் பிற ஹிந்து அரசர்களிடம் மிரட்டிக் கைப்பற்றிக் கொண்டு சென்ற பெண்கள் மட்டுமே. அக்பரால் தோற்கடிக்கப்படும் நிலையில் அவரிடம் பிடிபட்டு அக்பரின் காம அடிமையாக மாற விரும்பாத சித்தூர் ராணி பத்மினி போன்றவர்கள் நெருப்பில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற வரலாறு நமக்கு உறைப்பதே இல்லை…
View More அக்பர் எனும் கயவன் – 1Tag: வரலாற்றுத் திரித்தல்
வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]
பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது, அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், இரண்டையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?… காளிதாஸர், பவபூதி, கம்பர் இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்… ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன. காலக்கணிப்பின் பாற்பட்டு 200 வருஷங்களுக்கு முற்படாத ஒரு கலவை இது….
View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்
மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது – தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை… அறிவுஜீவிகள் கூறுவதுபோல இந்துத்துவம் என்பது இந்து ஞான மரபுடன் தொடர்பு இல்லாத வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல. இந்துத்துவத்தின் வரலாறு என்பது வீர சாவர்க்கருடன் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பின் இயக்க வரலாறு என்பதாக மட்டும் இல்லை. அதன் தொடக்க வேர்கள் புராதனமானவை. பாரதத்தின் உன்னதங்களைக் கொண்டாடிப் பாதுகாப்பவை. அவற்றைத் தகவமைத்து வளர்த்தெடுப்பவை. அதுபோலவே பாரதத்தின் சீர்கேடுகளுக்கு ‘பார்ப்பனீயம்’ போன்ற பொய்யான எதிரிகளை உருவாக்காமல் பொறுப்பேற்பவை. அந்த சமூக தேக்கநிலைகளிலிருந்து விடுதலையாகும் உத்வேகத்துடன், இந்துத்துவம் அதற்கான தீர்வுகளைப் பாரத மண்ணிலிருந்து உருவாக்குகிறது….
View More கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்
முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். நாலந்தா கொஞ்ச காலத்திற்கு அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே வந்து அதையும் அழித்தார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் தெளிவாக விவரிக்கப்படுகிறது…. ஆனால் “திபெத்திய நூல் ஒன்று நாலந்தா சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுவதாக” மார்க்சிய வரலாற்றாசிரியர் டி.என்.ஜா பதிவு செய்கிறார்…. இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?… மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்… (மூலம்: அருண் ஷோரி, தமிழில்: ராஜசங்கர்)
View More நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்
ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்! என்ற கட்டுரையை தினமணியில் பால.கௌதமன் எழுதினார்.. அதற்கு வந்தது திராவிட இயக்க எதிர்வினை.. ஆயுதங்களில் தேவதை குடியிருப்பதாகக் கருதுவது தமிழர் மரபு. சிலப்பதிகாரம் வேட்டுவவரியில், ’வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்’ என்ற குறிப்பு… மகாநவமி, விஜயதசமி விழா 5-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது…
View More ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்
நான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன… ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம்? மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்… உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள்…
View More சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்
கூத்துகளையும் கேளிக்கைகளையும் அரங்கேற்றி 400 கோடி ரூபாய்கள் செலவழித்துச் செம்மொழி மாநாடு நடத்த முடிகிறது. தமிழக முதல்வர், ராஜராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை (பள்ளிப்படையை) மட்டும் கண்டறிவதற்கு என்ன நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளார்?.. சோழர்கள் தங்களைச் சூரிய குலச் சத்திரியர்கள் என்று சொல்லிகொண்டார்கள். ராமனோடு தங்களுக்கிருந்த பூர்விகத் தொடர்பைப் பறைசாற்றிக் கொண்டார்கள். படையெடுத்து வெற்றி கண்டபோது தங்களை “த்விதிய (இரண்டாவது) ராமன்” என்றே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்…
View More மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்
தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?… பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் – காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? (மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்)
View More செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்கபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை
நம் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் எல்லோருக்கும் தரமான கல்வியை அளிக்க முடியாது என்றாலும் நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளைக் கலைவது மிகவும் அவசியம். முக்கியமாக இக்கட்டுரைக்கு விஷயமான உயர்கல்வியில் நம் நிலை மோசமாகவும் இல்லை. இதற்கான உதாரணமாக நமக்குக் காட்டப்படும் IIT, IIM மற்றும் IISc போன்றவற்றின் நம்பகத்தன்மை. அதே நேரத்தில் CII போன்ற அமைப்புகளின்படி இந்தியாவிற்குத் தேவைப்படும் தகுதியுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதைச் சரிசெய்ய நாம் ஒன்று, புதிய தகுதிவாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்க வேண்டும்.
View More கபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை