அக்பர் எனும் கயவன் – 2

சித்தூர் கோட்டைக்குள் புகும் அக்பர் அங்கிருக்கு அத்தனை பேர்களையும் கொல்ல உத்தரவிடுகிறார். ஏறக்குறைய முப்பதினாயிரம் ஆண், பெண், முதியவர்கள், சிறுவர் சிறுமிகள் எனக் கணக்கில்லாமல் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்படுகிறார்கள். அங்கு இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பூணூல் மட்டுமே ஏறக்குறைய எழுபத்தி நாலரை மாண்ட்கள் (1 maund = 37 kg) இருந்ததாகத் தெரிகிறது… இரண்டு வருடங்களுக்கும் மேலாக அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்து கொண்டிருந்த கான் ஜமானும் அவனது சகோதரனான பகதூரும் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவனுடன் பிடிபட்ட மற்றவர்கள் யானையின் கால்களில் இடறப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்… பிரபல சங்கீத வித்வானான தன்சேன் ராஜா ராம்சந்தின் அரசவைப்பாடகர். அக்பர் ஏராளமான பொக்கிஷங்களுடன் தான்சேனையும் கட்டித் தன்னுடன் இழுத்துச் செல்கிறார். செல்ல விருப்பமில்லாத தான்சேன் கண்ணீர் வடித்து துக்கத்துடன் அக்பருடன் செல்கிறார்…

View More அக்பர் எனும் கயவன் – 2

அக்பர் எனும் கயவன் – 1

அக்பர் நீதிக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷனாக, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாக இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் நெடுக புகழ்கின்றன. ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானது. அக்பரது ஒவ்வொரு செயலும் குரூரமும், மனம் நிறைய துரோக எண்ணங்களும், கொள்ளை, கொலை செய்யத் தயங்காத எண்ணமும் உள்ள, மத அடிப்படைவாதமும், ஹிந்துக்கள் மீது பெரு வெறுப்பும் உள்ள மனிதன் என்பதினை பெரும்பாலோர் அறிந்ததில்லை…அக்பர் திருமணம் செய்ததாகச் சொல்லப்பட்ட அத்தனை பெண்களுமே போர்களில் தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர மற்றும் பிற ஹிந்து அரசர்களிடம் மிரட்டிக் கைப்பற்றிக் கொண்டு சென்ற பெண்கள் மட்டுமே. அக்பரால் தோற்கடிக்கப்படும் நிலையில் அவரிடம் பிடிபட்டு அக்பரின் காம அடிமையாக மாற விரும்பாத சித்தூர் ராணி பத்மினி போன்றவர்கள் நெருப்பில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற வரலாறு நமக்கு உறைப்பதே இல்லை…

View More அக்பர் எனும் கயவன் – 1

மறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்

பிரிட்டிஷாருக்கு முந்தைய பாரதத்தில் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பங்கள், சமூக அமைப்புகள், சமூக ஒழுங்குகள், தத்துவங்கள் என பாரதத்தின் கடந்த காலத்தை மாறுபட்ட கோணத்தில் அலசி ஆராய்கிறது B.R.மகாதேவன் எழுதியுள்ள இந்த நூல். நூலின் முதல் பாதி காந்தியவாதியும் வரலாற்றாய்வாளருமான தரம்பாலின் நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் பாதி இந்திய சாதிய சமூகம் குறித்து இதுவரை பேசப்படாத விஷயங்களை புதிய கோணத்தில் அறிமுகம் செய்துவைக்கிறது….

View More மறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்

இந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கை

உலகெங்கும், வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையான மக்களையும், சமூகங்களையும் நினைவில் நிறுத்த வேண்டும் என்ற அறிவார்ந்த கொள்கை செயல்படுகிறது, ஆனால், இந்தியாவிலோ, (இடதுசாரித் தரப்பின் ஆதிக்கத்தால்), வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையாகி மடிந்தவர்கள், அவர்களது நினைவுகள் மறக்கடிக்கப் படுவதன் மூலமும், சில சமயங்களில் இழிவு செய்யப் படுவதன் மூலமும் இரண்டாவது முறையாக சாகடிக்கப் படும் அவலம் நிகழ்கிறது… மாற்றுக் கருத்து கொண்ட இந்திய வரலாற்றாசிரியர்களை அறிவுபூர்வமாக விமர்சிப்பதற்குப் பதிலாக, இடதுசாரித் தரப்பு அவர்களை தேசியவாதிகள் என்றோ வகுப்புவாதிகள் என்றோ முத்திரை குத்தி நிராகரிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. (காங்கிரசின்) அரசியல் ஆதரவு மூலமாக திணிக்கப் பட்ட கருத்துகளுக்கு ஒத்து ஊத மறுத்ததனால், பல திறமையுள்ள கல்விப்புல அறிஞர்கள் பாதிக்கப் பட்டு, ஒதுக்கி வைக்கப் பட்டனர். நல் வாய்ப்புகளை இழக்குமாறு செய்யப் பட்டனர்…

View More இந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கை

ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்… தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04

இன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன? ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். [..] இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான். [..]

View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03

பக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.[…] “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது?” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.

View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02

கூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்து வீடுகளைக் கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள். ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.

View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01

அப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். முஸ்லிம்களை நம்பும் இந்துக்களுக்கு, குறிப்பாக தலித் தலைவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம்.

View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

1967 தேர்தல் வந்தது. பிடித்தது தமிழ் நாட்டுக்குச் சனியன். இல்லாத பொய், பித்தலாட்டங்கள். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகள். எதிரிகள் மீது வசைமாறி பொழிதல், எதிர்கட்சிக் கூட்டங்களில் வன்முறை, வெறியாட்டம். [….] கருணாநிதி உட்பட சிலர் அடுக்கு மொழியிலும், அலங்காரமாகவும் பேசினாலும், கண்ணியக் குறைவாகப் பேசத் தயங்க மாட்டார்கள்.

View More முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்