ஹரித்வாரில் உள்ள சாந்தி சதன் ஆசிரமத்தில் மூன்று மாதங்களாக உண்ணா நோன்பு இருக்கிறார் அந்த 81 வயது முதிய துறவி சுவாமி ஞான ஸ்வரூப் ஸானந்த். ஒரே விஷயத்திற்காக அவர் அறிவித்திருக்கும் ஐந்தாவது கால வரையற்ற உண்ணா நோன்பு இது… கட்டுப் பாடற்ற, அசுரத் தனமான அணைத்திட்டங்களும் மின் உற்பத்தி நிலையங்களும் கங்கை நதியையும் இந்தப் பிரதேசத்தின் சூழலியலையும் முற்றிலுமாக அழித்து விடும் என்று அவர் கருதுகிறார்… சாது பழமைவாதியும் அல்ல, முன்னேற்றத்திற்கு எதிரியும் அல்ல. பூர்வாசிரமத்தில் ஜி.டி.அகர்வால் என்ற சூழலியல் பொறியாளர் (Environmental Engineer) அவர்… “2010ம் ஆண்டு எங்களது தொடர்ந்த போராட்டத்தால் மூன்று அணைக்கட்டுத் திட்டங்கள் நிறுத்தப் பட்டன. ஆனால் இப்போது அலகநந்தா நதியில் 5 மின் திட்டங்களை மறுபடியும் அறிவித்துள்ளனர். அன்னை கங்கை கட்டற்றுப் பாய்பவள். அவளது பிரவாகத்தை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது” என்கிறார் ஸ்வாமி ஸானந்த்…
View More ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவிTag: சூழலியல்
கரங்கள் [சிறுகதை]
“எந்திரங்களும் மனித தன்னுணர்வும் குறித்த புரிதல் முக்கியமானது” என்றார் பண்டிட். லியோன்ஸ்கி அதை ஆமோதித்ததை பாஸு வெளிப்படையான எரிச்சலுடன் எதிர்கொண்டான். “இதற்கும் ஏதாவது வேத ஸ்லோகம் வைத்திருப்பீர்களே”… அவனது தலையிலும் நெற்றியிலும் இருந்து சென்ஸார்கள். அவற்றுடன் பல மெல்லிய பச்சையும் சிவப்புமான இழைகள் இணைந்திருந்தன. அச்சிறுவனிடமிருந்து செல்லும் சென்ஸார்களின் நீட்சிகளே அந்த இழைகள் என ஊகிக்க முடிந்தது… நல்ல காலம் சோவியத் யூனியன் இப்போது இல்லை. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் பூர்ஷ்வா சதிகளல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் எத்தனை கட்சி கமிசார்களிடம் என்னவெல்லாம்…
View More கரங்கள் [சிறுகதை]திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா
மே-27, 2012 (ஞாயிறு) இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் தலைமையில், மாநில அளவிலான நெல் திருவிழா, கருத்தரங்கம் மற்றுக் கண்காட்சி… பசுமைப் புரட்சியால் பெருமளவு அழிந்து விட்டாலும், சில பாரம்பரிய ரகங்கள் இயற்கை விவசாயிகளாலும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் இன்றும் அழியாமல் பாதுகாப்பப் பட்டு பயிரிடப் பட்டு வருகின்றன…. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 63 வகையான பாரம்பரிய நெல்விதைகள் 3000 உழவர்களுக்கு வழங்கப் பட உள்ளது… அழைப்பிதழ் கீழே, அனைவரும் வருக…
View More திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழாபுதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை
குடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு… நீரை “வீணாக்கும்” விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் டாஸ்மாக் தரகருக்கும் சேல்ஸ்மேனுக்கும் குறைவான வரியும் விதிக்கப்பட வேண்டும் – இது காங்கிரஸ் நியாயம்… ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கு இணையாக, நதிகளைத் தாயாகவும் கடவுளாகவும் வழிபடும் பாரதப் பண்பாட்டில் வந்த நீங்கள் செயல்படலாமா மன் மோகன் சிங் அவர்களே?….
View More புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வைஇந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)
மகேந்திர கிரி மலைத்தொடர்கள் பின்னணியில் கம்பீரமாக ஆசி வழங்க, சீருடை அணிந்த ஸ்வயம்சேவகர்கள் 16,000 பேர் அணிவகுத்து நின்றனர்…. உத்தபுரத்தில் இரு தரப்பினரும் இந்த சாதி மோதல் தொடர்பாக தாங்கள் போட்டிருந்த அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர்…உல்லாச சுற்றுலாத் தலமாக மட்டுமே இந்தியர்களால் கருதப் பட்டு வந்த இந்த சின்ன தீவில் இஸ்லாமிய மதவெறி வளர்ந்து மிக மோசமான பரிணாமத்தை எட்டியுள்ளது… பள்ளி ஆண்டு விழாவில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் இந்து கடவுளர்களை திட்டமிட்டு இழிவுபடுத்தி நாடகம் போட்டார்களாம்…
View More இந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்
நான் இதுகாறும் பார்த்திராத வெகு சின்ன குருவி, மிக அழகான குருவி, நீலமும், கரும்பச்சையுமாக சூரிய ஒளி படுவதும், அது அமர்ந்திருக்கும் திசையும் பொருத்து அது நிறம் மாறி மாறி மின்னும் சிறகுகளோடு… இச் சின்ன சின்ன பறவைகளை குழந்தைகளாக, அழகு கொழிக்கும் ஜீவ சிற்பங்களாக, கவிதைகளாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்… கொண்டலாத்தி புத்தகத்தின் பின் இத்தனை சமாசாரங்கள் இருந்திருக்கின்றன. நம் கைகளில் இருப்பது புகைப்படம் எடுக்கப்பட்ட கவிதைகளும், ஆசை எழுதிய கவிதைகளும்…. வானத்தை வானத்தைக் கலைத்துப் பறக்கும் கொக்குக் கூட்டம்… அவை கடக்கும் போதெல்லாம்…
View More பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு
விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “பசுமை விவசாய தொழில்நுட்பங்கள்” என்ற இந்த நூல் நம்…
View More பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடுகாவேரியைக் காக்க ஒரு யாத்திரை
காவிரியின் புனிதம் காக்க மக்கள் விழிப்புணர்வு யாத்திரை… குடகு மலைச் சாரலில் தலைக்காவேரியில் அக்டோபர் 23ம் நாள் தொடங்கிய இந்த யாத்திரை நவம்பர்-11 அன்று காவிரி கடலில் கலக்குமிடமான பூம்புகாரைச் சென்றடையும். யாத்திரையில் பற்பல துறவியர்கள் & மடாதிபதிகள் கலந்து கொண்டு காவேரித் தாய்க்கு பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகிறார்கள்…விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பஜனைகள்…
View More காவேரியைக் காக்க ஒரு யாத்திரைஒரு நதியின் நசிவு
மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும்…. வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி…
View More ஒரு நதியின் நசிவுஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு
சங்கம் தமிழ்நாட்டின் தலித்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சங்க ஷாகாக்கள் தோன்றிய பிறகு தீண்டாமை மறைந்து விட்ட பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன… அவர்கள் எல்லோரும் பாபரின் வழித்தோன்றல்களோ, டேவிட்டின் சந்ததிகளோ அல்ல. அவர்கள் ராமரின், கிருஷ்ணரின், பரதனின் சந்ததிகள்தாம்… சக்தி உடையவர்களின் குரல்தான் மதிக்கப்படும். என்னதான் உயர்ந்த தத்துவம் இருந்தாலும் நடைமுறையில் அதன் விளைவுகள் தெரிந்தால்தான் உலகம் அதனை ஏற்கும்…
View More ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு