கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்…
View More இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1Tag: தமிழர்
ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்
ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்! என்ற கட்டுரையை தினமணியில் பால.கௌதமன் எழுதினார்.. அதற்கு வந்தது திராவிட இயக்க எதிர்வினை.. ஆயுதங்களில் தேவதை குடியிருப்பதாகக் கருதுவது தமிழர் மரபு. சிலப்பதிகாரம் வேட்டுவவரியில், ’வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்’ என்ற குறிப்பு… மகாநவமி, விஜயதசமி விழா 5-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது…
View More ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!
அமெரிக்க தூதரக அதிகாரி தமிழர்களை ‘கருப்பு அழுக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்…பிரான்ஸிஸ் சேவியர் ’ஹிந்துக்கள் அவர்கள் வணங்கும் சிலைகளே போலவே கருப்பு’ என்கிறார். கூடவே இந்த இனமே மோசம், நாணயமானவர்கள் கிடையாது என்கிறார்… மேற்கத்திய இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாத போலி பகுத்தறிவு…
View More கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி
நான்முகன் தீர்த்தத்தால் திருமாலின் பாதத்தைக் கழுவ, அதில் சில நீர்த்துளிகள் அவன் சிலம்பிற் பட்டு தெறித்ததால் ஏற்பட்ட நீரோடையே அது என்ற நம்பிக்கை உள்ளது. ஆகையால் “சிலம்பாறு” என்ற பெயர் ஏற்பட்டது. மதுரை மாநகரத்திற்குக் “கூடல்” என்ற பெயர் ஏற்பட்ட காரணம் என்ன? ..சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும் தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது.. சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது…
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணிதமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி
ஊழல் உறுத்து வந்து ஊட்டும்; அரசியல் பிழைத்தோர்க்கு தேர்தல் கூற்றாகும்…ஜாதி அரசியலால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு கண்ட பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச்… நல்ல பாடம் கற்றிருக்கின்றன… இதன்மூலம், ஊழல் ஒரு பொருட்டல்ல என்று விதண்டாவாதம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முகத்திலும் கரியைப் பூசி இருக்கிறார்கள், விழிப்புணர்வுள்ள மக்கள்… நாட்டு மக்களை பொய்யான கருத்துக் கணிப்புகளால் குழப்பிவிட முடியாது என்பதும் இத்தேர்தலில் நிரூபணம் ஆகியிருக்கிறது.
View More தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடிதாண்டவம் [சிறுகதை]
அவரது கலை ஆளுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், விரல்களை மடக்கிக் காட்டும் பேருண்டப் பட்சி முத்திரைதான் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும்… பரதநாட்டியத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது… கோபமும், பீபத்சமும், சிருங்காரமும் எல்லாம் ஒருவித கலாபூர்வமான அழகியல் வெளிப்பாடாக இருக்கவேண்டுமே தவிர அப்பட்டமாக இருக்கக் கூடாது என்பது நாங்கள் படித்து உள்வாங்கியிருந்த பரதக் கலை கோட்பாடு… தி மடோன்னா முத்ரா… தி ரைஸன் கிரைஸ்ட் அபிநயா… தி சர்ச் முத்ரா…
View More தாண்டவம் [சிறுகதை]இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்
இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் தங்களின் ஒற்றுமை காரணமாக மதத் தலைமையின் வேண்டுகோளை ஏற்று வாக்களிக்கின்றனர்… இந்துக்கள் அரசியல் அநாதைகள் ஆகி விடாமல் தடுத்திட, இந்து சமுதாய நலன் காத்திட– இந்து சமய குருநாதர்களின் திருவடிகளை வணங்கி அவர்களின் நல்லாசிகளுடன் துவக்கப்பட்டுள்ள ‘இந்து ஓட்டு வங்கி’க்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தரும்படி… அந்த ஓட்டைக் கையில் வைத்துள்ள நாம் தேச பக்தியோடும் தெய்வ பக்தியோடும் இந்து ஓட்டு வங்கியில் பதிவுசெய்து நாட்டு நலன் காத்திடுவோம்.
View More இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]
பூமணி போல, சோ.தருமன் போல இமையமுமல்லவா, ‘தலித் பட்டைகளெல்லாம் எனக்குத் தேவை இல்லை. நான் தலித் எழுத்தாளர் இல்லை’ என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார் என்று அவர்களுக்குக் கோபம்… இரத்தின.கரிகாலனின் கவிதைகள் ஏதோ சர்ச்சில் மன்னிப்புக்கோரும் சடங்காக மண்டியிட்டு, இதுகாறும் தானும் தன் முன்னோர்களும் தலித்து மக்களுக்கு இழைத்து விட்ட பாவங்களையெல்லாம் மன்னித்து பாப விமோசனம் கேட்கும் பாவனை கொண்டவையாக இருக்கின்றன… பூமணியைப் போலவே சோ.தருமனும் தலித் லேபிளை எவ்விதத் தயக்கமுமின்றி மறுப்பவர். மறுபடியும் பூமணிக்குச் சொன்னது போலவே சோ.தருமனும் எவ்விதத்திலும் ஒதுக்கி விடக் கூடியவரும் இல்லை…
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]
இப்புராணத்தில் பேசப்பெறும் அநேகமான அடியவர்கள், இல்லறத்தினரே என்பதால் பரவலாக எல்லா நிலைகளிலும் பெரியபுராணத்தில் காதல், திருமணம், திருமணவாழ்வு முதலியன பேசப்பட்டிருக்கிறது… மனுநீதிகண்ட சோழனின் வரலாற்றைப் பேசும் போது நீதிமுறைமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என்று சேக்கிழார் புதுமை காட்டுகிறார்… இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.
View More பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1
காமச்சுவை நிறைந்துள்ள சீவக சிந்தாமணி என்ற ஒரு சமணகாவியத்தில் நாட்டரசன் மூழ்கியிருப்பதை விரும்பாத சேக்கிழார், மந்திரிக்கான உரிமையுடனும் நட்புரிமையுடனும் உரிய வேளையில் தட்டிக்கேட்டு திருத்தவேண்டிய நிலைக்கு ஆளானார்…. ஞானசம்பந்தப் பெருமானின் இளமை, துணிந்து நின்று சமணத்தை எதிர்த்து சைவத்தை பாண்டிய நாட்டில் தாபிக்கிறது… பெண் மீது கொண்ட காதலும் அதற்கிடையில் ஏற்பட்ட பேதைமைமிக்க ஊடலையும் நீக்க, அந்தப் பரமனையே தன் மானிடக் காதலியிடம் தூதனுப்புகிறது அந்தச் சுந்தரரின் இளமை…
View More பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1