ஆற்றுப் படலம் – 2 The Canto of the River – 2
பணை முகக் களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்தென ஈர்த்து, இரைத்து ஆர்த்தலின்,
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்,
புணரிமேல் பொரப் போவதும் போன்றதே. 11
சொற்பொருள்: பணை – பருத்த. மாக்கள் – விலங்குகள். ஆர்த்தல் – ஒலித்தல். மணி – அழகு, மாணிக்கம் சிலேடை. கொடி – தேரின்மேல் பறக்கும் கொடிக்கும், தாவரமாகிய கொடிக்கும் சிலேடை. புணரி – கடல்.
பருத்த முகங்களையும், (நீரில் புரள்வதால்) களிப்பையும் உடைய (அல்லது, நீரில் சிந்திக் கிடக்கும் கள்ளைப் {தேனை} பருகிய) யானைகள், குதிரைகள், பலவிதமான மிருகங்கள் என்று இவற்றையெல்லாம் அடித்து உருட்டிக் கொண்டு செல்கிறது வெள்ளம். இவற்றினோடு அழகான கொடிகளும் வந்து சேர்ந்து தங்குவதால் (அல்லது விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட கொடிகள் பறக்கின்ற தேர்களும் வந்து சேர்வதால்) அந்த ஆறு, கடல்மேல் போர் தொடுப்தற்காகப் படையைத் திரட்டிக்கொண்டு போவதைப் போல இருந்தது.
African Elephant swimming
Translation: The abundant energy of the surging waters rolled heavy and gamboling elephants, horses and many other kinds of animals in its current. Exotic creepers mixing and moving along (resembled the flags fluttering on the chariots) and it appeared as though the river in spate had assembled its army (of chariots, horses, elephants and all other animals) declaring war on the ocean.
Elucidation: The current pulls great elephants, horses and other animals in its force. The poet uses the phrase ‘maNi kodi’ as a pun to mean ‘a beautiful creeper’ and ‘gem studded flag’. And the speed with which the ‘army’ moves on, appears like the angry march of war on the sea.
சரயு நதியின் சிறப்பும், நால் வகை நிலத்திலும் அது ஓடிய சிறப்பும் – On Sarayu and the way it ran on the lands four.
இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கு உயிர்க்கு எலாம். 12
சொற்பொருள்: இரவிதன் குலம் – சூரிய வம்சம். ஒழுக்கு – நீர் ஒழுகிச் செல்வதாகிய தன்மை; மனிதர்களுடைய ஒழுக்கம். உரவுநீர் – கடல்.
சூரியவம்சத்தைச் சேர்ந்த பற்பல அரசர்களுடைய நல்லொழுக்கம் (தவறாத அரசாட்சியை) ஒத்த (வலிமை நிறைந்த வேகமும் பாய்ச்சலும்; அதே நேரத்தில் கரைக்குள் மட்டுமே அடங்கிப் பாய்வதுமான) நடையை உடைய சரயுநதி, கடல்சூழ்ந்த இந்த உலகத்தில் உயிரோடு விளங்கும் ஒவ்வொரு இனமும் தழைத்து ஓங்குவதற்காகப் பால் நிரம்பியிருப்பதாகிய தாயின் மார்பகத்தைப் போன்றது.
இந்த நதி இவ்வளவு வேகத்துடன் பாய்ந்தாலும் கரைக்குள் அடங்கித்தான் செல்கிறது. எப்படி சூரியவம்சத்து அரசர்கள் வீரமும் வேகமும் உடையவர்களாக இருந்தபோதிலும் தங்களுக்கு உரிய ஆட்சி நெறிகளைத் தாண்டாதவர்களாக இருக்கிறார்களோ அப்படி. அதுமட்டுமில்லாமல், உயிர்க்குலம் ஒவ்வொன்றையும் ஊட்டி வளர்ப்பதற்கான தாய்முலை போன்றது இந்த நதி. உயிருக்கான ஊற்றம் இது. தழைப்பதற்கான ஆதாரம் இது.
Translation: Even as the conduct (personal as well as kingly) of the numerous kings in the line of the Sun, the river moves on. Sarayu feeds Life of all kinds on this land, surrounded by the ocean, like the mother’s breast.
Elucidation: The life of a King and his conduct, both at the personal level and in the affairs of his kingdom, demand force and self-discipline. It is from the King—or the administrative head—that immense energy originates and spreads all over the land that he rules. Obviously, any force or energy that is let out needs to be regulated. It therefore becomes the duty of the King from whom immense energy and authority emanate and perocolate downwards, to ensure that such force and authority spread about constructively, taking particular care not to give room that they are not expended destructively.
The Kings, numberless they are, in the line of Raghu, which is also known as Surya Vamsa, have all been conducting their personal lives and the administrative process relentlessly and consistently in the right direction. The river Sarayu’s surge that was so enormous that it could roll even elephants, horses and other animals in its stride, was well within the banks. The current was as controlled and regulated as the Kings of the Sun Dynasty gave a controlled vent to their authority to ensure the welfare of all. And due to this reason, the river is like the breast of a mother to every kind of life abounding on this earth that is surrounded by the oceans. Though surrounded by oceans, all forms of life depend on the river for their survival as the babies do on their mother’s breast.
கொடிச்சியர் இடித்த சுண்ணம், குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்குறு சந்தம், சிந்தூரத்தொடு நரந்தம், நாகம்,
கடுக்கை, நாள் வேங்கை, கோங்கு, பச்சிலை, கண்டில் வெண்ணெய்,
அடுக்கலின் அளிந்த செந் தேன், அகிலொடு நாறும் அன்றே. 13
சொற்பொருள்: கொடிச்சியர் – குறிஞ்சி நிலத்துப் பெண்கள். சுண்ணம் – வாசனைப் பொடி (powder); கோட்டம் – வாசனைப் பொருள் (கோஷ்டம்). சந்தம் – சந்தனம். சிந்தூரம் – வெட்சிப்பூ. நரந்தம் – புல் வகைகளில் ஒன்று. நாகம் – சுரபுன்னைப்பூ. கடுக்கை – கொன்றைப்பூ. நாள் வேங்கை – காலையில் மலரும் வேங்கைப்பூ. கண்டில் வெண்ணெய் – ஒருவகைப் பூண்டு.
நதியின் ஓட்டத்தோடு, மலைப் பகுதிகளில் வாழும் பெண்கள் இடித்துத் தயாரித்து வைத்திருந்த வாசனைப் பொடிகளும், மற்ற வாசனைப் பொருட்களும், மலைகளில் முளைத்திருக்கும் சந்தனம், வெட்சிப்பூ, நரந்தம் புல், சுரபுன்னைப்பூ, வேங்கை மலர், கொன்றைப்பூ, பச்சிலைகள் ஆகிய எல்லாமும் கலந்தன. இவற்றோடு மலைகளின் உச்சிகளில் அடுக்கடுக்காகக் கட்டப்பட்டிருந்த தேன்கூடுகளின் ஊடாகவும் வெள்ளம் அதிவிரைவாக மோதுவதால், உடைந்த கூடுகளிலிருந்து தேனும் பெருகி வெள்ளத்தோடு கலந்தது.
இப்போது நதி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களில் மலையும் மலைசார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலத்தில் பாய்வதால், மலைகளில் காணப்படும் பொருட்கள் நதியில் கலப்பதைச் சொல்கிறார். இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளும் மலைகளில் காணப்படுபவை.
Translation: The water whirled past the hills and on its way, various natural perfumes, pestled and powdered by the women of the hills and other fragrants, sandal wood, flowers of various kinds, grass, leaves with medicinal properties moved with the current, mixed and absorbed in the waters. And the river (with its sheer energy) broke rows and rows of honeycombs on its way, making honey spill and mix in it flow.
Elucidation: Land was traditionally classified into five, namely, Kurinji or hills and lands surrounding hills, Mullai, or forests and lands surrounding them, Marudham, or fields and their surrounding lands and lastly Palai, deserts and their surroundings. Of these five, a river can obviously course only through the four. When a river courses through a desert, it can be a desert no more! The poet describes the course of the river through the four categories of land. This verse speaks about its flow through the hills and their tracts. He details the flowers found in the hills and other perfumes by name. The waters were filled with such natural fragrances and the domestic preparations like chunnam, a talcum powder of those days, and other frgrants.
எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி,
வயின் வயின், எயிற்றி மாதர், வயிறு அலைத்து ஓட ஓட்டி,
அயில் முகக் கணையும் வில்லும் வாரிக் கொண்டு, அலைக்கும் நீரால்,
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே. 14
சொற்பொருள்: எயினர் – வேடர். அப்பு மாரி – அம்பு மழை என்றும் நீர் மழை என்றும் இருபொருள்படும். இரியல் – விரைந்து ஓடுதல். எயிற்றி – வேடுவப் பெண். அயில் – கூர்மை. செயிர் – வருத்தம்
காடுகளில் வேடர்களின் குடியிருப்புகளின் வழியாப் பெருகிச் செல்லும் வெள்ளம் தன் நீர்ப்பெருக்கால் (அம்பு மழைகளைப் பொழிந்து) வேடர்குலப் பெண்கள் வயிற்றில் அடித்துக்கொண்டு அஞ்சி ஓடுமாறு செய்வதாலும், வேடர்களுடைய வில்லையும் கூர்மையான அம்புகளையும் அள்ளிக்கொண்டு ஓடுவதாலும், வேடர் குலத்தினர்மேல் படையெடுத்து வந்த பகைமன்னருடைய சேனையைப் போல் ஓடியது ஆறு.
மலையும் மலைசார்ந்த நிலங்களில் பாய்ந்த வெள்ளம் இப்போது காட்டுப் பகுதியில் ஓடுகிறது. காடுகளில் வெள்ளத்தால் ஏற்படும் விளைவுகளைச் சித்திரிக்கிறான் கவி.
Translation: The river rushing into the hamlets of huntsmen dwelling in the forests raining its incessant shafts of water, made the womenfolk run away, making frightful cries, and carried the bows and arrows of the huntsmen (from their dwellings), thus resembling the acts of a warring foe.
Elucidation: The river has coursed down the hills and has entered the forestlands, which is the second in the major divisions of land. The course of Sarayu through the jungles and through the jungle hamlets is described here.
செறி நறுந் தயிரும், பாலும், வெண்ணெயும், தெளிந்த நெய்யும்,
உறியொடு வாரி உண்டு, குருந்தொடு மருதம் உந்தி,
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்,
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே. 15
சொற்பொருள்: மறி – மான்குட்டி
வயல்களும் வயல் சூழ்ந்த நிலங்களுமான மருதத்தின் வழியே ஓடுகின்ற வெள்ளம் வீடுகளுள் புகுந்து அங்கெல்லாம் வைக்கப்பட்டுள்ள மணம் கமழும் தயிர், பால், வெண்ணெய், நெய் என்று யாவற்றையும் உரியோடு கவர்ந்துகொண்டு ஓடுகின்ற காரணத்தாலும், குருந்த மரங்களையும் மருத மரங்களையும் முறித்துப் போடுவதாலும், மான்குட்டியைப் போன்ற விழிகளை உடைய மருதநிலப் பெண்களுடைய ஆடைகளை அள்ளிக் கொண்டு செல்கின்ற காரணத்தாலும், பண்டொருநாள் பாம்பின் தலையில் கால் பதித்து ஆடிய கண்ணனைப் போலவும் சரயு தோற்றம் கொண்டது.
Translation: Making incursion into the cultivated lands and its surroundings, the waters gushed through the houses, plucking away the hoops that hold pots of curds, milk, butter and clarified butter, emptied the pots as they went; fell great trees; and ran away with the sarees of the doe-eyed damsels, mimicking the acts of the Lord who danced on the heads of Kaliya, the serpent.
Elucidation: The river has flown through forests and is now entering the cultivated land. There we find it robbing milk, curds etc., felling the trees, and flowing away with clothings, reminding one of the frolicking Krishna.