அறியும் அறிவே அறிவு – 10

அறியும் அறிவே அறிவுபகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 9

(தொடர்ச்சி…)

சீடனுக்கு என்று மட்டுமல்ல, தேகான்ம பாவனை அற்ற நிலை பெறுதற்கு எவருக்குமே பயன்படும் பல உத்திகள் இந்தச் செய்யுளில் வருகின்றன.

தானம் தவம் வேள்வி தன்மம் யோகம் பத்தி
வானம் பொருள் சாந்தி வாய்மை அருள் – மோனநிலை
சாகாமல் சாவு அறிவு சார்துறவு வீடு இன்பம்
தேகான்ம பாவம் அறல் தேர்

பொருள்: தானம், தவம், வேள்வி, தர்மம், யோகம், பக்தி, சொர்க்கம், உண்மைப் பொருள், அமைதி, சத்தியம், அருள், மௌனம், முக்தி நிலை, ஜீவபோதம் அழிதல், ஞானம், சந்நியாசம், மோட்சம், ஆனந்தம் இவையெல்லாம் தேகான்ம பாவனையற்று இருப்பதேயாகும்.

guru_sishya

1. தானம்: ஔவையார் அறத்தைப் பற்றிச் சொல்லும்போது “ஈதல் அறம்” என்றார். பிறருக்குப் பொருளைத் தானமாகக் கொடுப்பதே அறச் செயல்கள் எல்லாவற்றிலும் சிறந்த அறம் ஆகும். ஆதலால் இங்கும் அது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. வள்ளுவரும் ஒருவன் மேல் நோக்கிச் செல்லும் வழிகளில் முதன்மையாக அறத்தை வலியுறுத்தும் விதமாக அறத்துப் பாலையே முதலில் சொல்கிறார். அப்படிக் கொடுக்கும் போது “நான் கொடுக்கிறேன்” என்றோ, “எனது பொருளைக் கொடுக்கிறேன்” என்றோ எண்ணங்கள் இல்லாதிருக்கப் பழகப் பழக, தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் போதும் அந்த எண்ணங்கள் கைகொடுத்து நம்மை உயர்த்தும். எப்போது “நான்” இல்லையோ அதுதானே தேகான்ம பாவ நிலையற்ற ஆன்ம சமர்ப்பணம்?

2. தவம்: தேகான்ம பாவனையே மனத்தைப் பல வித வழிகளில் அலைக்கழித்து அகங்காரத்தையும் வளர்த்து ஒருவனை உண்முக நோக்கில் ஈடுபடுத்தாது வெளி உலகினில் ஈடுபடச் செய்கிறது. அவ்வாறு வெளிச் செல்லும் மனத்தை உண்முகப்படுத்தி, தனது இருப்பிலேயே கவனம் கொள்ள வைக்கும் முயற்சியே தவம் எனப்படுவது. தவத்தில் ஈடுபாடு கொள்வது என்பதே தேகான்ம பாவனை அறுகின்ற செயலேயாகும்.

3. வேள்வி: மனிதனை மேலெழச் செய்யும் முயற்சியில், சாதாரண மக்கள் மேலே மட்டுமே எழும் அக்கினியைச் சாட்சியாகக் கொண்டு செய்யப்படும் ஹோம, யஞ்ஞாதி வகைக் கர்மங்கள் போலவே, தனது அகங்காரத்தை ஞானம் தேடல் எனும் வேட்கைத் தீயில் இட்டு இறைவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதே சிறந்த வேள்வியாகும். அது நான் உடல் எனும் பாவனையை அறுத்தலன்றி வேறு என்ன?

4. தர்மம்: தர்மம் என்னும் சொல் “ஒரு பொருளின் முக்கியத் தன்மை”யைக் குறிப்பிடுகிறது. கல்கண்டு என்னும் பொருளுக்கு படிமம், வெள்ளை நிறம், இனிப்பு, உறுதி என்றிவ்வாறாக வெவ்வேறு தன்மைகள் இருக்கலாம். ஆனாலும் அதனுடைய இனிப்பு என்பதே அதன் முக்கியத் தன்மை ஆகும். “கல்கண்டு போல” என்று சொன்னால் அதன் இனிப்புத் தன்மையே முதலில் வரும். ஆக கல்கண்டின் தர்மம் இனிப்பது என்று கொள்ள வேண்டும். அதுபோல ஒருவனின் தர்மம் என்பது அவன் தான் தானாக இருக்கும் உண்மை நிலையையே குறிப்பிடும். அதாவது தேகான்ம பாவனை அற்ற நிலை. நான் தேகம் என்பதே அதர்மம் என்று ஆகிறது. அனால் நாம் ஒவ்வொருவரும் தேகம் மட்டுமல்லாது அது உள்ள உலகம், அதன் மூலம் நமது மனம் செல்லும் வழியில் விரியும் உறவுகள், சிந்தனைகள் என்றிவ்வாறான பன்முக விரிவாக்கங்களையே உண்மை எனக் கொண்டு அல்லல் படுகிறோம். அவை அனைத்தும் நமது உண்மை நிலையைச் சார்ந்தவைகளே. அவைகளே உண்மை அல்ல.

5. யோகம்: இறைவனுடன் ஒன்றாகிவிடுவதே யோகம். அது எப்போது இயலும்? நான், எனது என்ற பாவனைகளை கைவிட்டால் தானே யோகம் கைக்கூடும். ஆக நாம் செய்யும் எந்த யோகப் பயிற்சிகளுக்கும் முழுப் பலன் கிடைக்க தேகான்ம பாவனை விலக வேண்டும். அதற்கேற்றாற்போல் நமது செயல்களும், சிந்தனைகளும் அமைய வேண்டும். இல்லையென்றால் பயிற்சிகள் பௌதிக அளவில் மட்டுமே பலன் கொடுத்து நம்மை சிறிது கடைத்தேற்றலாம். முழுப் பலன் கிடைக்காது.

6. பக்தி: விபத்தி என்ற சொல் பிரிவைக் குறிக்கும். தான் வேறு, இறைவன் வேறு என்று பிரித்து அறிவது பிரிவு. அதன் எதிர்மறையாக, இறைவனை நமக்கு அன்னியமாக இல்லாது அறிவதே பக்தி. இறைவன் என்னும் போது அனைத்து உயிர்களும் உள்ளடங்குவதால், நான்-எனது என்னும் நிலைப்பாடு எப்படி இருக்க முடியும்?

7. வானம்: மனிதர்கள் எப்போதும் இன்பமாய் இருக்கவே விரும்புவார்கள். ஆனால் எப்போதும் இன்பம் கொடுப்பது எது என்று அறியாமல், பேரின்ப மார்க்கத்தை விட்டு சிற்றின்பத்தில் ஈடுபடுவார்கள். அப்போதும் நல்ல செயல்களையே செய்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று பெரியோர்கள் உணர்த்தியதால் பெரும்பான்மையாக அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் பலர் உண்டு. அப்படியும் அத்தகைய செயல்களுக்கு உண்டான பலன்களை பூவுலக வாழ்க்கையின் பின் சொர்க்கத்தில் அனுபவித்துவிட்டு, மற்ற செயல்களுக்குண்டான பலன்களை அனுபவிக்க மறுபடியும் இப்பூமியில் பிறந்துதான் ஆக வேண்டும். அதற்கு இப்பிறவியிலேயே தன்னை உணர்ந்து தானாக தனது சித்தாகாசத்தில் இருத்தலே பேரின்ப நிலை என்று உணர்வதே வானத்தைத் தொடுதல் ஆகும். அதுவே தேகான்ம பாவனையை விடுதல் ஆகும்.

சிதம்பரம் கோவிலில் நடராஜர் தரிசனம் ஆன பின், பக்கத்தில் ஒரு திரையை விலக்கி “இதுதான் சிதம்பர ரகசியம், தரிசனம் செய்து கொள்ளுங்கள் ” என்று காட்டுவார்கள். பார்ப்பவர்கள் பலருக்குமே அது என்னவென்று புரியாது. அதைக் காட்டும் பலருக்கும் அப்படியேதான் இருக்கும் என்று என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது. ஆனால் அதில் ஒரு பெரிய உண்மை இருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது. “நீதானே பார்க்கிறாய்? ஒன்றும் தெரியவில்லையா? சரி, பார்ப்பவன் யார் எனப் பார்” என்று உணர்த்துகிறார்களோ எனத் தோன்றுகிறது. பஞ்ச பூதத்தில் ஆகாசத்திற்கு என்ற இடம்தான் சிதம்பரம். அது உணர்த்தும் தத்துவமே சிதாகாசம் அல்லது வானம். அதையே தூய தமிழில் வெறுவெளி என்று சொல்வார்கள். இங்கு அங்கு எனாது எங்கும் வியாபித்து நிறைந்தவன் இறைவன், “அதுதான் நீயும்” என்று உணர்த்துவதை பஞ்ச பூதத்தின் இறுதி நிலையாகக் குறிப்பிடுகிறார்கள் போலும்.

8. பொருள்: விருப்பு-வெறுப்பு, பந்தம்-விடுதலை, இன்பம்-துன்பம் என்றிவ்வாறான இருமைகளைக் கடந்த ஒருவன் தன்னில் தானாய் என்றும் இருக்கும் உள்ள நிலையே மெய்ப்பொருள் ஆகும். அதற்கு “வேறு” என்று கிடையாததால் அங்கு நான்-எனது என்ற நிலையோ, அதனைச் சார்ந்த வேறு ஈடுபாடுகளோ கிடையாது. அதில் நிலைகொண்டவன் என்றுமே செல்வந்தன் தான். அந்த உண்மைப் பொருளையும் அது அளிக்கும் இன்பத்தையும் விட்டு, மற்ற பொருட்களைச் செல்வம் என நினைத்துச் சேகரிப்பவன் அதனுடன் வரும் துன்பத்தையும் அனுபவிக்கும் ஓர் ஏழையே. அதனாலேயே, பூவுலகில் செல்வம் சேர்ப்பவனுக்கு ஔவையார் “இறைவனுக்கு ஈட்டல் பொருள்” என்று நினைவுறுத்துவார். ஆக மெய்ப்பொருளைப் பற்றி இருப்பதும் தேக-ஆன்ம பாவனையை விடுதலே.

9. சாந்தி: உடலோ தூல வடிவில் என்றால், நாம் நமது மனதில் பலவித உணர்ச்சிகளை நுண்ணிய அளவில் வளர்த்துக் கொண்டுள்ளோம். உறக்கத்திற்கும், இறப்புக்கும் ஒரே ஒரு வேற்றுமைதான் உள்ளது. உறக்கத்திற்குப் பின் உடல் இருக்கிறது, இறப்புக்குப் பின் இந்த உடல் இல்லை. ஆனால் நமது உணர்ச்சிகளோ இவ்விரண்டு நிலைகளுக்குப் பின்பும் தொடர்ந்து வருகின்றது. ஒன்றை நாம் அனைவரும் அறிவோம், மற்றதை ஆன்றோர் சொல்லி அறிகின்றோம். முன்னதையே எடுத்துக் கொள்வோமே. அத்தகைய உணர்ச்சிகள் இல்லாத நம் தூக்கத்தில் எவ்வளவு அமைதியாக இருக்கிறோம். அந்தத் தூக்கம் மட்டும் நமக்கு இல்லையென்றால் நம் வாழ்வு எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதனால் உடலோடு, உணர்வுகள் தொடர்புடைய பாவனையையும் நாம் நீக்கினால் எவ்வளவு சாந்தியுடன் நாம் இருக்கலாம்? ஆக சாந்தியாய் இருக்கிறோம் என்றால் நாம் பாவனைகள் அற்று இருக்கிறோம் என்றுதான் பொருள்.

10. சத்தியம்: சத்தியம் என்பது “என்றும் உள்ளது” ஆகும். “நான் உடல்” என்பது எப்படி சத்தியம் ஆகும்? உடல் இன்று இருக்கும், நாளை போகும். அதனால் உடலே நான் எனும் தேகான்ம பாவனையை நீக்குதலே சத்தியம் ஆகும். “உள்ள பொருள் உள்ளலற உள்ளத்தே உள்ளதால்” என்று ரமணர் கூறும் அந்த உண்மை நிலையில் இருப்பது ஒன்றே சத்தியம் ஆகும். மற்றபடி அதை நினைப்பதோ, விவரிப்பதோ உண்மையை உணர ஒரு உத்தி என்று வேண்டுமானால் கொள்ளலாம், அவைகளே சத்தியம் ஆகாது.

11. அருள்: இறைவனிடம் ஒன்றுதல் என்பது நமது எண்ணமாகவோ, முயற்சியாகவோ இருக்கலாம். ஆனால் அது கைகூட இறைவனின் அருள் வேண்டுமல்லவா? எதற்கும் ஒரு நேரம், காலம் என்று உண்டு. அதன் பரிமாணங்கள் நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஏனென்றால் நம்மைப் பொறுத்தவரை நாம் நினைப்பது, செய்வது இவைகள்தான் ஓரளவுக்குத் தெரியும். நாம் செய்ததோ, அதன் பலாபலன்களோ நமக்குத் தெரியாதிருக்கும்போது, ஒன்றுதல் என்பதை “ஒன்றவேண்டும் என்று எண்ணுதல்” என்றுதான் கொள்ள முடியும். அதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வான் என்றுதான் நாம் இருக்க முடியும். அதுவே பூரண சரணாகதி தான். அத்துடன் தேகான்ம பாவனை போய் விட்டதென்றுதானே பொருள்?

12. மௌனம்: மௌனம் என்பது வாயினால் பேசாதிருப்பது மட்டுமல்ல, மனதாலும் நினையாதிருப்பது. அதனால் மௌனம் என்பது மனோவாக்கிற்கு எட்டாதது என்பர். நான் தேகம் என்றால் அதனோடு வாயும் இருக்கும், நான் ஆன்மா என்று எண்ணினால் அதனோடு எண்ணுகின்ற மனதும் இருக்கும். இவ்விரண்டும் தேவையே இல்லை என்றால் அது தேகான்ம அற்ற பாவனையே அல்லவா? “சொல்லாமல் சொல்லி நினையாமல் நினைக்கும்” மௌன குருவாகிய தட்சிணாமூர்த்தி அந்த நிலையிலேயே இருப்பதால் அவர் காலத்தை எல்லாம் கடந்து என்றும் இளமையுடனும், அந்த நிலையை இன்னும் உணராததால் காலத்திற்கு உட்பட்ட அவரது சீடர்கள் முதுமையுடனும் இருப்பதை கோவில் சிற்பங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

13. நிலை: என்றும் நிலைத்திருப்பது நமது “என்றும் உள்ள” நிலை. அதுவே முக்தி நிலையாகும். அது மனமழிந்த, சலனமற்ற நிலை. மனமே இல்லாத இடத்தில், உடல் எனும் எண்ணம் மட்டும் தோன்றுமோ? ஆக அது தேகான்ம அற்ற நிலை அன்றி வேறு என்னவாய் இருக்க முடியும்?

14. சாகாமற் சாவு: துக்கம் மிகுதியாய் இருக்கும் போது, “ஐயோ, தாங்க முடியவில்லையே, இதை அனுபவிக்கவா நான் பிறந்தேன்? இறந்து விட்டால் நிம்மதியாய் இருக்குமே” என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அதாவது உடலின் இறப்பிற்குப் பின் அமைதி கிடைக்கும் என்றும், அதுவே தேவை என்றும் நினைக்கின்றனர். உடலின் சாவை தன் சாவாக நினைப்பதுதான் தேகான்ம பாவனை. அப்படிச் சொல்பவர்களே நல்ல நிலையில் இருக்கும் போது அந்த உடலைப் பாதுகாத்துப் பேணி, எந்த வித உடல் உபாதையும் இல்லாமல் இருக்கவே விரும்புவார்கள். இவ்விரண்டு நிலையிலும் ஒருவனுக்குத் தேவை அமைதி, அது கொடுக்கும் இன்பம், இவ்விரண்டும்தான். அதற்கு உடல் உள்ளபோதே நாம்தான் அது என்ற பாவனையைத் துறந்தாலும் நாம் விரும்புகிற அமைதி கிடைத்தால் அதுவே சாகாமல் சாகும் நிலை அல்லவா? உண்மையில் தேகான்ம பாவனை அற்ற நிலையில் நானெனும் அகந்தை அழிவதுதான் சாவு. அப்போது ஒருவனுக்குக் கிடைப்பது அளவற்ற இன்பமே.

15. அறிவு: தேகான்ம பாவனையே அஞ்ஞானம். அது இல்லாதிருப்பதே ஞானம். அதுவே அறிவு என்று சொல்லப்படுகிறது.

16. துறவு: அனைத்தையும் விடுதலே துறவு ஆகும். எதனால் நாம் அனைத்துடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோமோ, அதனை விடுதல் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். தேகான்ம பாவனையின் முதல் எழுச்சியாக அகந்தை உள்ளதால், அதுவே அனைத்துப் பார்வைகளுக்கும், பிரிவுகளுக்கும் மூல காரணமாய் இருப்பதால், அந்த தேகான்ம பாவனையை விடுதலே அனைத்தையும் விடுதல் ஆகும். அதை விடாத வரை துறவு என்பதற்குப் பொருள் இல்லை.

17. வீடு: வீடு என்பது விடுதலை ஆகும். தேகான்ம பாவனையே நம்மைப் பந்தப்படுத்திக் கொள்வது. அதனின்று விடுதலை பெறுவதே வீடு ஆகும். திருவள்ளுவர் வீடு பற்றிச் சொல்லவில்லையே என்ற கருத்தைத் தெரிவித்த ஔவையார் தனது நாலடி வெண்பா ஒன்றில் , அறம், பொருள், இன்பம் பற்றிச் சொல்லிவிட்டு “பரனை நினைத்து இம்மூன்றும் விட்டதே வீடு” என்பார். உலகோர்க்கு மறையான திருக்குறளில் முந்தைய மூன்றும் சொல்லப%

One Reply to “அறியும் அறிவே அறிவு – 10”

  1. …..வீடு இன்பம், தேகான்ம பாவம் அறல் தேர் endra varigalin vilakkanggal muzhumai peraamal irukindrana. Please edit. Thank you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *