தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்… காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான். மேலே உள்ள வீடியோ பதிவுகளின் க்ளிப்பிங்குகளுடன் இந்த விளக்கத்தை தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வரச்செய்ய வேண்டும்.

View More தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்… ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?… உண்மையில் வைரமுத்துவின் இத்தகைய திரிபுவாதங்கள் தனிப்பட்ட ஒரு விஷயம் அல்ல. தமிழ் இலக்கியங்களின் மீதும் தமிழ்நாட்டின் இந்து சமய மரபுகளின் மீதும் திராவிட, இடதுசாரி இயக்கங்கள் கடந்த பல பத்தாண்டுகளாக நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இவற்றைக் காண முடியும்….

View More ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்…..

View More சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்

பி.ஆர்.ராஜமய்யர் வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை… அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும் மூச்சடைக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்ட ஒரு தமிழ் மனம்…

View More பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்

தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

வந்தே மாதரம் பாடலைப் போன்றே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அடிப்படையில் வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது.
முன்னதை எதிர்க்கும் சிலர் அதைவிடவும் வெளிப்படையாக இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய பின்னதை மட்டும் ஏற்பார்களாம். பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்… சுந்தரம்பிள்ளை அந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை…

View More தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை… அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது இருக்கலாம்…

View More அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து

சில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா? தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை?…. 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள்….

View More தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து

கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்

கொடுப்பதை, சிரத்தையுடன் கொடுத்திடுக. அசிரத்தையுடன் கொடுத்தல் தகாது. செல்வத்திற்கேற்பக் கொடுத்திடுக. நாணத்துடன் கொடுத்திடுக. அச்சத்துடன் கொடுத்திடுக. சம்மதத்துடன் கொடுத்திடுக என்கிறது தைத்திரிய உபநிஷதம்… அச்சம் ஏன்? கொடுப்பதால் நமக்கு அகம்பாவம் ஏற்பட்டு விடக் கூடாதே, நல்ல உள்ளத்துடன் நாம் கொடுத்தாலும் பெறுபவன் மனம் புண்பட்டு சிறுமையடைந்துவிடக் கூடாதே என்பதான அச்சம். ‘ஸம்வித்’ என்பதற்கு ‘நட்புணர்வுடன்’ என்று சங்கர பாஷ்யம் தரும் பொருள் சிறப்பானது. கொடையைப் பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த ஆறு உபநிஷத வாக்கியங்கள் அளித்து விடுகின்றன…

View More கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்

பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்

கடந்த மார்ச்-23, 2017 அன்று மாபெரும் நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளரான அசோகமித்திரன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெங்களூர் வாசக வட்டம் சார்பாக, ஏப்ரல் 2, ஞாயிறு ஒரு நினைவுக் கூட்டம் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகளும், கலந்துரையாடலும் இலக்கியத் தரத்துடன் சிறப்பாக அமைந்தன. அவற்றின் வீடியோ பதிவுகள் கீழே… டாக்டர் ப.கிருஷ்ணசாமி அசோகமித்திரனுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சிறந்த இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். அசோகமித்திரனின் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமை குறித்து சிறப்பாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் தனது உரையில் எடுத்துரைத்தார்….

View More பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்

சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்

தேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார்… 1969 மாநாட்டில் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானது, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும் பலதரப்பட்ட மக்களிடமும் மிக சகஜமாகப் பழகி வந்தார்….

View More சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்