பாரதப்பிரதமர் தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்தும் காசிக்கு காலகாலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்… இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் உள்ளன. புனித யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்… காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளோடு கூட, காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும்…
View More காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்Author: நீர்வை. தி.மயூரகிரி சர்மா
கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட கந்தபுராணத்தை இலங்கை சைவ தமிழர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்துவரும் மரபு உண்டு. ஆனால் நவீன வாழ்வியல் இப்புராண படன மரபை பெரிதும் சிதைத்து விட்டது. இப்பொழுதெல்லாம் புராண படனம் சடங்காகவே சில இடங்களில் நடைபெறுகிறது. இம்மரபை மீளெழுச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்… எனவே, பொருத்தமான 700 பாடல்களை கதை ஓட்டத்திற்கேற்ப தொகுத்து, சப்தசதி என்ற எண்ணிக்கை அடிப்படையில் தேவி மகாத்மிய வடிவிலேயே, இதனை உருவாக்கலாம் என கருதினேன். கந்த மான்மியம் என்று தமிழ் மரபுகேற்ப அதற்கு பெயரிடலாம் என்றும் கருதினேன்…
View More கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்
பொ.யு 1310ஆம் ஆண்டு இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை என்ற ஈழத்து சோதிட இலக்கிய நூல், “உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய் – மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே” என்று கூறுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி என்ற குறிப்பும் உண்டு.. இந்த நூலின் காலகட்டத்தில் வடஇலங்கை – குறிப்பாக யாழ்ப்பாணம் பாண்டியப் பேரரசின் தளபதியாக கருதப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது… ஆக, ஆயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகின்றனர்…
View More எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2
சைவசித்தாந்தநெறிநின்று விலகாத சபாபதி நாவலர் சித்தாந்த ஆச்சார்யர்களைப் பெரிதும் போற்றிவந்துள்ளதுடன், அவர்கள் வழியிலேயே செயற்படவேண்டும் என்கிற ஆர்வமும் உடையவராக விளங்கியுள்ளார்.
சிதம்பர சபாநாதர் புராணம் எழுதிய நாவலர் புராண காவியங்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து, வைதீக காவிய தூஷண மறுப்பு என்கிற நூலும் எழுதியுள்ளார். ஆக, புராணபடன மரபை வளர்ப்பதிலும் நாவலரவர்கள் ஆறுமுகநாவலருக்குப்பின் கணிசமான பணியாற்றினார் எனக் கருதலாம்.
யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1
அவையோர் வியக்கும் உரைவன்மையாலும், அந்த உரையிடையே பிரவாகிக்கும் சைவசித்தாந்தக்கருத்துகளாலும், கிறிஸ்துவர்கள், நாத்தீகர்கள் போன்ற பிறதத்துவ நம்பிக்கையாளர்களும் மதத்தவர்களும் நாவடங்கி ஓடச்செய்யும் சொற்போர் வெற்றியும் மிக்கவராக சபாபதிநாவலர் விளங்கினார்.
அதனாலேயே இவருக்கு “நாவலர்” என்ற பட்டத்தைச் சுப்பிரமணிய யோகீந்திரர் வழங்கிக் கௌரவித்திருக்கிறார். நாவன்மை பொருந்தியவர்களாகவும், சைவசித்தாந்தச் சொற்பொழிவுகளை ஆற்றுவதில் தலைசிறந்தவர்களாகவும் விளங்குபவர்களுக்கே திருவாவடுதுறை ஆதீனம் “நாவலர்” என்ற அதியுயர் விருதினை வழங்கி கௌரவித்தது என்பதை நாம் அறியலாம்.
View More யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1‘சும்மா இரு சொல் அற’
சும்மா இருத்தல் என்பது உலகியல் நோக்கில் புரிந்துகொள்ளப்படுமாயின் சும்மா வேலை செய்யாமல் இருப்பவரின் மனம் எங்கெங்கோ சுற்றிச் சுழலுவதைக் காணலாம். அதனால்தான் வேலை செய்யாமலும், பேசாமலும் இருக்கும் உலகியற் சும்மா இருத்தலை குறிப்பிடவில்லை. யோகநிலைச் சும்மா இருத்தலையே குறிப்பிடுகின்றேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அருணகிரியார் ‘சும்மா இரு, சொல் அற,’ என்று குறிப்பிடுகின்றார்… இலங்கையில் யாழ்ப்பாணத்தில்- அறுபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவாத்வைத யோக புருஷரான யோகர் சுவாமியின் சீடரான வெள்ளைக்கார சுவாமியார் ஒருவர் தமது கையில் தமிழில் ‘சும்மா இரு’ என்று பச்சை குத்தி வைத்திருந்தாராம்….
View More ‘சும்மா இரு சொல் அற’ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை
சிவாகமங்கள் பரமசிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு அருளப்பெற்றவை ஆகும். இந்தச் சிவாகமங்களை விளக்குவதற்காக 18 சிவாச்சார்யர்கள் பிற்காலத்தில் 18விதமான நூல்களை எழுதியுள்ளனர். அவைகள் மூலமான சிவாகமங்கள் கூறும் விளக்கத்தை மேலும் விளக்கவே அவைகள் உருவானவை. சிவாகமங்களில் காமிகம், காரணம், மகுடம் என்கிற ஆகமங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. இந்த ஆகமங்களின் வழியிலேயே கோவில் வழிபாடுகள் இடம்பெறுகின்றன.
View More ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வைபோர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்
நாம் வாழும் வடஇலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் தொட்டு, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை மின்சாரமற்ற வாழ்வு நிலை கொண்டிருந்தது. விமானக்குண்டு வீச்சுக்களே இதற்கு முக்கிய காரணமாயின. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக இக்காலத்தில் செயலிழந்திருந்தன. நாங்கள் வாழ்ந்த வடபுலத்திற்கும் பிற பகுதிகளுக்குமான தரைவழிப்போக்குவரத்தும் இல்லாதிருந்தது. திடீரென்று நவீன உலகத்திலிருந்து ஆதிகாலம் போன்ற ஒரு உலகத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால், என்ன அதிசயம் என்றால் இக்காலத்தில் மனிதவிழுமியங்கள் இப்போது நம் ஊர்களில் இருப்பதைக் காட்டிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்ததாக சொல்கிறார்கள்… உணவு, உடை போன்ற யாவற்றுக்கும் கப்பலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு இருந்தது. கப்பல் வரா விடின் விலை கிடு கிடு என அதிகரிக்கும். பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும்… இன்றைக்கு சென்னை மக்களின் அவலத்தை போக்க இயன்ற உதவிகளை, இதே போன்ற அவலத்தை அனுபவித்த இலங்கையை சேர்ந்த வசதிபடைத்த புலம்பெயர் மக்களும் பிறரும் இயன்ற அளவு செய்ய முன்வருவது சிறப்பானதாகும்….
View More போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்ஆறுமுகநாவலரின் தமிழ் நடை
நாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா? என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது.
View More ஆறுமுகநாவலரின் தமிழ் நடைஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்
சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம்… சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார். மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை செய்து, யாகபூஜை முடிந்ததும், சீடன் முதல் நாள் இரவு கனவு கண்டாரா? என்று அறிந்து அதற்கேற்ப ஹோமங்கள் நடக்கும்…
View More ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்