இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தன்மை பொழியும் இடம் எது? நாடு எது? … முறையீட்டை முறையிட்டேன். அழுகையை அழுதேன்; அன்புப்புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்கு பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும்.
View More ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்Author: ஆசிரியர் குழு
பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!
இந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா? சைவம் சமணர்களைக் கழுவேற்றி வளர்ந்த மதமா? உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா? ஔரங்கசீப்பின் கோயில் இடிப்புகள், திப்பு சுல்தானின் செயல்கள், தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகள் – இவற்றிற்கிடையே தொடர்பு இருக்கிறதா? முட்டாள் புராணக் கதைகளால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா? – சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
View More பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்
சுவாமி சித்பவானந்தர் எழுதுகிறார், “ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டிய அளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது ….”
View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்கீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த தமிழ் இந்துக்களின் போராட்டம்
தமிழகத்தின் ஒரு பஞ்சாயத்து முழுவதும் பஞ்சாயத்து தலைவர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய ஜமாத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா??… திம்மிகளாக வாழ மறுத்து சட்டரீதியாகவும், ஜனநாயக முறையிலும் உறுதியாகப் போராடி வெற்றி பெற்றிருக்கின்றனர் கீழ்விஷாரம் இந்துக்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!
View More கீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த தமிழ் இந்துக்களின் போராட்டம்இன்னா செய்தாரை… அல்லது 2009 இல் குஜராத் வந்த கஜினி முகமது
கிபி 2009 இல் மீண்டும் வருகிறார் ஒரு முகமது கஜினியிலிருந்து. அதே சோமநாதபுரம் இருக்கும் குஜராத்துக்கு. படையுடன் அல்ல. பணிவுடன். குஜராத் செழிப்புடன் முன்னேறிக்கொண்டிருக்க கஜினி இன்று கோரயுத்தங்களால் பாழடைந்து கிடக்கிறது. குஜராத் நகராட்சியின் நகர்ப்புற நிர்வாகிகளிடம் கஜினியை மீண்டும் புனர்நிர்மாணிக்க உதவி கேட்கிறார் முகமது இப்ராஹீம்.
View More இன்னா செய்தாரை… அல்லது 2009 இல் குஜராத் வந்த கஜினி முகமதுசூரசம்ஹாரம்
நேற்று சூரசம்ஹாரம் எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது. சூரசம்ஹாரம் என்பது தீமையை புனிதம் வெல்லும் ஒரு திருநாள். இத்திருநாள் நமக்கு அளிக்கும் நம்பிக்கை சொல்லில் அடங்காதது. இத்தினத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்வதில் தமிழ்ஹிந்து மகிழ்ச்சி அடைகிறது.
View More சூரசம்ஹாரம்காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 3
(சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூலிலிருந்து): நந்துதல் என்றால் முடிவுறுதல் எனப் பொருள்படுகிறது. எது நந்தாது இருக்கிறதோ அதற்கு முடிவில்லை. சந்திரனுடைய வெளிச்சம் அமாவாசையன்று முடிவுறுகின்றது. சூரியப் பிரகாசம் அத்தகையதன்று. அது ஓயாது பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது… உள்ளிருக்கும் அந்தராத்மா புறத்திலிருக்கும் சூரியன் போன்று யாண்டும் சுயம் ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆத்மப் பிரகாசத்திற்கு உதயமில்லை, அஸ்தமனமிலை, மறைத்தலில்லை, புதியதாகக் காட்சிக்குக் கொண்டு வருதல் என்பதும் இல்லை. நந்தா விளக்காக சர்வகாலமும் அது ஜொலித்துக் கொண்டிருக்கிறது…தூண்டப் படுவதாலேயே உயிர்கள் அனைத்தும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. பொரித்த குஞ்சு, போட்ட குட்டி, பிறந்த சிசு ஆகியவைகள் முதலில் பசியால் தூண்டப் படுகின்றன. உள்ளிருக்கிற பேரறிவுப் பொருளே அத்தூண்டுதலை உண்டுபண்ணுகிறது.
View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 3இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை – பாரதியார் கட்டுரை
… ஆணுக்கேனும், பெண்ணுக்குகேனும் இளமைப் பிராயம் கடந்த மாத்திரத்திலே போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை. உலகத்தின் நலத்தைக் கருதி கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் போக இச்சையை அக்கிரமமான வழிகளில் தீர்த்துக்கொள்ள முயல்வோரை மாத்திரமே நாம் கண்டிக்கலாம்… வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக்கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள்….
View More இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை – பாரதியார் கட்டுரைவாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்
ஒருபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் வியக்கவைக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும் ஆபத்துகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அதிகார வெறி, பொதுநலத்தை ஓரங்கட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் கோஷ்டிப் பூசல் காணப்படுகிறது. எந்தக் கட்சியும் இதற்கு விலக்கல்ல. இந்த பரஸ்பர அவநம்பிக்கை, தகராறு போன்றவற்றால் அரசியல் கட்சிகள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. அறப்பண்பு முற்றிலுமாக செல்லரித்துப் போய்விட்டது. மனித விழுமியங்கள் நலிவடைந்து விட்டன. அரசுகள் ஸ்திரத்தன்மை இழந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் அநீதியும் அட்டூழியமும் அக்கிரமமும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் என்ன பரிகாரம் என்பதை…
View More வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்
தெரியாது என்ற வார்த்தையும் முடியாது என்ற வார்த்தையும் பாரத பக்தர்கள் தவிர ஏனையோரின் பொருட்டாகவே உண்டாகின்றன. இவ்வுண்மை உங்கள் மனதில் எப்போதும் நிற்கட்டும்… சிவநேசனாகவோ தமிழ்நேசனாகவோ அவ்விருபொருள் நேசனாகவோ என்னை மதித்து என்னிடமிருந்து யாதொரு கைமாறும் கருதாது, “சிவநேசன்” வாரந்தோறும் என்னைக் காணும்படி நீங்கள் செய்ததற்காக யான் உங்கள் பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன் ..
View More தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்