பென் (Ben) : திரைப்பார்வை

‘அற்புத சுகமளிக்கும்’ பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் பேய் பிடித்தவர்களை விரட்டுவதாகவும், தீராத நோய்களை மேடையிலேயே அதிசயமாக குணமாக்குவதாகவும் வெறித்தனமாக கத்தி, கூப்பாடு போடும் அட்டூழிய வீடியோக்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் இந்த வெறிக் கூச்சல்களை கிண்டலடித்துவிட்டு கடந்து விடுவோம். ஆனால் இவை உண்டாக்கும் கடுமையான உளவியல் பாதிப்புகளும், இவற்றின் பின்னால் உள்ள பிறமத -குறிப்பாக இந்து மத- காழ்ப்புணர்வும் எவ்வளவு தூரம் அப்பாவிகளின் சீரழிக்கும் என்பதை 2015ல் வந்த இந்த மலையாளப் படம் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி, மிக தைரியமாகக் காட்டுகிறது. கிராமத்து பள்ளியில் படித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் ஒரு சிறுவனை அவனது அம்மா நகரத்தில் ஒரு பெரிய கான்வென்ட்டில் படிக்க வைக்க விரும்பி செய்யும் சில பலவந்தமான காரியங்களும், முட்டாள் தனமான முடிவுகளும் அதன் விளைவுகளும் கதை…..

View More பென் (Ben) : திரைப்பார்வை

இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்

கல்வியிற் சிறந்த பெரியோர்கள் கற்க வேண்டியதைக் கற்று, அறிய வேண்டியதை அறிந்தவர்கள். தாம் பெற்ற அறிவின்பங்களை உலகிலுள்ள எல்லோரும் அடையும்படி பிறருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அதன்படியே திரு.சுந்தர் அவர்களும் கர்நாடக சங்கீதத்தின் இசை நுணுக்கங்களைப் பாமரனும் புரிந்து இன்புறும் வண்ணம் நமக்குத் தந்திருக்கிறார். திரு.ரமணன் அவர்கள் தந்துள்ள வாழ்த்துரையின்படி, இந்நூல் ஒரு பயிலரங்கு என்பதை இதனைப் படிப்பவர் யாவரும் உய்த்துணர்வர். யானும் இந்நூலைக் கற்றேன். கடுகளவு இசைஞானம் கொண்டிருந்த நான் நிறையத் தெரிந்துகொண்டபின் உள்ளம் பூரித்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இறையடி பணிந்தேன்….

View More இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்

வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு… “உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் – உன் கருணை பெருமையோடு பேசப்படும் – என்னால்தான் உனக்குப் பெருமை – உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் – ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்… ”அலமேலு மங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு…”

View More வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

பசங்க-2: பார்க்க வேண்டிய படம்

“பசங்க– 2 பாரு தம்பி… நல்லா இருக்கு. குழந்தைகளுக்கான படம்” என்றார் நண்பர்…

View More பசங்க-2: பார்க்க வேண்டிய படம்

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3

நவீனம் எதுவும் இல்லாத அர்த்தமும் இல்லாத ஒரு அபத்தம் தமிழில் தான் நவீனம் என்று அரங்கேறி வருகிறது. இதில் ஒரே விதிவிலக்கு ராமானுஜம் தான். அவரிடம் பாவனைகள், அலட்டல்கள் ஏதும் இல்லை. அவர் மேடையேற்ற எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நாடகமும் அதற்கு எத்தகைய மேடை வடிவம் கொடுக்கவேண்டும் என்று யோசிக்கிறார். வெறியாட்டம் வேறு, செம்பவளக்காளி வேறு, அண்டோறா வேறு வடிவங்களில் வடிவமைத்திருக்கிறார். அவை எனக்கு அர்த்தமுள்ளவையாக வந்து சேர்ந்துள்ளன. கைசிகி என்ற நூற்றாண்டு பழம் நாடகத்தைப் புதுப்பித்துக் கையாள்வதும் வேறாகத்தான்….. அவர்களுக்கு சைன்யமோ வேறு செட்டோ தேவை இல்லை. யுத்த களம் நம் கண்முன் நிற்கும். ஒரு புதிய நாடக சகாப்தத்தையே உருவாக்க விருந்த அல்காஷி அந்த மேடையைச் சுற்றிச் சுற்றி வந்து பல கோணங்களில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். என்னை முதலில் பிறந்த மண்ணைவிட்டு வெளி மண்ணில் தெருக்கூத்து ரசிகனாக்கிய மாலை அது. தீபம் பத்திரிகையில் எழுதினேன். கூத்துப் பட்டறை பிறந்தது அதன் விளைவு தான்….

View More இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2

தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறை பேராசிரியராக உள்ளார் என்றும். சுதந்திரமாக தன் துறைப் பொறுப்பை எப்படியும் சீரமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவருக்குத் தந்துள்ளார் என்பதும், தன் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையைத் துவங்க செ.ராமானுஜத்தை தேர்ந்தெடுத்தது துணைவேந்தரின் வித்தியாசமான நோக்கும், அணுகுமுறையும் என்றெல்லாம் கேள்விப் பட்டேன்… திருச்சூரில் இருந்த வரை அவரால் பெரிதாக ஏதும் சாதித்துவிட முடியவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்போது, இப்போது என்றால், அதை விட்டு வெளிவந்த பின் வருடங்களில் அவர் தானே கண்டு வரித்துக்கொண்ட பாதையைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது… ராமானுஜம் தன் வெறியாட்டம் என்னும் நாடகத்தோடு வந்த போது. அதைப் பார்த்த போது தான் ராமானுஜம் has arrived என்று எனக்குப் பட்டது.. (வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இந்தக் கட்டுரை தான். இதன் அடுத்தடுத்த பகுதிகள் வெளியாவதற்கு முன்பே 21-அக். அன்று வெ.சா மறைந்து விட்டார். இன்னும் ஆறாத கண்ணீருடன் அவரது நினைவைப் போற்றி இப்பகுதியை வெளியிடுகிறோம்).

View More இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2

அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்

மதிப்பிற்குரிய பெரியவர் வெங்கட் சாமிநாதன் அடுத்தடுத்த இரண்டு மாரடைப்புகளால் நேற்று (21 அக்டோபர் 2015) அதிகாலை பெங்களூரில் காலமானார். கலைமகளின் தவப்புதல்வர் புனிதமான சரஸ்வதி பூஜை நாளன்று மறைந்து விட்டார். கலை இலக்கிய விமர்சன பிதாகமர், மகத்தான சிந்தனையாளர். அரை நூற்றாண்டு காலம் தனது கூர்மையான எழுத்துக்களாலும் இடித்துரைகளாலும் தொடர்ந்து புதிய திறப்புகளை தமிழர்களாகிய நமக்கு அளித்து வந்து வழிகாட்டியவர் மறைந்து விட்டார்…. தமிழ்ஹிந்து இணையதளம் உருவான 2008ம் ஆண்டு முதல், தொடர்ந்து வெ.சா அவர்களின் படைப்புகள் இதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் என்ற கட்டுரை தான். அதன் முதல் பகுதி தமிழ்ஹிந்துவில் சென்ற வாரம் வெளிவந்தது. அதன் அடுத்தடுத்த பகுதிகளை ஏற்கனவே அவர் அனுப்பி வைத்திருந்தார்…

View More அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1

வங்காளத்திற்கோ, மகாராஷ்டிரத்திற்கோ, அல்காஷி வந்து தான் நாடகத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. மற்ற எல்லா ;பிரதேசங்களுக்கும் இருந்தது. ஆனால் அல்காஷி உருவாக்கியது உலகளாவிய நாடக்கலையின் முழு பரிணாமம்.. ராமானுஜத்தைத் தந்தும் தமிழ் நாடு உரு;ப்பட மாட்டேன்னு அடம் பிடித்தால் என்ன செய்வது? ராமானுஜமும் என்ன என்னமோ செய்து பார்க்கிறார்… தான் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்து வருவதாகவும் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் பார்த்த, அறிமுகமான முதல் தமிழர், நாடகம் கற்க வந்தவர். இன்னும் ஒன்றிரண்டு பேரைச் சொல்ல முடியும் தான். நாடகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தாகம் இருந்தால் ஹிந்தியும் வரும் நாடகமும் வரும் அந்த ஒரு சிலரில் ராமானுஜமும் ஒருவர்….

View More இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1

விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்

இந்த எழுத்தாளர்கள், தம்மைப் போன்ற இதர கைத்தடி எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பது, அடுத்த தலைமுறையிலும் தம்மைப் போலவே ஒத்த “கொள்கையுடைய” நடுவர்களையும் நியமிப்பது என்றுதான் அறுபது எழுபது ஆண்டுகளாக இந்திய அறிவு ஜீவி உலகம் இயங்கி வருகிறது. அதனாலேயே நேரடியாக அரசு தரும் விருதாக இல்லாவிட்டாலும், அரசு தரும் விருதைப் போலவும் தற்போதைய அரசின் மீது அதிருப்தியால் அதைத் திருப்பி தருவதாகவும் ஒரு நாடகத்தை பீகார் தேர்தலுக்கு முன்பாக அரங்கேற்றுகின்றனர்…மோடி ஆட்சியில் எந்தவொரு எழுத்தாளரும் படைப்பாளியும் அச்சுறுத்தப் படவில்லை. எந்தவொரு வலதுசாரி எழுத்தாளர்களும் இன்று வரை எந்தப் பதவிக்கும் தெரிவு செய்யப்படவில்லை. .நரேந்திர மோதி மௌனமாக இதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, தன் பாட்டுக்கு தன் வேலையை செய்வது இவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது…

View More விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்

பாகுபலி: திரைப்பார்வை

ஒவ்வொரு ஃப்ரேமிலும் நமது விழிகளை விரியவைக்கும் விஷுவல்கள் அலையலையாக வந்து மோதுகின்றன. மற்ற பலவீனங்களை எல்லாம் கூட, இந்தப் படத்தின் உண்மையான ஹீரோவான “காட்சி” பின்னுக்குத் தள்ளி விடுகிறது என்றே சொல்லவேண்டும். ‘சினிமா’ என்பது அடிப்படையில் *காட்சி ஊடகம்* என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார் ராஜமௌலி… இந்தப் படத்தில் வீர நாயகர்களின் சித்தரிப்பு இந்துத்துவத்தை மறைமுகமாக பிரசாரம் செய்கிறது என்று சில முற்போக்குகள் புலம்புகிறார்கள். இது நாள் வரை அமர் சித்ரகதா படக்கதைகளிலும், அம்புலிமாமாவிலும் நமது இதிகாச புராணங்களிலும் இல்லாத எந்த விஷயத்தை இந்தப் படம் காண்பித்து விட்டது என்று இப்படிக் குதிக்கிறார்கள் தெரியவில்லை….

View More பாகுபலி: திரைப்பார்வை