விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் சிக்கல். இதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசித்ததின் விளைவாக இப்புத்தகத்தை எழுதியிருக்கும் சு.சண்முகவேல் அடிப்படையில் ஒரு விவசாயி. விளைச்சல் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே கண்டவர். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது….ஐந்து அருமையான செயல்திட்டங்களை இந்நூல் முன்வைக்கிறது. ‘வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல’ என்று நூலை வாழ்த்தியுள்ளார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்…
View More விவசாயிகளைப் பாதுகாப்போம்Category: புத்தகம்
நீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]
அன்னை பராசக்திக்கு நான் உருவாக்கிய பெயர்களில் ஒன்று, “சோற்றால் அடிக்கும் சுந்தரி”… கடவுள் மறுப்புக் கொள்கை உடைய நீதிக் கட்சியின் வெற்றிக்கு சபரிமலை ஐயப்பன் எப்படி உதவினார் என்பது சுவாரஸ்யமான கதை… காகிதத்தில் வார்த்தைகளை வைத்துக்கொண்டு கல்கி செய்துள்ள சாதனையை ஒரு கேமிராவால் மட்டுமே தோற்கடிக்க முடியும்… சமூக வரலாற்றின் ஒரு பகுதிக்குக் கையேடாகவே இது பயன்படக்கூடும்.
View More நீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]
•அற நிலையத் துறைக்கு “வானளாவிய’ அதிகாரங்கள் உள்ளனவா? சட்டங்களும், உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளும் அத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்பதைக் தெளிவாக எடுத்துக் கூறியும், இச்சட்டங்களையும், தீர்ப்புகளையும் சிறிதும் மதியாமல், தான் செய்வது சட்ட மோசடி என்று தெரிந்தே ஆயிரக்கணக்கான கோயில்களை இந்தத் துறை எடுத்துக் கொண்டு வருவதே இந்தத்துறையின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்… ‘சமுதாயச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கோயிலின் எந்தப் பழக்கவழக்கத்தையும் மாற்றவோ, குறைக்கவோ, புதிதாய்ச் சேர்க்கவோ அதிகாரம் இல்லை…
View More தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]உமர் கய்யாமின் ருபாய்யத்
கவிஞர் ஆசையின் மொழிபெயர்ப்பில் 215 ருபாய்யத்தும் கிடைத்ததும் உமர் கய்யாமைப் பற்றி நமது பார்வையே மாறிவிடுகிறது. மதுவும் மாதுவும் கவிதையும் தான் மகிழ்ச்சி தருவன என்பதல்லாது ஒரு பரந்த உலகப்பார்வையும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர்… மதத்தின் நீதிமான்களே, நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது திராட்சையின் ரத்தத்தை. உண்மையாகச் சொல்லுங்கள் – நம்மில் யார் அதிக ரத்த வெறி பிடித்தவர்கள்?… ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு, என்னைப் பற்றி; நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்… இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்? உயிரோடு இருந்திருப்பாரா? ருபாய்யத்துகள் நமக்குக் கிடைத்திருக்குமா?…
View More உமர் கய்யாமின் ருபாய்யத்பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்
நான் இதுகாறும் பார்த்திராத வெகு சின்ன குருவி, மிக அழகான குருவி, நீலமும், கரும்பச்சையுமாக சூரிய ஒளி படுவதும், அது அமர்ந்திருக்கும் திசையும் பொருத்து அது நிறம் மாறி மாறி மின்னும் சிறகுகளோடு… இச் சின்ன சின்ன பறவைகளை குழந்தைகளாக, அழகு கொழிக்கும் ஜீவ சிற்பங்களாக, கவிதைகளாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்… கொண்டலாத்தி புத்தகத்தின் பின் இத்தனை சமாசாரங்கள் இருந்திருக்கின்றன. நம் கைகளில் இருப்பது புகைப்படம் எடுக்கப்பட்ட கவிதைகளும், ஆசை எழுதிய கவிதைகளும்…. வானத்தை வானத்தைக் கலைத்துப் பறக்கும் கொக்குக் கூட்டம்… அவை கடக்கும் போதெல்லாம்…
View More பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்
ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாகப் படுகொலை செய்யப் பட்டதைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது, மரணங்கள் வெறும் புள்ளி விவரங்களாக ஆகி விட்ட நிதர்சனம் மனதைச் சுடுகிறது… கொள்கை மோகம் மட்டுமல்ல, சுய-அகங்கார நோக்கங்களும் நேருவை ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் மையல் கொள்ள வைத்திருந்தன.. ‘திபெத்தில் எரிந்த நாலந்தா’ அத்தியாயத்தைப் படித்து முடித்த போது, காட்டெருமையின் குளம்புகளில் சிக்கிக் கொண்ட குழந்தை என்ற வர்ணனை தான் மனதில் எழுந்தது… எல்லா சான்றுகளுமே கம்யூனிஸ்டுகளே வெளியிட்டுள்ள பல நூல்களில் இருந்தும், ரஷ்ய, சீன பதிப்புகளில் இருந்துமே தரப்பட்டிருப்பது…
View More பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்
இந்தப் புத்தகம் தேச ஒற்றுமையில் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லாத அண்ணல் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோருக்கு நன்றிக் கடனாக, தன்னுடைய சிறு முயற்சி என்றும் இந்தப் புத்தகத்தின் தேவை தீரும் நாளையே தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அரவிந்தன் குறிப்பிட்டார்… ஜோ டி குரூஸ் அன்று கச்சிதமாகப் பேசி அனைவரையும் நெகிழவைத்தார்… கம்பர் சேக்கிழாருக்கு அடுத்தபடியாக அரவிந்தன் நீலகண்டனைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் எஸ்.ராமச்சந்திரன்… அதிரடிக்குரலும் ஆர்ப்பரிக்கும் அலைபோன்ற தொடர் பேச்சும் வாள் வீச்சாக இருந்தது….
View More உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்உடையும் வீரமணி – பாகம் 2
தமிழ்ஹிந்து இணைய தளத்தை தி.க. அரங்கில் அறிமுகப்படுத்தி அதன் பெயரை விமர்சித்தார் வீரமணி… வன்முறை நேரடி நடவடிக்கையை சொல்லி ஒரு மாநில முதலமைச்சரையே மிரட்டியவர் தான் ஈவெரா. … ஈ.வெ. ராமசாமி வகையறாக்களை காமராஜர் எப்படி நடத்தினார், இந்துத்துவர்களை எப்படி நடத்தினார் என்பதைக் கூறினால்…வீரமணியும் அவரது கும்பலும் தமிழ்நாட்டில் பரவலாக கிறிஸ்தவ அமைப்புகள் செய்யும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக எத்தனை ஆர்ப்பாட்டங்களை எங்கெங்கெல்லாம் செய்திருக்கிறார்கள்?… வேர்ல்ட்விஷன் போன்ற பன்னாட்டு மதமாற்ற அமைப்புகளின் பணம் எவருடையது?…
View More உடையும் வீரமணி – பாகம் 2உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு
அறியாமையை இந்த அளவு அப்பட்டமாக அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்திருக்க வேண்டாம் என தோன்றியது.. ‘குமரி கண்டம்’ எனும் கோட்பாட்டை மிகக் கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கியவர் இவர்கள் ‘ஆரியர்’ என முத்திரையிடும் சமுதாயத்தைச் சேர்ந்தவரல்லர்… இந்த நூலை எரிக்க வேண்டுமென்று சொன்னது புத்தகங்களை எரிக்கும் புத்தி கில்ஜிக்கு மட்டுமில்லை ஈவெராவின் சீடகோடிகளுக்கும் உண்டு என்பதை நிரூபித்தது… ‘திராவிட’ என்பது மிகத் தெளிவாக பிராந்தியம் சார்ந்த பதமாகவும், ‘ஆரிய’ என்பது சமூக அந்தஸ்து சார்ந்த பதமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது…
View More உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்குதமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்
தமிழ்ஹிந்து இணையதளம் குறித்து ஒரு விளம்பரம்.. இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகங்கள் – தமிழ்ஹிந்து பரிந்துரை.. கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு – அரவிந்தன் நீலகண்டனின் புதிய நூல்! … இரண்டு நூல்கள் தான் இந்த வருடக் கண்காட்சியைக் கலக்கப் போகும் அரசியல்/சமூகவியல் புத்தகங்கள் என்று பல புத்தக நோக்கர்கள் ஒருமனதாக அபிப்பிராயப் படுகின்றனர்… விஜயபாரதம் அரங்கில் தமிழ்ஹிந்து வெளியீடுகள் கிடைக்கும்..
View More தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்