பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது, அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், இரண்டையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?… காளிதாஸர், பவபூதி, கம்பர் இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்… ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன. காலக்கணிப்பின் பாற்பட்டு 200 வருஷங்களுக்கு முற்படாத ஒரு கலவை இது….
View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]Category: விவாதம்
விவாதங்கள், உரையாடல்கள், கண்டனங்கள், எதிர்வினைகள்..
சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்
வடமொழியொன்றை மட்டுமே அறிந்தவரைக் காட்டிலும், தமிழ், வடமொழி இருமொழியிலும் வல்லவரே போற்றற்குரியவர். தென்னாட்டுச் சுத்தாத்துவித சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்குள் அடங்கிக் குறுகிவிடலாகாது. அது, பிற கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதாத்துவிதம் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட வேண்டுமாயின் சைவசித்தாந்திகள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமைபெற்றே ஆகவேண்டும்.
View More சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்… இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட கிறித்தவ திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?….
View More வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2
ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாகத் தெரிகிறது. ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். அப்படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான். .. தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர்….
View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2மரபும் விமானப்பயணமும்
“நம்ம மரபு .. அது பழசு சார்”.. “மரபுன்னு எதைச் சொல்றீங்க?” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. ”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது”…“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா? அதுதான் முக்கியம்”…குழும சிந்தனை என ஒன்று அமையும்போது, அதன் எல்லைகள் குழுமத்தால் வகுக்கப்பட்டு, தனி உறுப்பினர்களின் ஆழ்மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. தலைவர்கள் இல்லாது போயினும், குழும சிந்தனைகளால் வடிவாக்கப்பட்ட ஒரு பிரதி , குழுமத்திற்குக் கிடைக்கிறது, அது வழிநடத்தும்….
View More மரபும் விமானப்பயணமும்வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1
1875 முதற்கொண்டு 1975 வரைக்கும் வெவ்வேறு இந்தியவியல் அறிஞர்களும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலை படைப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இதில் ஒரு முக்யமான புள்ளி Bhandarkar Oriental Research Institute வாயிலாக அந்த நூலின் க்ரிடிகல் எடிஷன் பதிப்பை ஆய்வின் பாற்பட்டு பதிப்பித்த அறிஞர் பெருமக்களுடைய கருத்துக்களாகும்.. ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் எழுதிய “முன்னூறு ராமாயணம்” என்ற வியாசத்தில் சில கருத்துக்களை முன்வைக்கிறார். “அசல் படைப்பு என்று எந்த ஒரு படைப்பையும் சொல்லலாகாது. ஒவ்வொரு ராமாயணக் கதையையும் தனிக்கதையாகப் பார்க்க வேண்டுமேயன்றி மறுவாசிப்பாகப் பார்க்கலாகாது” என்பது எந்த அளவுக்குச் சரியானது? “தேவ பாடையின் இக்கதை செய்தவர் – மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினார் உரையின்படி” என்று ஆதிகவியாகிய வால்மீகியைப் பின்பற்றியே தாம் இராமாயணம் எழுதுவதாகக் கம்பர் தமது பாயிரத்தில் கூறியுள்ளார்…
View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9
<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்…
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்
மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது – தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை… அறிவுஜீவிகள் கூறுவதுபோல இந்துத்துவம் என்பது இந்து ஞான மரபுடன் தொடர்பு இல்லாத வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல. இந்துத்துவத்தின் வரலாறு என்பது வீர சாவர்க்கருடன் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பின் இயக்க வரலாறு என்பதாக மட்டும் இல்லை. அதன் தொடக்க வேர்கள் புராதனமானவை. பாரதத்தின் உன்னதங்களைக் கொண்டாடிப் பாதுகாப்பவை. அவற்றைத் தகவமைத்து வளர்த்தெடுப்பவை. அதுபோலவே பாரதத்தின் சீர்கேடுகளுக்கு ‘பார்ப்பனீயம்’ போன்ற பொய்யான எதிரிகளை உருவாக்காமல் பொறுப்பேற்பவை. அந்த சமூக தேக்கநிலைகளிலிருந்து விடுதலையாகும் உத்வேகத்துடன், இந்துத்துவம் அதற்கான தீர்வுகளைப் பாரத மண்ணிலிருந்து உருவாக்குகிறது….
View More கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்
கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் மாநில சட்டப்படி தான் குற்றம் என்பதால் மாநில நீதிமன்றங்களிலேயே பிரச்சினை முடிந்துவிடும். இங்கிருப்பது போல் காசு இருக்கிறது என்பதற்காக உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் வழக்கு நடத்தும் பஜனை எல்லாம் கிடையாது… இங்கிருப்பது போல் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிப்பார்கள். அரசு வக்கீல் வாதாட மட்டும் வருவார் என்ற நிலை அங்கே கிடையாது. நீதித்துறையின் கீழ் தான் போலீஸும் மற்றைய துறைகளும் மாநில, மத்திய அளவிலே இயங்கும். நீதித்துறைக்கு தலைவராக ஒரு வக்கீல் இருப்பார். மாநில அளவில் அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்…. ஒரு சட்ட மீறல் நடக்கிறது என்றால் (உதா: ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறது), உடனே அமெரிக்க மத்திய வியாபார கமிஷன் நடவடிக்கை எடுக்கும்.அவர்களாகவே தானாகவே முன்வந்து நீதிமன்றத்திலே அந்த கம்பெனி மேல் வழக்கு தொடுப்பார்கள்…
View More அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்
பாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான “அரசாங்கப் பதிப்பு” வெளியிடப்பட்டுள்ளது. “பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும் ஞானமும் அறியா நவைபடு துருக்கர்”.. இதில் *நவைபடு துருக்கர்* என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது. வேறோர் இடத்தில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது.. “மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்…” என்று பாரதியே சொல்கிறார். பாரதிக்கு எந்த அளவுக்கு மத நல்லிணக்கத்திலும், சமூக ஒற்றுமையிலும் கருத்து இருந்ததோ, அதே போன்று, கூர்மையான, சுயமரியாதையுடன் கூட வரலாற்றுப் பிரக்ஞையும் இருந்தது….
View More பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்