இந்தத் தொடர், ராமாயணத்தை ‘சீதையின் பார்வையிலிருந்து’ சித்தரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்குப் பின், இந்தத் தொடர் தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி, வால்மீகி ராமாயணத்தின் மூலத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது.. மூலக் கதையை திரித்தது மட்டும் இல்லாமல், நவீன “மதச்சார்பற்ற” “முற்போக்கு” கருத்துக்களையும் அதன் மேல் திணிக்க முயற்சி செய்து, ஹிந்துக்களின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக, இதிகாசமாகவும் புனித நூலாகவும் கருதப்படும் ராமாயணத்தை கேலி செய்வது போல் அமைந்துள்ளது… ராம -லட்சுமணர்களுக்கும் மாரீசன்- சுபாகு தலைமையிலான ராட்சதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது ! இந்தத் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஆரியப் படையெடுப்பு தொடர்பான கதைகளின் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் போல…
View More “சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்Category: விவாதம்
விவாதங்கள், உரையாடல்கள், கண்டனங்கள், எதிர்வினைகள்..
கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6
ஜீசஸ் அதாவது இயேசு என்ற ஒரு மனிதர் பிறந்தார், வாழ்ந்தார் என்பதை உறுதியாகக்கூறுவதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்றே கொண்டாலும், சாதாரணக் குழந்தைகளுக்கு மாறாக, சிறப்பான எதையும் அவரிடது பிறப்பிலிருந்து காணமுடிகிறதா?… இயேசு தூரத்திலிருந்து அத்திமரத்தைப் பார்ப்பது சொர்க்கத்திலிருந்து வளமையான ஜெருசலம் நகரத்தைக் காண்பதற்கும், அருகில் சென்று கனிகள் உள்ளனவா என்று காண்பது அவர் ஜெருசலத்துக்கு வந்து அங்குள்ள யூதர்களிடம் நீதி, கருணை, நம்பிக்கை ஆகிய நற்குணங்கள் இருக்கிறதா என்று தேடுவதற்கும், அவர் கனிகளைக் காணாமல் இலைகளைக்கண்டது, அவர்களிடம் வெற்றுசடங்குகளையும், நம்பிக்கை இன்மையையும் கண்டதன் உருவகமாகும்…
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6இந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கை
உலகெங்கும், வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையான மக்களையும், சமூகங்களையும் நினைவில் நிறுத்த வேண்டும் என்ற அறிவார்ந்த கொள்கை செயல்படுகிறது, ஆனால், இந்தியாவிலோ, (இடதுசாரித் தரப்பின் ஆதிக்கத்தால்), வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையாகி மடிந்தவர்கள், அவர்களது நினைவுகள் மறக்கடிக்கப் படுவதன் மூலமும், சில சமயங்களில் இழிவு செய்யப் படுவதன் மூலமும் இரண்டாவது முறையாக சாகடிக்கப் படும் அவலம் நிகழ்கிறது… மாற்றுக் கருத்து கொண்ட இந்திய வரலாற்றாசிரியர்களை அறிவுபூர்வமாக விமர்சிப்பதற்குப் பதிலாக, இடதுசாரித் தரப்பு அவர்களை தேசியவாதிகள் என்றோ வகுப்புவாதிகள் என்றோ முத்திரை குத்தி நிராகரிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. (காங்கிரசின்) அரசியல் ஆதரவு மூலமாக திணிக்கப் பட்ட கருத்துகளுக்கு ஒத்து ஊத மறுத்ததனால், பல திறமையுள்ள கல்விப்புல அறிஞர்கள் பாதிக்கப் பட்டு, ஒதுக்கி வைக்கப் பட்டனர். நல் வாய்ப்புகளை இழக்குமாறு செய்யப் பட்டனர்…
View More இந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கைகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5
உங்கள் பரிசுத்தவேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் பல புத்தகங்களிலிருந்து போதுமான ஆதாரங்களோடு உங்கள் ஆண்டவராகிய ஜெஹோவாவின் தீயகுணங்களை ஒவ்வொன்றாக நிருபித்துள்ளோம். சொல்லாலும், செயலாலும், உணர்வாலும் அவர் தீமையின் உறைவிடமாக விளங்குகிறார் என்பதை இங்கே தெள்ளத்தெளிவாகக் கண்டோம். இன்னும் பைபிளில் காணப்படும் ஆதாரங்களை அடுக்கினால் எமது நூல் மிகவும் விரிவாக நீளும், ஆகவே இதுவே போதும்.
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை
பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை… வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण – shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु – shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி… பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச் சைவர்கள் உணர்வார்கள். சைவ சமயக் குரவர்கள் போற்றிய மகத்தான மரபை, வெறும் சல்லிக்காசு அரசியல் லாபத்திற்காக அவதூறு செய்யும் பழ.கருப்பையா போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உணருங்கள்…
View More சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினைவிருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்
இந்த எழுத்தாளர்கள், தம்மைப் போன்ற இதர கைத்தடி எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பது, அடுத்த தலைமுறையிலும் தம்மைப் போலவே ஒத்த “கொள்கையுடைய” நடுவர்களையும் நியமிப்பது என்றுதான் அறுபது எழுபது ஆண்டுகளாக இந்திய அறிவு ஜீவி உலகம் இயங்கி வருகிறது. அதனாலேயே நேரடியாக அரசு தரும் விருதாக இல்லாவிட்டாலும், அரசு தரும் விருதைப் போலவும் தற்போதைய அரசின் மீது அதிருப்தியால் அதைத் திருப்பி தருவதாகவும் ஒரு நாடகத்தை பீகார் தேர்தலுக்கு முன்பாக அரங்கேற்றுகின்றனர்…மோடி ஆட்சியில் எந்தவொரு எழுத்தாளரும் படைப்பாளியும் அச்சுறுத்தப் படவில்லை. எந்தவொரு வலதுசாரி எழுத்தாளர்களும் இன்று வரை எந்தப் பதவிக்கும் தெரிவு செய்யப்படவில்லை. .நரேந்திர மோதி மௌனமாக இதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, தன் பாட்டுக்கு தன் வேலையை செய்வது இவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது…
View More விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்?
இந்தியாவைப் பொறுத்தவரையில் குடும்பஅமைப்பு முறையால் ஆண்களுக்குக் கூடுதல் சமூகப் பொறுப்பையும் இதே இந்திய சமூகம் வழங்கியுள்ளது. இன்னமும் “வேலைக்குச் செல்வதே புருஷ லட்சணம்” என்பதைத்தான் இந்தியப் பெண்களும் சமூகமும் எதிர்பார்க்கிறது என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. திருமணத்திற்கு முன்பாகவே ஓர் ஆண் தனக்கான பணியை உறுதிசெய்யவேண்டிய அவசியத்தையும் சமூகம் வைத்துள்ளது. அதையும் ஆண்சமூகமே வைத்துள்ளதுபோலத் தோன்றினாலும், பெண்ணும் எதை எதிர்பார்க்கிறாள் என்பதும் அவசியம் கேட்கப்பட வேண்டியது. குடும்பஅமைப்பில் உடனடியான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும், நீண்டகால நலன், எதிர்கால சந்ததிகளின் நலன் என்ற அடிப்படையில் பார்த்தால் குடும்பத்தோடு கூடிய பெண்ணியம் பேசுதலையே நான் வரவேற்பேன்….
View More இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்?கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4
ஆதி மனிதர்கள் ஜெஹோவால் விலக்கப்பட்ட பழத்தினை சாப்பிட்டதால் அவர்களுக்கு நல்லது எது, தீயது எது என்பவற்றை உணரும் பகுத்தறிவு வந்தது என்று உங்கள் பரிசுத்த வேதாகமம் கூறுகிறதே! அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா? தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா?… தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும்? தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே?…
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3
தமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்?….
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2
மிசனரிகளின் பொல்லாத செயல்களைக்கண்டும் கேட்டும், நாம் அவற்றைத்தடுக்க எதையும் செய்யாமலிருப்பது முறையோ, தர்மமோ அன்று. நமது செயலற்ற தன்மையின் விளைவாக, நமது சமூகம் ஏற்கனவே தனது மூன்றில் ஒருபங்கு மக்களை இழந்துவிட்டது. இன்னமும் இந்த இழப்பு தொடர்கிறது. நமது செயலற்றத்தன்மை பலதலைமுறைகளுக்கு நமது மக்களின் இகபர சௌபாக்கியங்களை இல்லாததாக்கிவிடும் அபாயம் உள்ளது. ஆகவே, அறிஞர்களாகிய ஹிந்துக்கள் தமது சுய நலத்தினைத் துறந்து, ஒன்றிணைந்து தமது எளியமக்களுக்கு கல்வியறிவு புகட்டுவது மேன்மையான செயலாகும். மதமாற்றம் என்னும் அபாயத்தினைத் தடுத்துநிறுத்துவதற்கும், நமது மக்களின் இகபர நலத்தினைப் பேணுவதற்கும் இது அவசியம் வழிவகுக்கும்….
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2