எல்லாவிதமான தடுப்பு முயற்சிகளும் வேலை செய்யாத கடைசி நிலையில் மோடியின் பிருமாண்டமான கூட்டத்தை நிறுத்தும் கடைசி முயற்சியாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் துணையை நாடியிருக்கிறார் நிதிஷ். பீஹார் மாநில போலீஸ் இப்படி அலட்சியமாக இருந்திருக்க நியாயமில்லை. எந்தவிதமான குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க பிடிவாதமாக மறுக்கச் சொல்லி உத்தரவு இருந்திருக்கிறது….. அன்று மோதியும் பிற பா ஜ க தலைவர்கள் அவர்களுக்கு மேலாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் காட்டிய பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் மக்களின் மனப்பக்குவம் மீதும் மாபெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டன… மக்கள் எந்தவிதமான வன்முறையும் கலவரமும் இல்லாமல் அமைதியாக எவருக்கும் இடையூறு விளைவிக்காமல் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்று அக்கறையுடன் அவர் அன்று விடுத்த கோரிக்கை இந்தியாவுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்துள்ள ஒரு கொடை அவர் என்பது உறுதியானது. அவரையும் இந்தியா தவற விடுமானால் அதற்கு மன்னிப்பே இல்லாமல் போய் விடும். ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னும் வாராது போல வந்த மாமணியைத் தோற்பதற்கு இந்தியாவுக்கு நேரமும் வளமும் கிடையாது…
View More பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்Category: நிகழ்வுகள்
காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை
ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.. ஓ ஹிந்து சகோதர, சகோதரிகளே இன்னுமா காங்கிரசிர்கு ஒட்டு போட வேண்டும் என்கிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் நமது நாடு குழிதோண்டப் படுவது பற்றியும் உங்கள் குழந்தைகளும் உங்களது பேரக்குழந்தைகளும் இரண்டாம்தரக் குடிகளாக வாழ்வதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம்!
View More காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகைதிருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்
மோடியைக் கண்டவுடன் மக்கள் அடைந்த உற்சாகத்தை விவரிக்கவே முடியாது. இதுதான் உண்மையான எழுச்சி. தமிழர்கள் முகம் கோணாமல் அகம் நிறைந்து ஒரு ஹிந்தி சொற்பொழிவை ஒரு மணி நேரம் கேட்டார்கள். வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டே பழக்கப்பட்ட மக்கள் வந்தேமாதரம் என்று கோஷம் போட்டார்கள்… இந்த கும்பலெல்லாம் இதற்கு முன் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு செலுத்தியவர்களாகத்தான் இருப்பார்கள். இந்த கட்சி கூட்டத்திற்கு வரும் போது மட்டும் ஒழுங்கு எப்படி இயல்பாக வந்து விடுகிறது என்று யோசித்தால் ஒன்று புரியும். தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி… பொதுவாக எல்லா கட்சி மாநாடுகளிலும் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின் அந்த இடம் ஒரு மாபெரும் குப்பை மேடு போல இருக்கும். டாஸ்மாக் பாட்டில்கள், துண்டுகள், செருப்புகள் இவையெல்லாம் கிடக்கும். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மைதானத்தைச் சுற்றிவந்து பார்த்தபோது இவை எதுவும் தென்படவில்லை….
View More திருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்அன்புள்ள அண்ணன் திருமாவளவனுக்கு….
மோடிக்கு விசா கொடுக்கக் கூடாதென்று ஒபாமாவுக்கு இஸ்லாமியர் பலருடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளீர்கள். இதை செய்த தமிழ்நாட்டு புண்ணியவான்கள் நீங்கள் மட்டும் இல்லை. கூடவே வேறு சிலரும் செய்துள்ளனர். ஆனால் குளவி உங்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்கிறது ஏனெனில் நீங்கள் எந்த சமுதாயத்துக்காக குரல் கொடுப்பதாக சொல்கிறீர்களோ அந்த சமுதாயத்துக்கு ஒரு ஹிந்துவாக குளவி கடன்பட்டிருக்கிறது. அந்த சமுதாயத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து ஒரு ஹிந்துவாக குளவி பெரும் குற்ற உணர்வும் வேதனை உணர்வும் அவமான உணர்வும் கொண்டிருக்கிறது.
View More அன்புள்ள அண்ணன் திருமாவளவனுக்கு….மறக்குமா இந்த மாபாதகங்கள்?: தொடரும் படுகொலைகள்
ஜெயலலிதாவோ கருணாநிதியோ இந்து விரோதிகளும் அல்ல ஆதரவாளர்களும் அல்ல. நம்மிடம் வாக்குவங்கி இருந்தால் நம்மிடம் கைகட்டி சேவகம் செய்வார்கள். நம்மிடம் வாக்குவங்கி இல்லை. தேசவிரோத சக்திகளிடம் அன்னிய மத நச்சுவிரியன்களிடம் அந்த வாக்குவங்கி உள்ளது எனவே தெரிந்தே தேசவிரோத சக்திகளுக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள். ஆக நம் இழப்புகளுக்கு நம் ஒற்றுமையின்மையே காரணம். இனியாவது நாம் ஒன்றுபடுவோம். காலம் கடந்துவிடவில்லை இன்னும். இப்போதாவது நாம் இணையாவிட்டால், நாளை தெருக்களில் ஜிகாதி குண்டுகளால் சிதறி மடியும் நம் சந்ததிகள் நம்மை சபிப்பார்கள்.
View More மறக்குமா இந்த மாபாதகங்கள்?: தொடரும் படுகொலைகள்தொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு
சேலத்தில் நேற்று ஆடிட்டரும் பாஜக தலைவருமான திரு.ரமேஷ் அவர்கள் அவரது வீட்டருகிலேயே ‘அடையாளம் தெரியாத’ நபர்களால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 52. சங்கத்திலும் முதன்மை பொறுப்புகளில் இருந்து இந்து சமுதாயத்துக்காக உழைத்தவர். நம் தேசத்தில் நேரடி அன்னிய முதலீட்டை எதிர்த்து சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு நடத்திய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். தன் வாழ்க்கையை பாரத அன்னைக்கு சமர்ப்பணம் செய்த அவருக்கு நம் வீர வணக்கங்கள்…. சில வன்முறை மத சித்தாந்தங்களை ஏற்ற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிலுவை போர் வெறியன், ஒரு ஜிகாதி, ஒரு ஸ்டாலின் ஒளிந்து கிடக்கிறான். இந்த மனநோய் சித்தாந்தங்களை எதிர்த்தும் ஹிந்து ஒற்றுமையை ஏற்படுத்தவும் நாம் ஒவ்வொருவரும் ஒரு வெள்ளையப்பனாக ஒரு ரமேஷாக களமிறங்கி போராடுவோம். நாம் சிந்தும் ஒவ்வொரு ரத்த துளியும் ஆயிரக்கணக்கான வீரர்களை உத்வேகத்துடன் உருவாக்கட்டும்.
View More தொடரும் படுகொலைகள், தூங்கும் அரசுஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை
இந்து முன்னணியின் மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன், தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர், ஏராளமான ஊழியர் களை உருவாக்கியவர். அவர் வேலூரில் இன்று பட்டப்பகலில் சமுதாய விரோத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் அளிக்கிறது… இந்துக்களின் உரிமைகளுக்காக களமாடி வீரமரணம் அடைந்து பாரத அன்னையின் பாதங்களில் பலிதானியாகி உள்ள இப்பெரும் வீரரின் பிரிவால் வருந்தும் அவர் குடும்பத்தினருடனும் இந்து இயக்கங்களுடனும் தமிழ்ஹிந்து தனது சோகத்தை பகிர்ந்து கொள்கிறது….
View More இந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலைநீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்
உதகையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த இந்து முன்னணி மாவட்டச் செயலர் மஞ்சுநாத்தை 20 இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள் ஆட்டோவை மறித்து, நடுரோட்டில் அரிவாள், இரும்புக் கம்பிகள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக த.மு.மு.க அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப் பட்டனர்… குன்னூரில் இத்தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பற்றீய செய்திக்கான சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்த இந்து முன்னணி செயல்வீரர்களுடன் 100-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்திருந்த முஸ்லிம் கும்பல் மீண்டும் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலால் இன்னொரு மாவட்டச் செயலர் ஹரிஹரன், வெங்கட்ராஜ், ஜெயகுமார் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். காவல்துறையினர் இருக்கும் போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது… கடந்த 2-3 ஆண்டுகளாகவே கோவை, திருப்பூர் பகுதிகளில் முஸ்லிம் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. 1990களில் கோவையில் இது போன்று தொடர்ந்து இந்து இயக்கத்தவர்கள் தாக்கப் பட்டனர், அதன் பின்பு 1998ல் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டுத் தாக்குதலால் நகரம் நிலைகுலைந்தது. தற்போது கோவையிலும், அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு நேர்மையாகவும், துணிவாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு…
View More நீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?
2009 ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் போது ஏதோ வேற்றுக் கிரகத்தில் நடப்பது போல வேடிக்கை பார்த்திருந்த அதே தமிழகம், இப்போது குதித்துக் கொந்தளிக்கிறது…. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து எங்காவது ஒரு வார்த்தை இருக்கிறதா? அல்லது, இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்த கண்டனங்கள் எதாவது இருக்கின்றனவா? இந்த அதிமேதாவித் தனமான தீர்மானத்தை ஆதரிக்கத் தான் இரண்டு வாரம் யோசித்தது நமது மத்திய அரசு. இந்தத் தீர்மானத்தால் புளகாங்கிதம் அடைத்து தான் நமது மாணவர்கள் தங்கள் படிப்பைத் துச்சமெனத் துறந்து தெருவில் இறங்கினார்கள். இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?….. இந்தியாவின் இறையாண்மையை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கத்துடனும், இந்திய வம்சாவழியினரின் நலனுக்காகப் பாடுபடும் திண்மையுடனும் மத்தியில் எப்போது நல்லரசு உருவாகும்? அப்போது தான் நமது சகோதரர்களின் சோகம் தீரும்….
View More இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்
இந்த மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றால், அதில் உள்ள பிரிவினைவாத கோஷங்கள் முற்றாக நீக்கப்பட்டு, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், அடிப்படை சிவில் உரிமைகள் ஆகியவற்றையே மையமாக வலியுறுத்துவதாக இவை அமைய வேண்டும். ஆதரவு வட்டத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர குறுக்கக் கூடாது…. இவ்வளவு தூரம் தூண்டி விட்ட பின்னால், தேவையான அளவுக்கு போராட்டம் பெரிதானவுடன், அமெரிக்க அரசு அதே தீர்மானங்களின் கடுமை குறைத்து நீர்த்துப் போனதாக மாற்றுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேரம் என்ன? தேவையான அளவு கிளர்ச்சி எழுப்பப் பட்டவுடன் பந்தை அமெரிக்கா இந்தியா மீது திணிக்கிறது. இப்பொழுது ராஜபக்சேவைப் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் பால் திருப்பப் படுகிறது. இந்தியா அதைக் கட்டாயம் செய்ய முடியாது. அப்படிச் செய்யாத பொழுது தனித் தமிழ் நாடு கோரிக்கையை மேலும் வலுப் படுத்தலாம். இப்படி ஒரு திட்டம் இதன் பின்னே இருக்கக் கூடுமோ என்றும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது….
View More இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்