தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ
கம்பனின் இராமனை வெறுப்பவர் தமிழ் வளர்ப்பவரோ
ஔவையின் முருகனை மறுப்பவர் தமிழர் தானோ …
தமிழின் கொள்கைக்கு பகைவர்
தமிழ் வளர்ப்பதேனோ – இவர்
தமிழ் விற்றே தன் குலம் செழிப்பர்
இதை உணர்வார் யாரோ …
ரத்தங்கள் சிந்தி கட்டினன் தமிழன்
சில சொற்களை சிந்தியே தகர்த்திட பார்க்கின்றார்
Category: நிகழ்வுகள்
என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?
கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லீம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு… இன்னும் எவ்வளவு நாட்கள் இந்தப் போராட்டங்களும், உயிர் இழப்புகளும் தொடரவேண்டும்? தங்களுடைய தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள் இன்று எந்த நிலைமையில் உள்ளன? அக்குடும்பங்களின் வாழ்வாதரங்கள் என்ன?
View More என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து
இந்த நூறு ஆண்டுகளில் தங்களது தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் உலகெங்கிலும், குறிப்பாக மேற்குலகிலும் பெற்றிருக்கும் வெற்றிகள் மகத்தானவை… ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பகிர்தல் உணர்வும், பரஸ்பர மதிப்பும் கூடுவது குடும்பங்களுக்கும், அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பெரிய நன்மை செய்யும்… மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் உருவாக்கிய தினம் அல்ல மகளிர் தினம். உண்மையான சுதந்திர தாகத்தின், மானுட சமத்துவத்தின் குரலாக எழுந்த தினம் அது.
View More எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்துஇலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!
அச்சம் மீதூர தமிழர்கள் நிலை இருக்கையில், மாற்றுச் சமயத்தில் சேர்ந்து விடு என்று அருகாமையிலேயே ஆர்ப்பரிக்கும் குரல்கள்.. புத்தர் சிலைகள் சைவத் தமிழர் நிலப்பகுதியெங்கும் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மளமளமென்று விகாரங்கள் எழுகின்றன.. இலங்கையின் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள சைவத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதற்கட்டமாக 150 திருமுறை வேள்விகளை நிகழ்த்துகிறோம்.
View More இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை
சர்வேஸ்வரா கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அங்கு மசூதி ஒன்றைக் கட்ட மதவெறி அமைப்புகள் முயன்றதாகவும் அதை எதிர்த்து சோழவரம் முன்சீஃப் நீதிமன்றத்தில் மூர்த்தி அவர்கள் வழக்குத் தொடர்ந்தார் என்றும் ஊர்மக்கள் கூறுகின்றனர்… பூதூர் பாபா தர்கா அருகில் இவர் காலை 11 மணிக்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 10 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன.. இந்த மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை ஓயாமல் போராடும் மன உறுதியை இறைசக்தி இந்தக் கிராம மக்களுக்கு அளிக்கட்டும்.
View More சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலைசிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை
ஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.
View More சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரைஹரித்துவார்: கடவுளின் காலடியில்…
கங்கையில் இறங்க எல்லோரும் காத்திருக்கிறார்கள். எப்போதும் பலர் குளித்துக்கொண்டிருக்கும் அந்தப் புனித நதி அந்தப் பொழுதில் யாருமில்லாமலிருக்கிறது. கங்கை மிகப் பெரும் ஓசையுடன் வேகமாகப் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அறுந்து தொங்கும் பாதுகாப்புச் சங்கிலிகள் தன் அசைவில், நதியின் வேகத்தைச் சொல்லுகின்றன. நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் பைனாகுலர்களுடனும், நதியில் போலீஸ் என்று எழுதப்பட்டிருக்கும் லைஃப் ஜாக்கெட்களுடனும் காவலர்கள். ஓயாது தினசரி பலரைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கும் அந்த நதிக்கு இது ஒரு நல்ல ஓய்வாகயிருக்குமோ என்று தோன்றுகிறது…
View More ஹரித்துவார்: கடவுளின் காலடியில்…இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்
செஞ்சியில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் பழைமையான கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்!
View More இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்
நிலத்தகராறு, அதில் விவசாயி கொலை என செய்தி படித்தது நினைவுக்கு வந்தது, ஏதோ சில உண்மைகள் மறைக்கப்படுகின்றனவோ என்று தோன்றியது … தன் கணவனை இழந்து தானும் அடிபட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகளின் அனாதரவான நிலையை எண்ணி அழுவதா, சொந்த ஊரில் இந்துக்கள் பட்ட அடியை தட்டிக் கேட்க நாதியற்ற நிலையில் நிற்கும் தன்னையும் தன்னுடன் அடிபட்ட பெண்களையும் எண்ணி அழுவதா, இழந்த கணவனை எண்ணி அழுவதா என அழுது அழுது கண்ணீர் வறண்டு நிற்கும் அந்த சகோதரி.
View More திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்சென்னை ஹிந்து ஆன்மிக-சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து.காம்!
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக மைதானத்தில் 94 இந்து இயக்கங்கள் பங்கு பெரும் இந்த மாபெரும் கண்காட்சி ஐந்து நாட்களுக்கு (டிசம்பர் 24-28) நடைபெற்றது … நமது தளம் பற்றிய விவரங்கள் மற்றும் இந்து தர்மத்தின் சீரிய கூறுகள் ஆகியவற்றை விளக்குமாறு பேனர்களை வடிவமைத்து தமிழ்ஹிந்து.காம் அரங்கில் அவற்றைக் காட்சிப் படுத்தியிருந்தோம். மேலும், தளம் பற்றிய அறிமுகம் துண்டுப் பிரசுரமாக (pamphlet) வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் தரப்பட்டது. எல்லா நாட்களும் பிரபலங்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை புரிந்தனர்.
View More சென்னை ஹிந்து ஆன்மிக-சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து.காம்!