ஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.
View More சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரைCategory: பொது
Item that are yet to be categorised on a regular basis.
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1
சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக விடையளிக்க முயல்கிறது. (எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி)
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்
செஞ்சியில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் பழைமையான கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்!
View More இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்கூகுள் கொண்ட கோபம்
அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை.
View More கூகுள் கொண்ட கோபம்திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்
நிலத்தகராறு, அதில் விவசாயி கொலை என செய்தி படித்தது நினைவுக்கு வந்தது, ஏதோ சில உண்மைகள் மறைக்கப்படுகின்றனவோ என்று தோன்றியது … தன் கணவனை இழந்து தானும் அடிபட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகளின் அனாதரவான நிலையை எண்ணி அழுவதா, சொந்த ஊரில் இந்துக்கள் பட்ட அடியை தட்டிக் கேட்க நாதியற்ற நிலையில் நிற்கும் தன்னையும் தன்னுடன் அடிபட்ட பெண்களையும் எண்ணி அழுவதா, இழந்த கணவனை எண்ணி அழுவதா என அழுது அழுது கண்ணீர் வறண்டு நிற்கும் அந்த சகோதரி.
View More திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!
திராவிட இயக்க வரலாறு குறித்த பல அரிய, சுவாரசியமான தகவல்களுடன் நமது தளத்தில் சுப்பு அவர்கள் எழுதி வந்த “போகப் போகத் தெரியும்” தொடர், மேலும் முழுமையாக செழுமைப் படுத்தப் பட்டு புத்தமாக வெளிவந்திருக்கிறது. ஜனவரி-29 முதல் தஞ்சாவூரில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் திரிசக்தி பதிப்பக அரங்கில் கிடைக்கும்.
View More ”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!ஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.
அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத்தானது ஒரு லாபநோக்கற்ற, ஏழைகளுக்கும், உதவிதேவைப்படுவோருக்கும் தன்னார்வ நோக்கில் உதவும் ஒரு அமைப்பு. ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருக்கும், கல்வி, உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதும் இதன் பணிகளில் ஒன்று.
View More ஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2
60 வருடங்களும், நிலம், தட்பவெப்பம் குறித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இவற்றைக் குறித்தும் வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், வருடப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் வருடக் கணக்கு, நம் பகுதியில் உள்ள வெப்பம், பருவ மழை இவற்றைப் பொருத்ததே.
வருடப் பலன்களை அறிந்து கொள்ள, அவற்றின் பெயர்களே போதும். அப்படி என்றால், இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது. தமிழ்விரும்பிகள் கோபப்படாமல் இதைப் படிக்க வேண்டும்.
View More சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1
தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது.
View More சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை அரசாணையாலும் பொய்யான பரப்புரைகளாலும் அரசு மாற்ற முனைந்து கொண்டிருகிறது. அரசின் இந்த முனைப்பு தமிழ் மரபுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதோடு தமிழ் மரபிற்கே எதிரானது… மேற்கொள்ள எந்த தரவுகளுமற்ற நிலையில் இது சிலரின் தனிப்பட்ட அபிலாஷை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அபிலாஷை நிறைவேற்றலை தமிழைக் கொண்டு செய்ய முற்படும்போது உண்மையான தமிழன்பர்கள் வெட்கமும் வருத்தமும் அச்சமும் கொள்ளவேண்டி இருக்கிறது.
View More தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!