ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாகப் படுகொலை செய்யப் பட்டதைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது, மரணங்கள் வெறும் புள்ளி விவரங்களாக ஆகி விட்ட நிதர்சனம் மனதைச் சுடுகிறது… கொள்கை மோகம் மட்டுமல்ல, சுய-அகங்கார நோக்கங்களும் நேருவை ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் மையல் கொள்ள வைத்திருந்தன.. ‘திபெத்தில் எரிந்த நாலந்தா’ அத்தியாயத்தைப் படித்து முடித்த போது, காட்டெருமையின் குளம்புகளில் சிக்கிக் கொண்ட குழந்தை என்ற வர்ணனை தான் மனதில் எழுந்தது… எல்லா சான்றுகளுமே கம்யூனிஸ்டுகளே வெளியிட்டுள்ள பல நூல்களில் இருந்தும், ரஷ்ய, சீன பதிப்புகளில் இருந்துமே தரப்பட்டிருப்பது…
View More பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்Category: அரசியல்
அஞ்சலி: சுகுமாரன் நம்பியார்
சுமார் 10 ஆண்டுகள் அமெரிக்காவில் படித்தாலும் இந்துப் பண்பாடு, கலாசாரம் மீது தீராத காதலும் பற்றும் அவருக்கு உண்டு… கட்சியின் மூலம் இந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்றே அவர் விரும்பினார்… தொடர்ந்து சமுதாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், தற்காப்புக் கலைகளிலும் நிபுணர். இந்திய ராணுவம், கறுப்புப் பூனைப் படை, தமிழக அதிவிரைவுப் படையினருக்கு பயிற்சி அளித்துள்ளார்…சுகுமாரன் நம்பியாரின் மரணம் பாஜகவுக்கு மட்டுல்ல, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு…
View More அஞ்சலி: சுகுமாரன் நம்பியார்உடையும் வீரமணி – பாகம் 2
தமிழ்ஹிந்து இணைய தளத்தை தி.க. அரங்கில் அறிமுகப்படுத்தி அதன் பெயரை விமர்சித்தார் வீரமணி… வன்முறை நேரடி நடவடிக்கையை சொல்லி ஒரு மாநில முதலமைச்சரையே மிரட்டியவர் தான் ஈவெரா. … ஈ.வெ. ராமசாமி வகையறாக்களை காமராஜர் எப்படி நடத்தினார், இந்துத்துவர்களை எப்படி நடத்தினார் என்பதைக் கூறினால்…வீரமணியும் அவரது கும்பலும் தமிழ்நாட்டில் பரவலாக கிறிஸ்தவ அமைப்புகள் செய்யும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக எத்தனை ஆர்ப்பாட்டங்களை எங்கெங்கெல்லாம் செய்திருக்கிறார்கள்?… வேர்ல்ட்விஷன் போன்ற பன்னாட்டு மதமாற்ற அமைப்புகளின் பணம் எவருடையது?…
View More உடையும் வீரமணி – பாகம் 2இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -11
மஹாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் மட்டும் நடந்த 18 ஆண்டுகளில் 14 முறை வெடி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. நடந்த அனைத்துக் குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் பல்வேறு இயக்கங்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டாலும், இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. குண்டு வைக்கப்பட்ட நேரம், வைக்கப்பட்ட முறை ஆகியவை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பிலிருந்து ( சிமி ) உருவான இந்தியன் முஜாஹிதீன் குழுவைக் கை நீட்டிக் காட்டுகிறது.
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -11ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்
திக்விஜய் சிங் என்பவருக்கு “ஆர்.எஸ்.எஸ்ஸோஃபோபியா” என்கிற வியாதி போல இருக்கிறது. சிறு குழந்தைகளை மிரட்டுவதற்குச் சில பெரியவர்கள், பூச்சாண்டி என்பார்கள் அதுபோல அடிக்கடி அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.ஆள் என்கிறார். இருக்கட்டுமே. ஒருவர் ஊழலை எதிர்த்துப் போராடுகிறார், அப்படிப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்லது அனுதாபி என்றால் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஊழலை எதிர்க்கிறது என்பது பொருள். அல்லது ஊழலை எதிர்ப்பவரை ஆதரிக்கிறது என்று போருள். இவருக்கு ஏன் இப்படி அடிவயிறு கலங்குகிறது. ஊழலில் ஊறித்திளைத்த இந்தக் கும்பல் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி காட்டிவிட்டால், அடடா! என்ன இது? இந்த ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பயங்கரவாத தேசவிரோதக் கும்பல் என்று மக்கள் நினைத்து விடுவார்கள் என்று இவர் எண்ணுகிறார்போல் இருக்கிறது.
View More ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி
முந்தைய ஆட்சியில் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு மீட்டு வர இயலாது என ஓலமிட்ட காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்… அத்வானி பேசிய போது தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு எவரும் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனிக்கும்போது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட பட்டியல் உண்மை என்பது தெரியவருகிறது… போர்களில் இழந்த பகுதிகளை மீட்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் கட்சியா கறுப்புப் பணத்தை மீட்கப் படையெடுக்கும்? ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் மீது வரி சுமத்தாமல் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது நல்லது என்கின்ற சிந்தனைகூட இல்லாமல் செயல்படுகிறது…
View More கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜிமுல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்
முல்லை பெரியார் விஷயத்தில் வெளிவராத பல தகவல்கள் உள்ளன. இதில் சமூக விரோதிகளை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. கேரளாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதும் பொருளாதார முற்றுகை என்ற பெயரில் போராடுவதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும். அரசியல் கட்சிகள் நிலநடுக்க பீதியைக் கொண்டு அரசியல் நடத்துவதில் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய நியாயம் இருக்கிறது. இதில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன வேலை? இங்கு தான் அவர்களது ஐந்தாம் படை ரகசியம் இருக்கிறது. அவர்களது வெறுப்பூட்டும் பிரசாரத்தின் அடிப்படை சபரிமலை என்பதே அது.
View More முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்சீன டிராகனின் நீளும் கரங்கள்
இந்தியாவின் மீது சீனா ஒரு போதும் படைஎடுக்காது என்று நம்பிய நேரு ஏமாந்தார்… சீனா இணைந்தால் சார்க் கூட்டமைப்பில் இந்தியாவின் பலம் வெகுவாகக் குறையும்… சீனாவின் உதவி இருப்பதால்தான், விடுதலைப் புலிகளினுடனான போரில் உலக நாடுகளின் கண்டனத்தைக் கூட இலங்கை அலட்சியப்படுத்தத் துணிந்தது என்று இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் இயக்குனர் பி.ராமன் கருதுகிறார்… இதனைத்தான் இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வாளர்கள், “சீனாவின் முத்துமாலைத் திட்டம்” என்று அழைக்கின்றனர்… சீனா போன்ற நாடுகளுடன் தைரியமாக முதுகெலும்புடன் பேச இந்தியாவுக்கு நேர்மைத் துணிவுள்ள அரசியல் தலைமை தேவை…
View More சீன டிராகனின் நீளும் கரங்கள்நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்
இந்த எதிர்ப்பாளர்களின் முக்கிய நோக்கம், அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதை எதிர்ப்பதல்ல; அங்கு அணுஆயுத உற்பத்தி நிகழாமல் தடுப்பதே… இதே ‘நிலநடுக்கம்’ கேரள அரசியல்வாதிகளால் பிராந்திய நலனுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அதை எதிர்ப்பவர்களும், இதே குழுவினர் என்பது ஒரு நகைமுரண்… கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் இப்போது தங்கள் ஜாகையை முல்லைப் பெரியாறுக்கு மாற்றிக்கொண்டு முழக்கமிடத் துவங்கி இருக்கிறார்கள்… இப்போதைய தேவை, தமிழக எல்லை மாவட்டங்களில் அமைதியைத் திரும்பச் செய்வதற்கான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனிவான நடவடிக்கைகளே…
View More நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா
தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக போராடி வரும் சுப்பிரமணியன் சுவாமி பலம் படைத்த ஊழல்வாதிகளின் முக்கிய இலக்காக இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை. இருந்தும் அவர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் மதச்சார்பற்ற, இடது சாரிகள் என்பது ஒரு முரண்நகை. அண்மையில் டி.என்.ஏ இதழில் ஹிந்துக்கள் மற்றும் இந்தியாவின் மீது பாயும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். இது இஸ்லாமியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் எதிர்க்கப் பட்டது; விளைவாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவர் நடத்தி வந்த வகுப்புகளை நிறுத்தியது. இது ஒரு இடது சாரிக் குறுங்குழுவின் முயற்சியில் பேச்சுரிமையே தடை செய்யப் பட்டது போல அல்லவா இருக்கிறது!
View More சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா