சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்… வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்…
View More சிவபிரான் சிதைத்த சிற்றில்Category: சிறுவர்
பிள்ளைத்தமிழும் பியாஜெட்டும்
அண்மையில் சில பிரிட்டிஷ் நாட்டுப்புறவியலாளர்கள் புகழ்பெற்ற ‘London Bridge’ என்கிற ‘சிறுவர்’ பாடல் குறித்து சர்ச்சைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். புகழ்பெற்ற லண்டன் பாலம் கட்டப்பட்ட போது அங்கு நரபலிகள் கொடுக்கப்பட்டதன் நினைவாகத்தான் இந்த பாடல் எழுதப்பட்டது என்றும் மிக அண்மையில் கூட அங்கே நரபலிகள் கொடுக்கப்பட்டதாகவும் ஒருவர் எழுத மற்றொருவர் அதை மறுக்க… ஆனால் பாட்டின் சாராம்சம் ஒரு உண்மையான அல்லது போலியான நரபலி நினைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. நாம் நம் குழந்தைகளுக்கு இந்த புத்திசாலித்தனமான விஷயங்களைத்தான் நாகரிகம் என்கிற பெயரில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்…
View More பிள்ளைத்தமிழும் பியாஜெட்டும்சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…
அம்புலிமாமாவை எடுத்துக் கொள்ளுங்கள். மிக எளிதாக ‘அம்புலிமாமா’ கதை என இப்போது சிறுபிள்ளைத்தனமான விஷயங்களை சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மையில் ’அம்புலிமாமா’ என்பது அப்படி வளர்ந்தவர்களின் சின்னத்தனத்துடன் ஒப்பிடக் கூடிய சமாச்சாரமே அல்ல. கிழக்கு கடற்கரையில் பிரதீபத்தை தலை நகராக கொண்டு ஆண்ட சந்திரத்வஜனை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? … காந்தி-நேரு அதிகார அமைப்பால் பாரதத்தின் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட தேசபக்தர்களை -பாகா ஜதீன் முதல் படேல் வரை- சித்திர கதை வடிவாக சிறுவர்களுக்கு அளித்தது அம்புலிமாமா. அது மட்டுமல்ல….
View More சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…அக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்
கந்த சஷ்டி முருகனின் விழா. முருகனை ’அக்னி புஷ்பம்’ என்பர். அந்த அக்னி புஷ்பத்தை அக்னிச் சிறு பேழைகளின் முகப்பு எவ்வாறு சித்தரிக்கிறது? பேரா.என்.சுப்ரமணியத்தின் ‘அமுதசுரபி’ நூலகத்தில் உள்ள தீப்பெட்டி பட சேகரிப்பில் இருந்து ஒன்பது சித்திரங்கள்…
View More அக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்ஆசிர்வதியுங்கள் அனந்த் பை
அமர்சித்திரகதை அவை அனைத்துக்கும் மணிமகுடம். காமிக்ஸ் என்கிற சித்திரகதை வடிவத்தையும் இந்திய பண்பாட்டின் சிறந்த பொக்கிஷங்களையும் இணைத்துக் கொடுத்த ஒரு புத்துயிர்ச்சி அற்புதம். இதன் பின்னணியில் இருந்த மனிதர் அனந்த் பை. அல்லது ’பை மாமா’ (Uncle Pai) என அழைக்கப்பட்டவர்… ஒரு காமிக்ஸ் இப்படி தொடர்ந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளுடன் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது இதுவே முதல்தடவையாக இருக்கும்… அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம்.
View More ஆசிர்வதியுங்கள் அனந்த் பைகபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
காங்கிரசும் கழகமும் இயற்கையான அணி போலும். […] அதிலும் கபில் சிபல் ஊழலில் ஒரு “கலைஞர்”. [….] கபில் சிபல் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை நீக்கி சீர்திருத்தம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார். […] தேர்வு எழுதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களைவிட தேர்வைப் புறந்தள்ளிய மாணவர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள். கலைஞர் உத்தி போல் தெரியவில்லை? என்னே புரட்சி! […] கோடிகளைக் குவிக்கச் செய்யும் மோசடியின் முகப்பூச்சு இந்தப் பள்ளிக் கல்விச் சீர்திருத்தம்.
View More கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!தேவை: சமச்சீர் வசதிகள்
அரசின் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் முதலில் தன்னிறைவு மனநிலை பெறவேண்டும். ஆசிரியப் பணியின் உன்னதத்தை அவர்கள் உணர வேண்டும். ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும். அப்போதுதான் சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெறும். இல்லையென்றால் இது வெறும் சமச்சீர் பாடத்திட்டமாக மட்டும் நின்று போய்விடும்.
View More தேவை: சமச்சீர் வசதிகள்பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்
பவித்ரா ஸ்ரீனிவாசன் பல பரதநாட்டிய விற்பன்னர்களிடம் பயிலும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீமான் தனஞ்சயன் நடனத் தம்பதியரிடம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், ‘பத்மபூஷன்’ கலாநிதி நாராயணனிடம் கற்றுக்கொள்ளும் பெரும்பேற்றையும் பவித்ரா பெற்றுள்ளார். முதல் முறையாக குறுந்தகட்டில்(CD), பாரம்பரிய நடனத்தை வெளியிட்டவர் இவரே. கிருஷ்ண கான சபா இவருக்கு ‘பால சரஸ்வதி’ பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. பாரத் கலாச்சார் ‘யுவகலா பாரதி’ பட்டம் வழங்கியுள்ளது. மியூசிக் அகாடமி, திறமை மிக்க இளம் கலைஞருக்கான ‘எம்ஜியார் விருது’ வழங்கியுள்ளது.
View More பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்தீராத விளையாட்டுப் பிள்ளை
… யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். [பின்னால் சகடாசுரனை உதைப் பதற்கு ஒத்திகை பார்த்திருப்பானோ?]ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம் ….
View More தீராத விளையாட்டுப் பிள்ளைபாலராமாயணம் – 2
சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம்.
அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்….
View More பாலராமாயணம் – 2