“வேதம் புதுமை செய்” என்று தான் எழுதியதைத் தாமே செய்தும் காட்டியிருக்கிறார் பாரதியார் என்பது ஆசிரியரின் கருத்து. ஶ்ரீ அரவிந்தரின் “யோகரகசிய ஞானமொழி” என்பதை பாரதியார் நன்கு உள்வாங்கித் தனது வீரியமிக்க மொழியில் பலவாறு வெளிப்படுத்துகிறார்.. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வரிகளே பாரதி உண்மையில் எழுதியவை, அவரது இதயத்தைப் பிரதிபலிப்பவை. இதனை “சாதி பெருமையில்லை பாப்பா” என்று திருத்த முயன்ற திரிபு முயற்சிகளை ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக மறுதலிக்கிறார் ஆசிரியர்.. இதுவரை யாரும் தொடாத, வெளிச்சம் பாய்ச்சாத பாரதியின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொண்டு வருகிறது என்பதால் மிகவும் முக்கியமான நூலாகிறது…
View More வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்Category: இலக்கியம்
ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்பு
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவின் ஓர் அங்கமாக பாகவதத்தின் இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை விசேஷமாக வாசிப்பது என்பது பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது… நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமே கண்ணன் அருளமுதம் தான், ஆயினும் கிருஷ்ண ஜயந்தி என்றால் அது பெரியாழ்வாருக்கு உரிய நாள்…
View More ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்புஎப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?
தலித் பட்டிக்குள் அடைக்கப்பட்ட – இத்தனை பேரின் – வாழ்க்கையும் வேறு; வரலாறும் வேறு – நிலம் பறிபோன பின்னும் – பிரிட்டிஷாரால் பீ அள்ளவைக்கப்பட்டவர்களில் – நீ இருந்ததில்லை.. ஆதித்தாய் அடிவயிற்றில் இருந்து கத்தியபடி – நம் கண் முன்னே கதறி அழுது சுட்டிக்காட்டுகிறாள் – அவள் கதறல் உன் காதில் விழவில்லையா?…
View More எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…
அடிக்கிறவனின் கர்த்தர் அப்படித்தான் – அடிவாங்குபவனை – அடி வாங்கிக் கொண்டே இருக்கச் சொல்வான் – கொஞ்சமாவது – சுய மரியாதையும் சொரணையும் இருந்தால் – அடிப்பவன் கன்னத்தில் திருப்பி அறைவான்.. நீயும் உன் தென்னகக் கூட்டுக் களவாணிக் கும்பலும் – ராஜபக்சேவுடன் சேர்ந்து காட்டினீர்களே – அதுதானே உன் கட்சியின் அபய ஹஸ்தம்..
View More திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…உனக்கு அது லவ் எனக்கு அது ஜிஹாத் [கவிதை]
ஓர் ஓநாய் புள்ளி மானைத் துரத்துவதைப்போல் – அன்பே –
உன்னை நான் துரத்துகிறேன் – நீ முழுவதும் எனக்கு மட்டுமே – அதனாலேயே கூர் நகங்கள் கொண்டு – சுதந்தரம் முழுவதுமாகக் கிழித்துப் போடுகிறேன் – உன்னை எனக்குள் முழுவதுமாக –
உள்வாங்கிக் கொண்டபின் –
உன் சகோதரியைப் பின்தொடர ஆரம்பிப்பேன்…
சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?
போரிட்டு மாண்டு வீர சுவர்க்கம் புகுந்த வீரனின் நடுகல்லை உயர்வு நவிற்சியில் ஏற்றி வைத்துப் பாடியது இது. போர் வெற்றியைக் கூறும் வாகைத் திணையின் பேசுபொருளுக்குள் வைத்து இதனைப் பார்க்க வேண்டும். இந்த ஒரு பாட்டை வைத்துக் கொண்டு நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு எந்த தெய்வ வழிபாட்டையும் தமிழர் ஏற்கவில்லை என்று கருத்துக் கூறுவதெல்லாம் அதீதம், அபத்தம். இதே புறநானூற்றில் மற்ற பல பாடல்களில் சிவன், திருமால், கொற்றவை, இந்திரன், முருகன் ஆகிய தெய்வங்களைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்..
View More சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?பெரியார் மண்
ஜாதிப் பிரச்னைக்கு தீர்வு ஜாதி சீர்திருத்தத்தில்தான் இருக்கிறது. ஜாதி ஒழிப்பில் இல்லை.கோவில் கருவறைக்குள் நுழையவிடாவிட்டால், நாமே கருவறையே இல்லாத ஒரு புதிய கோவிலைக் கட்டி அனைவரையும் கும்பிடவைக்கவேண்டும். அனைத்து ஜாதியினரில் இருந்தும் அர்ச்சகர்களை நியமித்து பூஜைகள் செய்யவேண்டும். சம்பிரதாயக் கடவுளுக்கு மாற்று நவீனக் கடவுளே
View More பெரியார் மண்ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்
ரிக்வேதத்தில் அறம் என்னும் சொல் 35 இடங்களில் கீழ்க்கண்டவாறு வருகிறது. இச்சொல்லின் முக்கிய பொருள் – போதும் என்ற நிலை, த்ருப்தி, நிறைந்த நிலை. ரிக்வேத சொல்லை அரம் என்று கூறாமல் வேண்டுமென்றே அறம் என்று கூறக் காரணம் என்ன? என்று கேட்கலாம். புறம் என்னும் சொல்லிற்கு சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஊர், மதில், உடல் என்றெல்லாம் பொருள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறன் என்ற சொல்லும் இவ்வாறே… அறம், ருதம் இரண்டு சொற்களும் ‘ரு’ என்னும் தாதுவில் (வேர்) இருந்து வருகின்றன. ருதம் என்றால் உண்மை, இயற்கையின் நியதி என்று பொருள்.. ஆரியன் என்னும் சொல்லுக்கும் இதே வேர் தான்.. தமிழில் உள்ள “அறம்” எனும் சொல், இந்த ரிக் வேத சொல் “அறம்” என்பதுடன் தொடர்புடையதா?..
View More ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்
உங்கள் பெரியாரால் *** கதை என்று இழிவு படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா? பெரியார் அப்படி என்ன சொன்னார்?… “மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே.. சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன்…
View More கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வை
சில சம்ஸ்க்ருதச் சொற்கள் தமிழில் வருகையில் வேறு பொருளில் கையாளப்படுகின்றன. “தனது” என்ற பொருள் கொண்ட “நிஜம்” என்ற சம்ஸ்கிருதச் சொல்லை “உண்மை” என்பதற்குத் தமிழன் கையாள்கிறானே, அவன் ஆன்மாவையே உண்மை என்று புரிந்துக்கொண்டவன் என்று தெரிகிறது.. அரசிகளுக்கும், இளவரசிகளுக்கும் பேடிகள் தோழிகளாய் இருந்ததால் “அலி ” (சம்ஸ்கிருதத்தில் தோழி) என்ற சொல்லாடல். அதீதக் காம விகாரத்தை வெறும் புரத்தோற்றமாகக் கருதியதால் “ஆபாஸம்” (தோற்றம்). தமிழகத்தின் வைதீகர்களுக்கிடையே சில பரிபாஷைகள் உள்ளன. “த்ராபை” என்றால் வீணானவன் என்று பொருள். இது வேதமந்திரத்திலிருந்து வருகிறது..
View More தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வை