சாமி, நான் அல்லாருக்கும் நன்மையத்தானே செஞ்சேன்? அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன்? இல்லையே சாமி! நாலு வார்த்தை அன்பாப் பேசுங்கனுதானே நானு நெனச்சேன். அது தப்பா சாமி? அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி! அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன்? பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன் சாமி ஒரு சொல்லு நான் கேக்கலே? இதுதான் சாமி என் கேள்வி! எனக்குப் பணம், காசு, சொத்து எதுவும் வேணாம். நல்ல சொல்லுதான் சாமி வேணும்.
View More தகுதி யாருக்கு? [சிறுகதை]Category: இலக்கியம்
ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…
“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா? எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்” என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்…
View More ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…காசி[நன்னகர்]க் கலம்பகம்
முக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட்களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக் கின்றன… குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம் என்றால் கிளி என்றும் பொருள்). பால் பருகும் அன்னமே! நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன்பொருட்டு விடுத்தாள் என்று சொல் என்கிறாள். இவளுக்கு உண்ணும் உணவும் தேவையில்லை (அன்னம் என்றால் உண்ணும் உணவு என்றும் பொருள்)…
View More காசி[நன்னகர்]க் கலம்பகம்பாரதி மரபில் ஜெயகாந்தன்
பாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். பாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது… பாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு. சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற நிலைதான் பொருத்தமானதாக இல்லை….
View More பாரதி மரபில் ஜெயகாந்தன்அஞ்சலி: ஜெயகாந்தன் நினைவில்..
நாவல்கள், சிறுகதைகள், அரசியல், சமூக விமர்சனங்கள், மேடைப் பேச்சுக்கள், திரைப்பட இயக்கம் என பல தளங்களில் வியாபித்து நிற்கிறது அவரது ஆளுமை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் அடியொற்றி வெளிப்பட்டது அவரது சத்திய ஆவேசம். ஜெயகாந்தனின் மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற பெங்களூர் வாசக வட்டக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமையையும், படைப்புகளையும் நினைவுகூர்ந்து நான் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே…
View More அஞ்சலி: ஜெயகாந்தன் நினைவில்..ரிஷிமூலம் [சிறுகதை]
கண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் “தெரியும்” என்றான். சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான்….
View More ரிஷிமூலம் [சிறுகதை]வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1
சரஸ்வதி இலக்கிய மாதப் பத்திரிகையை, நடத்தி வந்த வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் கூட நடத்தி வந்திருக்கிறார். தமிழக அரசியலிலும் இந்திய அரசியலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது… அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழில் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது… அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவென் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள. காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம். இந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான்….
View More வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1சங்க இலக்கியமும் சைவர்களும் – 2
சங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.. எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார். அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு இடத்தில் மற்றொரு உயிருடன் ஏதோ ஒருவகையில் உறவு உடையதாகும்… புறநானூற்றில், புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலர், நக்கீரர், பரணர், நல்லுருத்திரனார், நல்லந்துவனார் போன்றோர்களின் பாடல்களோடு, சிற்றினம் என ஆன்றோரால் கடியப்பட்டார் சூழலில் அவரோடுகூடி மதுவும் புலாலும் வுண்டு மங்கையருடன் களித்திருக்கும் புரவலர்களைப் போற்றிப் புகழும் பாடல்களும் உள்ளன. ஊரெரியூட்டுதலையும் உயிர்க்கொலையையும், பெண்களின் கண்ணீர்க்கம்பலையையும் வீரம் எனும் பெயரால் நியாயப்படுத்தலை ஆன்மநேயத்தை மக்களிடையே பரப்ப விரும்பும் துறவிகள் எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்? சைவப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் உகந்தனவற்றை ஏற்றுப் போற்றியே வந்துள்ளனர்…
View More சங்க இலக்கியமும் சைவர்களும் – 2சங்க இலக்கியமும் சைவர்களும் – 1
சங்க இலக்கியத்தைப் பேசவந்த எழுத்தாளர் சைவத்தையும் சாடியுள்ளார். ஒரு பயிலரங்கில், ‘ சைவ சமயவாதிகள் இலக்கியத்திற்கு எதிராக இருந்ததால் தான் அவ்விலக்கியங்கள் மக்களிடம் பரவவில்லை’ என்று ஒரு பேராசிரியர் உரத்துப் பேசினார். இக்கருத்து எந்த அளவுக்கு உண்மை எனத் தமிழறிஞர்கள் சிந்திக்க வேண்டும். முழுமுதற்கடவுளாம் சிவபரம்பொருளைச் சங்கப்புலவர்கள் அருந்தவத்தோன், ஆதிரைமுதல்வன், ஆலமர்செல்வன், ஆனேற்றுக் கொடியோன், கொன்றையங்கலந் தெரியலான், பைங்கட்பார்ப்பான், மணிமிடற்றந்தணன், முக்கட்செல்வன் என்று சைவர்கள் இறும்பூது கொள்ளும் அளவிற்குப் பல்வேறு சிறப்புப் பெயர்களாற் புகழ்ந்து கூறினர். இப்பெயர்களெல்லாம் சிவபரத்துவத்தை விளக்கும் காரணப் பெயர்களாம்… திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய திருமுறையாசிரியர்கள் பலரும் சங்கத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிந்தேயிருந்தனர் என்பதற்கு அவர்தம் அருளிச் செயல்களிலிருந்து சான்றுகள் கிடைக்கின்றன. பத்தி இலக்கியங்கள், குறிப்பாகத் திருமுறைகள் உயர்மக்களுக்கு ஆகா என விலக்கப்பட்ட கைக்கிளை பெருந்திணைகளை பத்தியுணர்வின் பெருக்கினைப் புலப்படுத்தும் உத்திகளாக மாற்றிக் கொண்டன. உயர்குடி மக்களுக்கு ஆகா எனத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் ஒதுக்கிய இத்திணைகளுக்குத் திருமுறைகள் உயர்நிலை யளித்துத் தழுவிக்கொண்டன…
View More சங்க இலக்கியமும் சைவர்களும் – 1பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்
நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன… ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன? தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?….
View More பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்