காந்திமதியம்மன் பிள்ளைத்தமிழ் நெல்லை நகரில் கோவில் கொண்டிருக்கும் காந்திமதி அம்மையின் பேரில் அழகிய…
View More மதியும் காந்திமதியும்Category: இலக்கியம்
இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!
தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள் இது.
அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, நகைச்சுவை என்று அவன் தொடாததில்லை. தொட்டுத் துலங்காததில்லை.
ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அந்த ஞானத்தால் தமிழை வளப்படுத்தினான்.
View More இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!அக அழகும், முக அழகும் – 2
போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது…. சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்?
View More அக அழகும், முக அழகும் – 2விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை
மீண்டும் எழுவாய்
இது உறக்கம்தான் மரணமல்ல
புது வாழ்வில் விழித்தெழும்
துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன்
கமலமலர் விழிகளின் சிறு அயரல்
ஓ சத்தியமே!
உன்னை வேண்டி நிற்கும் உலகம்
உனக்கென்றும் அழிவில்லை
முருகன் அலங்காரப் பாடல்:
திருச்செந்தூர் முருகனைப் பற்றிய ‘அலங்காரம்’ என்னும் அழகிய மரபுவழிப் பாடலின் வரிகள் மற்றும் அதன் ஒலி வடிவம் – திருமதி ஜயலக்ஷ்மி குரலில்.
View More முருகன் அலங்காரப் பாடல்:அக அழகும், முக அழகும் – 1
குழந்தை முருகனின் தூய பேரெழில் சூரன் உள்ளத்தில் இருந்த அக இருளை, அஞ்ஞான இருளை அகற்றி புதிய ஞானத்தை உண்டாக்கி விடுகிறது…. அதுவே கருமையும், தண்மையும், இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இந்நான்குமே ஒன்றாக அமைந்த இராமனுடைய பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆனது….
View More அக அழகும், முக அழகும் – 1அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்
அழகிய மணவாள தாசர் என்ற ஓர் அடியவர்; ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ என்றும் அழைப்பர். இவர் எழுதியது ‘அஷ்டபிரபந்தம்’ என்னும் நூல். எட்டு நூல்களின் தொகுப்பான இந்த நூலில் ‘திருவரங்கக் கலம்பகம்’ என்னும் நூலும் அடங்கும். திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது…
View More அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்கம்பராமாயணம் – 15 (Kamba Ramayanam – 15)
திருமாலுடைய சங்கம் (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), தண்டம் (கௌமோதகி – கதை), வில் (சார்ங்கம்), வாள் (நாந்தகம்) ஆகிய ஐந்து ஆயுதங்களையும் பொன்னால் செய்வித்துச் சங்கிலியில் கோத்து அணிவிக்கப்பட்ட ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது… (பாடல்கள் 56-61 End of Canto of Country)
View More கம்பராமாயணம் – 15 (Kamba Ramayanam – 15)கம்பராமாயணம் – 14 (Kamba Ramayanam – 14)
‘செவிநுகர் கனிகள்’ என்ற ஆட்சியே பின்னால் பாரதியை ‘இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாடவைத்தது. பின்னால், அயோத்தியா காண்டத்தில், இராமனைத் திரும்ப அழைத்து வருவதற்காகப் பயணப்படுவதை மக்களுக்கு அறிவிக்குமாறு சத்ருக்கனனிடம் பரதன் சொல்கிறான்… பாடல்கள் 51-56)
View More கம்பராமாயணம் – 14 (Kamba Ramayanam – 14)கம்பராமாயணம் – 13 (Kamba Ramayanam – 13)
இளம்பெண்களின் இனிமை நிறைந்த, குழறலான மழலைப் பேச்சை ஒத்துக் குயில்கள் கூவின. அவர்களுடைய நடையின் ஒசிவைப் பார்த்தே மயில்கள் நடனம் பழகிக் கொள்கின்றன. அவர்களுடைய பற்களின் வெண்மையையும் பிரகாசத்தையும் ஒத்த முத்துகளையே சங்கினங்கள் ஈனுகின்றன (பாடல்கள் 46-50)
View More கம்பராமாயணம் – 13 (Kamba Ramayanam – 13)