திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் இன்றும் குழப்பம் தொடர்கிறது. திருவள்ளுவரின் காலம், ஜாதி, சமயம், பல்வேறு குறட்பாக்கள் எடுத்தாளும் நூல்கள், கருத்துகள், சர்ச்சைகள் என பல கோணங்களிலிருந்தும் வள்ளுவனையும் குறளையும் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல் இது. நூலாசிரியர் ஜனனி ரமேஷ் மிகுந்த முயற்சியெடுத்து, பாடுபட்டு இதை உருவாக்கியிருக்கிறார். திருக்குறள் ஆர்வலர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நூல் இது.

View More திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்

மணலில் மாடம் கட்டி, சங்குச் சிப்பிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, குருக்கத்திப் பூவாலான சின்னப் பொன் சுளகில் தேனெடுத்து உலை வைத்தோம். ஆம்பல்பூத் தீயைக் கவிழ்ந்து படுத்து ஊதி ஊதி முகம் வேர்த்துக் கிடக்கிறோம். முருகா, சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே.. திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில் வரும் அழகிய பாடல்கள் இவை. இவற்றில் என்னவொரு நெஞ்சையள்ளும் தமிழ்மணம். அதையும் தாண்டி, இப்பாடல்களில் வரும் மணல்வீடு, சிறுவீடு வெறும் குழந்தை விளையாட்டு மட்டும் தானா என்றும் தத்வார்த்தமாக, ஆன்மீகமாக யோசிக்க இடமிருக்கிறது….

View More இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்

மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்

அருணகிரிநாதரைப் போல மற்றொரு மேதமையை வேறெங்கும் காணமுடியுமா என்பது தெரியவில்லை. அவர் வேறெந்த மொழியில் பிறந்திருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள். தமிழ் மக்களோ அவரை பத்தோடு பதினொன்று என்பது போல பார்க்கிறார்கள்… வாழ்க்கையின் ஒருவித உள்ளீடற்ற தன்மையை சொல்லி இப்படி பிறந்து வாழ்ந்து முதுமையடைந்து நோயுற்று மரணமடையப் போகிற நான் அந்த முடிவுக்கு முன் உன் கிருபையை பெறுவேனா என கேட்கிறார். அடுத்த பகுதியை பாருங்கள்..

View More மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்

கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்

காலத்தால் அழியாத வெகு சில கலைஞர்கள் தெய்வத்தால் அனுப்பபடுவார்கள், முதலில் தாங்கள் யாரென…

View More கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்

தெய்வங்களும் ஊடலும்

‘நீர்’ என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை! பொதுவாகச் சொல்வதுபோல் குறிப்பாகக் கூறுகிறாள் உமையவள்! “பித்தன்…

View More தெய்வங்களும் ஊடலும்

காளிதாசரின் சாகுந்தலத்தில் நான்கு பாடல்கள்

“காவ்யேஷு நாடகம் ரம்யம் நாடகேஷு சகுந்தலா தத்ராபி ச சதுர்தோSங்க: தத்ர ஸ்லோக…

View More காளிதாசரின் சாகுந்தலத்தில் நான்கு பாடல்கள்

தமிழ் ஒரு மந்திர மொழி

தமிழ் இறைவனுக்கான மொழி இறைவன் தன்னை பாட தானே உருவாக்கிய மொழி என்பது அதன் பக்தி இலக்கியங்களில்தான் தெரியும். பக்தியில் மூழ்கிய தமிழன் எவனோ அவன் அழியா காவியங்களை இயற்றினான், தங்கத்தில் பதிக்கபட்ட வைரம்போல் தமிழ் அவன் மூலமாக ஒளிவீசிற்று. சிங்கத்தின் பால் தங்க கிண்ணத்தில் மட்டும் கெடாது என்பது போல் தமிழின் சுவை பக்தி இலக்கியங்களில் கெடாது சுவைக்கும்…

View More தமிழ் ஒரு மந்திர மொழி

தெய்வங்கள் ஊடுவரா?!

            நாம் வழிபடும் தெய்வங்களுக்கு மனித வடிவுகளைக் கொடுத்து அழகு பார்த்தும், அவர்கள்…

View More தெய்வங்கள் ஊடுவரா?!

யாரே அழகுக்கு அழகு செய்வார்?

மணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்ற மகள் பிறந்தவீட்டுக்கு நெடுநாட்கள் கழித்து வருகிறாள். அவளைக் கண்ட தாயின் தவிப்பும் அங்கலாய்ப்பும், கணவனைப் பற்றிய மகளின் பெருமிதமும் இக்குறுங்காவியத்தில் சொல்லோவியம் ஆக்கப்பட்டுள்ளன. இதில் மகள் உமை. தாய், இமவானின் மனைவியாகிய மேனை. பரமேசுவரனைக் காதலித்து விரும்பி மணந்து கயிலைக்குச் சென்ற உமை நீண்ட காலத்துக்குப் பின் ஒருநாள் தனது இரு மக்களுடனும் தாய் வீட்டுக்கு வருகிறாள்.

View More யாரே அழகுக்கு அழகு செய்வார்?

அஞ்சலி: கி.ராஜ்நாராயணன்

கிராமிய வாழ்க்கையின் பல்வேறு வண்ணங்களையும், விவசாயம் சார்ந்த நுண்தகவல்களையும், பாலியல் வேடிக்கைகள், சீண்டல்கள் உட்பட ஆண்-பெண் உறவின் பல பரிமாணங்களையும், அபூர்வமான கர்ணபரம்பரைச் செய்திகளையும் கதைசொல்லும் போக்கில் இயல்பாக எந்த சுவாரஸ்யக் குறைவுமில்லாமல் அள்ளித்தெளித்துச் செல்வது அவரது எழுத்து….
பூர்விக பூமியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட வரலாற்று உண்மைகள் எவ்வளவோ அவரிடம் பகிரப்பட்டிருந்த நிலையிலும் இடது கரத்தின் அழுத்தத்தினால் அவரால் அதை எழுதமுடியாமல் போனது. அவருடைய முன்னோருக்கு இருந்த இஸ்லாமிய அச்சமும் மிரட்டலும் இருந்திருந்த நிலையிலும் இங்கு வேறுவகையான நெருக்கடிகள் அவருக்கு இருந்தன…

View More அஞ்சலி: கி.ராஜ்நாராயணன்