வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம்… இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்… ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய்… “பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்…”
View More படிவங்கள் எப்படியோ?Category: ராமாயணம்
கம்பன் பாடிய குறள்
இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல… மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்…
View More கம்பன் பாடிய குறள்அவ்வரங்கள் இவ்வரங்கள்
இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது… கைகேயி இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள்… இராமன், ‘என் தாய்’ என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்… “இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள் சீதை… கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.
View More அவ்வரங்கள் இவ்வரங்கள்நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்
பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது… சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள்… தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?
View More நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்கம்பன் கண்ட சிவராம தரிசனம்
நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை… இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?
View More கம்பன் கண்ட சிவராம தரிசனம்அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி
தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம். ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான்.
அரக்க மகளான திரிசடையை ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, அன்னை என்று விளிக்கிறாள். என்ன காரணம்?…
View More அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கிமலைக்குல மயில்
ராமாயண நாயகனான ராமனின் மனைவி சீதை. எதிரணித் தலைவன் இராவணன் மனைவி மண்டோதரி. இருவரும் சிறந்த கற்புக்கரசிகள். அவர்களுக்கு நடுவில் வைத்துப் போற்றப்படுகிறாள் தாரை. அவளை “மலைக்குல மயில்” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறான் கம்பன்….
View More மலைக்குல மயில்பகைவனும் பாராட்டும் பகழி
பொதுவாக உலகில் ஒருவரை நண்பர்கள், உறவினர்கள் பாராட்டுவார்கள். ஆனால் ஒருவருடைய பகைவனே அவரைப் பாராட்டுவது என்பது மிகவும் அருமை. அதிலும் யாரைப்பற்றி, யாருடைய வீரத்தைப் பற்றி முன்னொரு முறை மிக இழிவாக, மிக ஏளனமாகப் பேசினானோ அவரைப் பற்றியும் அவருடைய வீரத்தைப் பற்றியும் மனம் திறந்து பாராட்டுகிறான். ஒரு தடவை அல்ல பல தடவை. பலவகையாகப் பாராட்டுகிறான். பாராட்டுபவர் யார்? பாராட்டுப் பெறுபவர் யார்?…
View More பகைவனும் பாராட்டும் பகழிகம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)
நன்கு ஆலோசித்துத் திட்டமிடப்பட்டு எழுப்பப்பட்டுள்ள (நகர) மதில் சுவரைச் சுற்றிலும் உள்ள பாறைகளை எல்லாம் பிளந்து, மிக ஆழமாக உருவாக்கப்பட்ட அகழிகளில் பொங்கி எழுவதும், மீள வீழ்வதுமாகத் திரியும் பெரிய முதலைகளைப் பார்த்தால், அடக்க முடியாத மதம்பிடித்த யானைகள் (தம்முடைய மதமயக்கத்தினால்) பெரிய கப்பல்கள் இயங்குகின்ற கடலி்ல் வீழ்ந்து, அதிலிருந்து மீளமுடியாமல்… (Verses 16-20)
View More கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!
மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் “இஸ்லாமுக்கு எதிரானவை” என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன…
View More ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!