..உற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள்…எரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!.. நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். ..
View More வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?Category: சமூகம்
இந்து சமுதாயம், வாழ்க்கை முறை, சமூக பிரசினைகள், தீர்வுகள்…
புனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை?
இவ்விரு போராட்ட களங்களில் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் போர்க்களத்துக்குத் தளம் அமைத்துக் கொடுத்து அதில் கலந்து கொண்டு முன்னணியில் நிற்போர் யாரென்று பார்த்தால் பல கிறிஸ்தவப் பாதிரிமார்கள் எனும் போதுதான் மக்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. ..நாடு முழுவதும் 22 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 2009-10ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளன என்றும், இதில் தமிழகத்தில் மட்டும் 3218 நிறுவனங்களுக்கு இந்த அயல் நாட்டுப் பணம் பாய்கிறது என்பதையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது…வெளிநாட்டு நிதி என்று நாம் பொதுவாகக் குறிப்பிடும் இந்த நிதி குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது.
View More புனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை?சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்
இந்தியாவில் சாதி இணக்கத் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது: … சாதி இணக்கத் திருமணங்கள் செய்யாமல் இருப்பதால் இந்திய சமூகம் நாளுக்கு நாள் உடலளவில் பலகீனம் அடைந்து வருகிறது… அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான வியாதிகளும், ஏனைய தீமைகளும் வரவேற்கப்படத் தயாராக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியவில்லையா ?
View More சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்பள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]
பெரியவர்கள் ஒரு மணிநேரம் கூட செய்ய முடியாத வேலைகளை நாள் பூராவும் செய்யும்படி குழந்தைகள் திணிக்கப்படுகிறார்கள்… மாணவர்கள் சிறைச்சாலையில் இருந்ததாகவே நான் நினைத்தேன். அவர்களைக் கைதிகளாகத்தான் பார்த்தேன். ஏவலாட்கள் வேலையைத் தான் மாணவர்கள் செய்தார்கள். அவர்கள் மூளை வகுப்பில் இல்லை. பள்ளி என்பது முட்டாள்களைப் பழக்கும் இடமாகவே எனக்குத் தெரிந்தது. இது ஒரு கசப்பான உண்மை… கேள்வி கேட்கும் ஆசிரியர்கள் சரியான பதிலுக்காக மட்டுமே தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்…
View More பள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை
குடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு… நீரை “வீணாக்கும்” விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் டாஸ்மாக் தரகருக்கும் சேல்ஸ்மேனுக்கும் குறைவான வரியும் விதிக்கப்பட வேண்டும் – இது காங்கிரஸ் நியாயம்… ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கு இணையாக, நதிகளைத் தாயாகவும் கடவுளாகவும் வழிபடும் பாரதப் பண்பாட்டில் வந்த நீங்கள் செயல்படலாமா மன் மோகன் சிங் அவர்களே?….
View More புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வைஅமெரிக்காவிலும் ஆலமரம்
..உட்பிரகாரச் சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும் பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்சனேயர், அய்யப்பன் என ஒவ்வோரு சன்னதியும் மிகுந்த அழகோடு நிர்மாணிக்கப்பட்டு நேர்த்தியாக பராமபரிக்கப்பட்டுவருகிறது. ..200 வருடங்களாக கிருத்துவப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வைப் பதிவு செய்த பெருமை இவருடையது…
View More அமெரிக்காவிலும் ஆலமரம்பள்ளிக்கல்வி – 1
இடைநிலைக்கல்வி போதிப்பவனாக சுமார் 35 ஆண்டுகள் இருந்ததால் பல உண்மைகளை உணர நேர்ந்தது.…
View More பள்ளிக்கல்வி – 1சுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்
சுதேசி என்ற கோட்பாடு ஒரு தனியான கோட்பாடு அல்ல. சுதேசி என்பது உற்பத்தியாளர் வியாபாரிகள் நுகர்வோர் மூவரும் இணக்கமாக பணி செய்தால் தான் வெற்றி பெறக் கூடிய கோட்பாடு. எனவே இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயலாற்ற தகுந்த களம் அமைத்து வருகிறது சுதேசி இயக்கம். கம்யூனிஸ்ட்டுகளின் விதேசி எதிர்ப்புக்கும் சுதேசிகளின் எதிர்ப்புக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் உண்டு.. முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாலும் சரி கம்யூனிஸ பொருளாதார கட்டமைப்பாலும் சரி இங்கே இருக்க கூடிய பாரம்பரிய இயற்கையை ஒட்டிய தொழில் நுட்பத்தை ஞானத்தை அழித்து விட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்க இயலாது
View More சுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை.
ஆபிரஹாமிய மதங்களின் வரலாறு என்பது உண்மையில் போர்களின் வரலாறுதான்… போர்களின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாக, ”அழிவும் நாசமும் போர்களின் விளைவு” என்பதை ”அழிவும் நாசமும் கடவுளின் விருப்பம்” என்று ஆபிரஹாமியம் மாற்றியமைத்தது… பிற கடவுளர்களை இழிவுறுத்தல், பிற மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்தல், அவர்களது பண்பாட்டு அம்சங்களை கேவலப்படுத்துதல், வழிபாட்டுத்தலங்கள் உடைத்தெறியப்படுதல் ஆகியவை இறைவனுக்கான புனிதக் கடமை என்கிற பெயரில், அற விழுமியங்களாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கைமாற்றித்தரப்பட்டு மதப்பரவல் முயற்சிகளால் பரவிக்கொண்டே செல்கின்றன. இதன் நீண்ட கால விளைவு…
View More ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை.வேல் உண்டு, பயமேன்?
யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது…. இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்.. யாழ். மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்.. நல்லூரில் கந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர்.
View More வேல் உண்டு, பயமேன்?