சம்ஸ்கிருத மொழியில் பெரும்புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளைக் குறித்து, அவர் ஒரு தனித்தமிழ் ஆதரவாளர், வேதத்தை ஏற்றுக் கொள்ளாத சைவர் என்பது போன்ற பொய்யான பிம்பம் தமிழ்ச் சூழலில் சிலரால் கட்டமைக்கப் பட்டு வருகிறது. 1903ல் வெளிவந்த கேள்வி-பதில் வடிவில் அமைந்த அவரது இந்த நூல், வேதத்தைக் குறித்த அவரது ஆழமான புரிதலுக்கு சான்றாக உள்ளது. உதாரணத்திற்கு சூத்திரர்-பெண்கள் வேதம் ஓதுதல் குறித்த இந்தக் கேள்வி.. இந்த நூலை முழுமையாக pdf வடிவில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்…
View More வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்Category: சைவம்
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”.
வைதிக மாமணி அப்பர்
அந்தியில் சூரியதேவனை உபாசிக்கின்றனர். அந்த சூரியனும் சிவஸ்வரூபம் அன்றோ? என்கிறார் அப்பர். இக்கருத்து எங்கிருந்து வருகிறது? நேரடியாக வேதத்திலிருந்து தான். “கரிய கழுத்துடைய நீலக்கிரீவராகிய அவரே சிவந்த வர்ணமுடைய இந்த சூரியனாக வெளிக்கிளம்புகிறார். (சூரிய ரூபியாகிய) இவரை இடையர்களும் கூடக் காண்கின்றனர். தண்ணீர் சுமந்து வரும் பெண்களும் காண்கின்றனர். இந்த ருத்திரனை மற்றும் எல்லாப் பிராணிகளும் கூடக் காண்கின்றன” என்கிறது ஸ்ரீருத்ரம்…
View More வைதிக மாமணி அப்பர்காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்
பாரதப்பிரதமர் தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்தும் காசிக்கு காலகாலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்… இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் உள்ளன. புனித யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்… காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளோடு கூட, காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும்…
View More காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட கந்தபுராணத்தை இலங்கை சைவ தமிழர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்துவரும் மரபு உண்டு. ஆனால் நவீன வாழ்வியல் இப்புராண படன மரபை பெரிதும் சிதைத்து விட்டது. இப்பொழுதெல்லாம் புராண படனம் சடங்காகவே சில இடங்களில் நடைபெறுகிறது. இம்மரபை மீளெழுச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்… எனவே, பொருத்தமான 700 பாடல்களை கதை ஓட்டத்திற்கேற்ப தொகுத்து, சப்தசதி என்ற எண்ணிக்கை அடிப்படையில் தேவி மகாத்மிய வடிவிலேயே, இதனை உருவாக்கலாம் என கருதினேன். கந்த மான்மியம் என்று தமிழ் மரபுகேற்ப அதற்கு பெயரிடலாம் என்றும் கருதினேன்…
View More கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடு
முருகனின் விரத நாட்களில் கந்தபுராணம் முழுவதும் 10,500க்கும் மேல் உள்ள பாடல்களை பாராயணம் செய்துவந்தனர் நமது முன்னோர்கள். இன்றைய நிலையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உள்ள பாடல்களை பாராயணம் செய்வது அரிதாக உள்ளது. எனவே கந்தபுராண பாராயணத்தை மீள் எழுச்சி செய்யும் நோக்கில் அனைவரும் பாராயணம் செய்வதற்கு வசதியாக 351 பாடல்களாக சுருக்கி, கலிதோஷம் போக்கும்கந்தபுராணம் என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது…
View More கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடுபழங்காலத்தில் கோவில் வழிபாடு
காசு கொடுத்தால், இப்பொழுது சில கோவில்களுக்குள் முன்னால் சென்று தரிசனம்செய்யலாம். வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தர்ம தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.
இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது. கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.
வயலூர் கோயிலில் அரசு அத்துமீறல், அர்ச்சகர்கள் போராட்டம்
இக்கோயிலில் தலைமுறைகளாகத் தன்னலமின்றி பூஜை செய்து தொண்டு புரிந்து வரும் பாரம்பரிய ஆதிசைவ அர்ச்சர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும். அதைக் குலைக்கும் வகையில் ஆட்களை நியமனம் செய்துள்ள இந்து அறநிலையத் துறைக்குக் கடும் கண்டனங்கள். இது குறித்து கோயிலின் பாரம்பரிய ஆதிசைவ அர்ச்சகர் கார்த்திகேயன் பேசிய மனதை உருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது…
View More வயலூர் கோயிலில் அரசு அத்துமீறல், அர்ச்சகர்கள் போராட்டம்சைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்
இந்த முக்கியமான நூல் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1897-1971) எழுதிய சில நூல்கள் மட்டும் கட்டுரைகளின் நேர்த்தியான தொகுப்பாகும்… சம்ஸ்கிருதமே பாரத நாட்டின் பொதுமொழி; சைவம் என்பது பாரத நாடெங்கும் பரவியுள்ள வேதநெறியில் கிளைத்த சமயமே அன்றி “தமிழர் மதம்” அல்ல என்பதைத் தமிழிலக்கிய ஆதாரங்களிலிருந்தே நிறுவுகிறார்.. 1960ல் வெளிவந்த “நாடும் நவீனரும்” 125 தலைப்புகளின் கீழ் கேள்வி-பதில், விவாதம், கண்டனம், விமர்சனம் என்ற பாணியில் அமைந்துள்ளது. “நவீனர்” என்று ஆசிரியரால் குறிக்கப் படும் சைவர்களை எதிர்த்தரப்பாக்கி விஷயங்கள் அலசப்படுகின்றன…
View More சைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்ஈழத்து அந்தணர் பிரம்மஸ்ரீ இ.கு பூர்ணானந்தேஸ்வரக் குருக்கள்
முகப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆட்சியில் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆபத்து எற்பட்டபோது ஆறுமுக…
View More ஈழத்து அந்தணர் பிரம்மஸ்ரீ இ.கு பூர்ணானந்தேஸ்வரக் குருக்கள்பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனை
பாம்பன் சுவாமிகள் தனித்தமிழ் ஆதரவாளர் என்பதுபோல ’ஆரியத்துக்கு எதிரான அவரை செரிக்க பார்க்கும் பார்ப்பனீய தந்திரம்’ என்றெல்லாம் ஒரு சிலர் அன்பான தனி செய்திகள் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு: உரையிற் பணித்தவாறு வித்தைப் பதினெட்டிலும் வேதமே சிறப்புடைப் பிரமாணமென்றல் பரதகண்டத்துப் பண்டைநூலறிவுடையார் யாவரும் ஒப்பும் ஒரு முடிபினை ஏன்று கொள்ளும் எம்மாலும்… அன்றைக்கு சைவருள் சிலபலர் வேத நிந்தனை செய்ய முற்பட காரணம் வேதத்துள் பலதெய்வ வழிபாடு உண்டு என்றும் வேத சடங்குகள் குறித்த இழிவான பார்வையும். இதற்கான காரணம் முக்கியமாக அன்றுநிலவிய புரோட்டஸ்டண்ட் மனநிலை. அடிமைநிலையில் தளர்வுற்றிருந்த மக்களின் அறிவு காலனிய பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டதும் ஆச்சரியமல்ல. ஆனால் சுவாமிகள் இவற்றை மறுதலிக்கிறார். கன்மகாண்டத்தை அவர் இழிவாகவும் பார்க்கவில்லை. அதனை செய்வோரை அவர் அறியாமையில் இருப்பதாகவும் சொல்லவில்லை…
View More பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனை