பேஸ்புக்கில் இந்து தர்மத்தின் பெருமைகள், இந்து சமுதாய பிரசினைகள் குறித்து பலர் எழுதி…
View More DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்சமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 2
இந்தியாவிலேயே தாழ்த்தப் பட்ட சாதி மக்கள் மற்றவர்களுடன் சமமாக உட்கார்ந்து உணவருந்தச் செய்த முதல் உணவகத்தை 1931ல் சாவர்க்கர் தொடங்கினார். அதில் பரிமாறுபவர்களாக மஹார் சமூகத்தினர் இருந்தனர். தன்னை பார்க்க வருபவர்கள் யாராயிருந்தாலும் முதலில் அங்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வரவேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக அவர் விதித்திருந்தார்… தீண்டாதார் ஆகிவிட்ட சமூகம் மட்டும் இன்று தாழ்ந்தவர்களாக, “பதிதர்களாக” இல்லை. ஒட்டுமொத்த இந்து சமூகமுமே அன்னிய ஆட்சியின் கீழ் தாழ்ந்து போய் இருக்கிறது. தாழ்வுற்று நிற்கும் இந்த ஹிந்து தேசத்தை மீட்கும் தெய்வத்தை, ஹிந்துக்கள் இழந்து விட்ட அனைத்தையும் அவர்கள் திரும்ப்ப் பெறச் செய்யும் ஒற்றுமை தெய்வத்தை நான் “பதித பாவன” என்று அழைப்பேன்…
View More சமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 2அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு…. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது….
View More அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்அரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா?
ஜம்முவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பிரதம வேட்பாளரும், குஜராத்…
View More அரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா?தேவையா நீ பணிப் பெண்ணே? – 2
ஐ டி வேலைக்கு வருபவர்கள் கடும் உழைப்புக்கும் நடுவிலும் சமையல் செய்து பாத்திரம் கழுவி கார் ஓட்டி கார் கழுவி கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வாழ்ந்து கொள்வதில்லையா என்ன? இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துரைத்தனம்?…. இந்தியாவில் இருந்து வேலையாட்களை அழைத்து வரும் உரிமை இவரைப் போன்ற உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. அதை எவருமே முறையாகப் பயன் படுத்திக் கொள்வதில்லை. பிரிட்டிஷ் கால எச்சமாக நாம் அரசாங்க அதிகாரிகளுக்குத் தேவைக்கேற்ற சொகுசு வாழ்க்கைகளை அளிக்கிறோம்…. நேர்மையும், உறுதியும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் செயல் திறனும் சிந்தனைத் தெளிவும் தீர்க்க தரிசனமும் கூடிய தலமை இந்தியாவுக்கு அமைய வேண்டும். அது அமைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஊழலில்லாத நேர்மையான துணிவான பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு வாய்த்து விட்டால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் மீது தானாகவே மரியாதை பிறக்கும். இந்தியாவின் மீது நல்லெண்ணமும் உயர் அபிப்ராயமும் ஏற்படும். இந்தியர்களும் மதிக்கப் படுவார்கள்….
View More தேவையா நீ பணிப் பெண்ணே? – 2தேவையா நீ பணிப் பெண்ணே? – 1
அமெரிக்க அரசாங்கம் இந்தியாவை வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக வற்புறுத்தும் ஒரு கருவியாக, இந்தியாவின் கைகளை முறுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைதை பயன் படுத்தியுள்ளதா? அமெரிக்கா தன் நாட்டு தூதரக அதிகாரிகள் வேறு நாடுகளில் கொலையே செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வற்புறுத்தி விடுதலையைக் கோரி அவர்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது…. அப்துல் கலாம் அவமரியாதை செய்யப் பட்ட பொழுதும், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட பொழுதும், மீனவர்கள் கைது செய்யப் பட்ட பொழுதும் விழிக்காத இந்தியா இப்பொழுது தீடீரென்று தர்மாவேசம் கொண்டு சாமி ஆடுவதின் காரணம் என்ன? சோழியன் குடுமி ஏன் ஆடுகிறது? …. இந்தியாவின் பலவீனங்கள் குறித்தும் ஊழல்கள் குறித்தும் பேசுவதினால் இந்தியா என்னும் ஒரு மாபெரும் தேசத்திற்கு இருக்கும் சுய மரியாதையையும் கவுரவ்த்தையும் மறுத்து விட முடியாது. இங்கு அவமரியாதை செய்யப் பட்டிருப்பது தேவயானி என்றவொரு தனி நபர் கிடையாது. இந்தியா என்னும் ஒட்டு மொத்த தேசமும் அவமானப் படுத்தப் பட்டதாகவே கருதப் படும்….
View More தேவையா நீ பணிப் பெண்ணே? – 1சமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1
“நாய்களையும் பூனைகளையும் தொட்டு உறவாடும் அந்தக் கைகளால், எனது தர்ம சகோதரராக உள்ள அந்தத் தீண்டாதாரையும் தொடுவேன்; இன்று அப்படி செய்ய முடியவில்லை என்றால் பட்டினி கிடப்பேன் என்று விரதம் பூணுங்கள்” 1935ம் ஆண்டு அனைத்து இந்துக்களையும் நோக்கி, சாவர்க்கர் விடுக்கும் கோரிக்கை இது. விநாயக சதுர்த்தி விழாக்களில் தாழ்த்தப் பட்டவர்களை அழைத்து மற்ற அனைவரோடும் அமர வைத்தால் மட்டுமே அந்த விழாவில் வந்து உரையாற்றுவேன் என்று நிபந்தனை விதித்தார்…”நான் இறக்கும் போது, எனது சடலத்தை தேண்ட்களும், டோம்களும் (தாழ்த்தப் பட்ட சமூகத்தினர்), பிராமணர்களும் பனியாக்களும் சேர்ந்து சுமந்து வந்து, ஒன்றாக இணைந்து எரியூட்ட வேண்டும். அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும்”…
View More சமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1நிலமென்னும் நல்லாள்
தண்டிப்பதற்காக நாணேற்றிய வில்லுடன் நின்ற ப்ருதுவைப் பார்த்து பூமி கேட்டாள் – “என்னை நீ கொன்று விட்டால், எங்கு வாழ்வார்கள் உன் மக்கள்?” ப்ருது மனம் தெளிந்தான்… சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள்? என்று வேண்டினான். அவர்களுக்குத் தங்கள் செயல் புரிந்தது. அதற்குப் பரிகாரமாக, மரங்களின் மகளான மாரீஷாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்… நச்சு வேதிப் பொருட்களைக் கொட்டி மண்ணை அழிக்கிறோம். விளைநிலத்தில் எரிபொருள் குழாய்களைப் பதிக்கிறோம். பொன்விளையும் பூமியைப் பெட்ரோல் கிணறுகளாக்க எண்ணுகிறோம்….
View More நிலமென்னும் நல்லாள்இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்
இந்த இயக்கத்தின் உற்சாகம் நாடெங்கும் பா.ஜ.க தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் திட்டமிட்டதை விடப் பெரிதாக, தீயாகப் பற்றிக் கொண்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றுமை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்…. ஒவ்வொரு கிராமத்தின் மண்ணும், அந்த மண்ணின் விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த இரும்புத் துகள்களும் சேகரிக்கப் படும். அந்த மண் ஒற்றுமைச் சிலையின் பீடமாகும். அந்த இரும்புத் துகள்கள் உருகி, இறுகிப் பிணைந்து இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலை உருக்கொண்டு எழும்… இதுவரை மோதி மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இப்போது மக்கள் மோதியின் கோரிக்கையின் பேரில் தேச ஒற்றுமைக்காக ஓடப் போகிறார்கள். இது எத்தகைய எழுச்சியை உருவாக்கும் என்று உணர்கிறீர்களா?…
View More இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்
ஜனலோக்பால் இயக்கத்திற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக கேஜ்ரிவால் பயன்படுத்துவதாகவும் கூட அண்ணா குற்றம் சாட்டினார். அதெல்லாம் பழைய கதை. இப்போது கேஜ்ரிவால் பெற்றுள்ள வெற்றி அண்ணாவையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ‘நான் தில்லியில் பிரசாரம் செய்திருந்தால் அரவிந்த் முதல்வராகி இருப்பார்’ என்று இப்போது கூறுகிறார் அண்ணா. வெற்றி, மனிதர்களை எப்படி மாற்றி விடுகிறது…, பாஜகவின் வழக்கமான ஆதரவாளர்கள் கூட உள்கட்சிப் பூசல்களால் வெறுத்துப் போயிருந்தனர். இந்த சமயத்தில் டாக்டர் ஹர்ஷவர்த்தனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மோடி சூறாவளிப் பிரசாரம் செய்ததால் தான், பாஜக மயிரிழையில் முன்னணி பெற்று மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளது… தில்லியில் மறுதேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான புள்ளிவிவரங்கள் இவை. இந்தியா டுடே- சி.வோட்டர் அமைப்பு நடத்திய ஆய்விலும் இதுவே தெளிவாகி உள்ளது. இதை ஏற்க மனமின்றி பல ஊடகங்களும் பாஜகவை குறைவாக மதிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றன….
View More ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்