இஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் படி வற்புறுத்தப் படுகிறார்கள். இதன் காரணமாக அப் பெண்கள் எப்போதும் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள்… தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்… இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை பாதுகாப்பது. உடைந்த கண்ணாடித் துண்டு, சவரக்கத்தி, உருளைக்கிழங்கு வெட்டும் கத்தி போன்ற கைக்குக் கிடைக்கும் ஆயுத்தை எடுத்து வெட்டி எடுத்து விட்டு று நீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு சிறிய ஓட்டை விடப்படும். இக்காரியம் அப்பெண்ணின் அன்னை, பாட்டிகள், அத்தைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் அவர்களது முன்னிலையிலேயே நடப்பதுதான் கொடுமை. இந்த முறை ஏறக்குறைய முப்பது இஸ்லாமிய நாடுகளில், எகிப்து, சோமாலியா, சூடான் உட்பட்ட, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது…கருத்தடையும், கருக்கலைப்பும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு நடத்துவதும், கணவன் அறியாமல் கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் அன்றாடம் நடக்கிறது….
View More கன்னியின் கூண்டு – 2