புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார்… ‘எந்த விக்கிரகத்தின் வலது கால் அசைவதைக் காண்கிறாயோ, அதுவே சரியானது என்று காட்டு’ எனக் கட்டளையிட்டாள்… “ஒரு மார்பிழந்த திருமாபத்தினி” என்று போற்றப்படும் கண்ணகியின் கற்பு அவளை தெய்வீக நிலைக்கு உயர்த்தியிருக்கிறது… அம்பாள் திருவடிவத்தை கிறிஸ்துவின் அன்னையான மரியாள் என்று காட்டினார்கள். வந்தவர்கள் மகிழ்ந்து அக்கோயிலை கத்தோலிக்க மரபுப்படி மாற்றி ஜெபமாலை மாதா என்று போற்றினார்களாம்..
View More கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்விவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்!
சென்னை, ஜன 12-15, 2012: ஆளுமை, ஆரோக்கியம், தலைமை பண்புகள், ஆன்மீக விழிப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்க உதவும் – விவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்.
08-01-2012-க்கு முன் பதிவு செய்துகொள்ளவும். இடம்: சம்வித் சாகர் ட்ரஸ்ட், உத்தண்டி (ECR)…
படிவங்கள் எப்படியோ?
வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம்… இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்… ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய்… “பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்…”
View More படிவங்கள் எப்படியோ?ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்
திக்விஜய் சிங் என்பவருக்கு “ஆர்.எஸ்.எஸ்ஸோஃபோபியா” என்கிற வியாதி போல இருக்கிறது. சிறு குழந்தைகளை மிரட்டுவதற்குச் சில பெரியவர்கள், பூச்சாண்டி என்பார்கள் அதுபோல அடிக்கடி அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.ஆள் என்கிறார். இருக்கட்டுமே. ஒருவர் ஊழலை எதிர்த்துப் போராடுகிறார், அப்படிப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்லது அனுதாபி என்றால் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஊழலை எதிர்க்கிறது என்பது பொருள். அல்லது ஊழலை எதிர்ப்பவரை ஆதரிக்கிறது என்று போருள். இவருக்கு ஏன் இப்படி அடிவயிறு கலங்குகிறது. ஊழலில் ஊறித்திளைத்த இந்தக் கும்பல் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி காட்டிவிட்டால், அடடா! என்ன இது? இந்த ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பயங்கரவாத தேசவிரோதக் கும்பல் என்று மக்கள் நினைத்து விடுவார்கள் என்று இவர் எண்ணுகிறார்போல் இருக்கிறது.
View More ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்பகவானைக் காணவில்லை
…மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அனைவருக்கும் இலை போடப்பட்டது. வழக்கமான இடத்தில் ரமணர் இல்லை. பகவான் எங்கே ? எல்லாரும் தேடினார்கள். பகவானைக் காணவில்லை!… நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து காட்டலாம். இந்தக் குரங்கு மட்டும் கொண்டு வந்து காட்டக்கூடாதா ? இது என்ன நியாயம் ?” என்று கேட்டார். அன்பர்கள் அடங்கி விட்டனர். குரங்கு தன் குட்டியுடன் உள்ளே வந்து பகவானிடம் சிறிது நேரம் தன் குட்டியை வைத்திருந்துப் பின் எடுத்துச் சென்றது…ரமணர், திருடர்களிடம், “சமையல் அறையில் சாப்பாடு இருக்கிறது. சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்று கருணையோடு சொன்னார்…
View More பகவானைக் காணவில்லைநிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்
மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீது முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம்… மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார்… தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள்…
View More நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!
ஜனவரி-3, 2012 (செவ்வாய்) மாலை 6 மணி.. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பத்ரி சேஷாத்ரி, கிருஷ்ண பறையனார், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கல்வெட்டு எஸ்.இராமச்ச்சந்திரன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், டாக்டர் தியாக சத்திய மூர்த்தி, பேரா. சாமி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்… அழைப்பிதழ் கீழே! அனைவரும் வருக. ஆதரவு தருக!
View More சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி
முந்தைய ஆட்சியில் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு மீட்டு வர இயலாது என ஓலமிட்ட காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்… அத்வானி பேசிய போது தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு எவரும் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனிக்கும்போது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட பட்டியல் உண்மை என்பது தெரியவருகிறது… போர்களில் இழந்த பகுதிகளை மீட்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் கட்சியா கறுப்புப் பணத்தை மீட்கப் படையெடுக்கும்? ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் மீது வரி சுமத்தாமல் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது நல்லது என்கின்ற சிந்தனைகூட இல்லாமல் செயல்படுகிறது…
View More கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜிமுல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்
முல்லை பெரியார் விஷயத்தில் வெளிவராத பல தகவல்கள் உள்ளன. இதில் சமூக விரோதிகளை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. கேரளாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதும் பொருளாதார முற்றுகை என்ற பெயரில் போராடுவதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும். அரசியல் கட்சிகள் நிலநடுக்க பீதியைக் கொண்டு அரசியல் நடத்துவதில் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய நியாயம் இருக்கிறது. இதில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன வேலை? இங்கு தான் அவர்களது ஐந்தாம் படை ரகசியம் இருக்கிறது. அவர்களது வெறுப்பூட்டும் பிரசாரத்தின் அடிப்படை சபரிமலை என்பதே அது.
View More முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்சீன டிராகனின் நீளும் கரங்கள்
இந்தியாவின் மீது சீனா ஒரு போதும் படைஎடுக்காது என்று நம்பிய நேரு ஏமாந்தார்… சீனா இணைந்தால் சார்க் கூட்டமைப்பில் இந்தியாவின் பலம் வெகுவாகக் குறையும்… சீனாவின் உதவி இருப்பதால்தான், விடுதலைப் புலிகளினுடனான போரில் உலக நாடுகளின் கண்டனத்தைக் கூட இலங்கை அலட்சியப்படுத்தத் துணிந்தது என்று இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் இயக்குனர் பி.ராமன் கருதுகிறார்… இதனைத்தான் இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வாளர்கள், “சீனாவின் முத்துமாலைத் திட்டம்” என்று அழைக்கின்றனர்… சீனா போன்ற நாடுகளுடன் தைரியமாக முதுகெலும்புடன் பேச இந்தியாவுக்கு நேர்மைத் துணிவுள்ள அரசியல் தலைமை தேவை…
View More சீன டிராகனின் நீளும் கரங்கள்