பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்… மரபு என்றால் என்ன? தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்?… சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”, பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள்.
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு
சங்கம் தமிழ்நாட்டின் தலித்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சங்க ஷாகாக்கள் தோன்றிய பிறகு தீண்டாமை மறைந்து விட்ட பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன… அவர்கள் எல்லோரும் பாபரின் வழித்தோன்றல்களோ, டேவிட்டின் சந்ததிகளோ அல்ல. அவர்கள் ராமரின், கிருஷ்ணரின், பரதனின் சந்ததிகள்தாம்… சக்தி உடையவர்களின் குரல்தான் மதிக்கப்படும். என்னதான் உயர்ந்த தத்துவம் இருந்தாலும் நடைமுறையில் அதன் விளைவுகள் தெரிந்தால்தான் உலகம் அதனை ஏற்கும்…
View More ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்புசுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்
இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.
சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
View More சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1
இது போன்ற சில அனுபவங்கள் வரும்போதும் நாம் பெறுவது இறை அனுபவம்தான். இவை எவையுமே ஒருவரை முன் நிறுத்தி வருவதில்லை. ஆதலால் இவை எவருக்கு வருகிறது என்பதும் முக்கியமில்லை. இப்படியாக நடப்பதிலிருந்து நாம் அனைவரும் நமது குறுகிய எண்ணங்களையும், மனப் பான்மையையும் விட்டுவிட்டு இறைவன் நம்மைத் தேடி வரும் நிலையை நாம் அடையும்படி நாம் வளர வேண்டும் என்பதே முக்கியம்.
View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05
வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக – குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக – நீதிக்கட்சி ஆட்சி இந்த சாதனையைக் கொண்டுவந்தது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்…இந்த ஆணை…மக்கள் தொகையில் பெருவாரியான எண்ணிக்கையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு இடம் கொடுத்ததானது தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை குழிதோண்டிப் புதைத்ததாகத் தானே அர்த்தம்? இதுதான் சமூக நீதியா?
View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05தியானமே நம்மை உய்விக்கும்
தினமும் நாம் செய்யும் எந்த காரியத்தையும் சீரான முறையில் செய்திடச் செய்யும் ஆழ்ந்த கவனிப்பே “தியானம்” எனப்படும். நம் கவனத்தை ஒரு வெளி விடயத்தில் செலுத்தும்போது அது புறத்தியானம் என்றும், அதே கவனத்துடன் நம்முள் நாம் வேடிக்கை பார்க்கும் எண்ணங்கள், மனக் காட்சிகள் மற்றும் அதனால் உண்டாகும் உணர்ச்சிகளை ஆராயும்போது அது அகத்தியானம் என்றும் சொல்லப்படுகிறது.
வெளியில் செய்யும் தொழில், படிப்பு அல்லது எதுவாயிருப்பினும் அதில் முழுமையான கவனிப்பு மிக அவசியம். அப்படி ஒருமைப்பட்ட மனதுடன் செய்யப்பட்ட காரியங்கள் யாவுமே வெற்றியைக் காணும். உலகம் போற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிவந்த பயனுள்ள பொருட்கள் யாவுமே உன்னிப்பான கவனிப்பும் சிந்தனையும் கொண்ட முயற்சியின் பயனே ஆகும்.
View More தியானமே நம்மை உய்விக்கும்வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?
வேற்றுலகவாசிகள் என்றால் அறிவுடைய ஒரு பண்பாடாகத்தான் அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. நிச்சயமாக நுண்ணுயிரிகளாவது இருக்க வாய்ப்புள்ளது அல்லவா? … அவர்களின் அறிவியலும் அறிதல் முறையும் எவ்வாறு இருக்கும்? அவர்களின் உலகில் இசை இருக்குமா? … விண்மண்டலங்களுக்கு இடையே, பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விளங்கும் இரு வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பிரபஞ்ச பொது மொழியாக கணிதம் அமையும். அத்வைதி இவ்வுண்மையை புன்னகையுடன் ஆமோதிப்பான்.
View More வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1
தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை…சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை…
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?
(மூலம்: ராம் ஸ்வரூப்) பண்டைய இந்தியாவில் சாதி கூட்டுறவு சித்தாந்தமாகவும், கலாசார அடையாளமாகவும் இருந்தது. ஆனால் இன்று அது மாபெரும் சமூக மோதல்களுக்கான சித்தாந்தமாக உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது… தற்போதைய தோட்டி சாதியினரின் பெயர்களையும், அவற்றின் உட்பிரிவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கையில், இந்த சாதியின் உருவாக்கம் முகமதிய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது…
View More சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03
இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது………இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03