திரைப்பார்வை: அவதார்

ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட ‘ஆஹா’க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம்.

View More திரைப்பார்வை: அவதார்

போகப் போகத் தெரியும் – 43

ஜின்னாவின் முஸ்ஸீம் லீக் வைத்த பாக்கிஸ்தான் கோரிக்கை எவ்வளவு அயோக்கியத்தனமாக இருந்தாலும் அதில் ஓரளவு தன்மான உணர்வாவது இருந்தது. ஆனால் ஈவெரா கேட்டது திராவிட விடுதலையை அல்ல காலாகாலாத்திற்கும் பிரிட்டிஷ்காரர்களுக்குச் சேவகம் செய்வதையே அவர் இயக்கத்தின் லட்சியமாக வைத்திருந்தார்.

View More போகப் போகத் தெரியும் – 43

ஓடிப்போனானா பாரதி? – 11

“நீதிமன்றத்தில் தாம் பிரிட்டிஷ் விசுவாசி என்று
வாக்கு மூலம் தருகிறார் அந்த அப்பாவி! இதைக் கண்டித்துப் புதுவையிலிருந்து பாரதியாரின் ‘இந்தியா’ தலையங்கம் எழுதுகிறது! வீரமாக எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா?

View More ஓடிப்போனானா பாரதி? – 11

’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

அஃப்ஸல் உள்ளீடான தீவிரவாதிகள் மற்றோரை கொல்லும் முன்னரே கருணை அன்பு முதலான மென்மையான உணர்வுகளை இழந்த பிணங்களாகிவிட்டனர் என்பது புரியும். பிணங்களைத் தூக்கிலிடுவதில் என்ன தவறிருக்கக்கூடும்? அங்கனம் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் இந்த நடைப் பிணங்களால் மேலும் பிணங்களே குவியும்… இத்தகைய வன்முறையை அழிக்கும் புரிந்துணர்வும், புரிந்துணர்வோடு கூடிய வன்முறையுமே தற்கால உலகின் தற்போதைய தேவைகள்.

View More ’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

தமிழர் கண்ட நீளா தேவி

தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது … மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும். தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற நீளா தேவியின் கருணை – கருணைக்கே கருணை காட்டும் நீர்மை- தேவைப்படுகிறது.

View More தமிழர் கண்ட நீளா தேவி

புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கிய கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாக பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர் தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார்,. சில அடிகளே உள்ள மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்!

View More புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-2

பிரிட்டிஷ் அதிகாரியின் சொற்களில், “புனித சிலுவை வீரர்கள் இந்துமதம் என்ற இந்தக் கோட்டையின் உறுதியான சுவர்களை சுற்றிவளைத்து, பலமிழக்கச் செய்து, தகர்க்க வேண்டும்”… கிறிஸ்தவ மிஷநரிகளின் மொழியும், வழிமுறைகளிலும் மட்டும் தான் மாற்றம் ஏற்பட்டதே தவிர. அவர்களது கொள்கைகளும், இலக்குகளும் காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று அப்படியே தான் உள்ளன…. பொதுத் தளத்தில் அருண் ஷோரியுடன் விவாதம் செய்யத் தயாரா என்று கேட்டு இந்தியாவின் பல திருச்சபைகளிலும் உள்ள தலைமைப் பாதிரியார்களுக்கும், ஆர்ச்பிஷப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. அவர்களில் ஒருவர் கூட இந்த சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை.

View More இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-2

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

“சிவ” எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாளனாக இருப்பினும் அவனைக் காணின், அவனோடு கலந்து பேசுக, அவனோடு உறைக, அவனோடு உண்ணுக .. அடிமைப் பெண்ணின் மகனாகிய கச்சீவது என்பவன் ஆரிய வேதம் செய்த இருடிகளில் ஒருவனாக இருத்தலினாலும், அகத்தியரின் பத்தினி உலோபாமுத்திரை முதலாய பல பெண்கள் இருக்கு வேதத்தின் சில பாகங்களைச் செய்திருப்பதனாலும் சூத்திரரும் பெண்களும் வேதம் ஓதலாம் எனும் நியாயம் ஏற்படுகின்றது” என்று கூறுகிறார் பாம்பன் சுவாமிகள்.

View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

போகப் போகத் தெரியும் – 42

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் இனமக்களை காலம் காலமாகக் கொடுமை செய்த இந்த சட்டம் நீதிக்கட்சியின் ஆட்சியில் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. ராஜாஜி பிரதமர் ஆனவுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை ரத்து செய்தார்… உள்ளே இருந்து வந்த டெலிபிரிண்டர் தாள்களை வீதியில் இருந்தபடியே ஆசிரியர் குழுவினர் மொழிபெயர்த்தனர். ஜன்னல் வழியாகப் போடப்பட்ட செய்திகளை உள்ளே இருந்தவர்கள் அச்சுக்கோத்தார்கள். இப்படிப் பல சாகசச் செயல்களின் விளைவாக அன்றைய தினமணி வெளிவந்தது.

View More போகப் போகத் தெரியும் – 42

காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை

”கருணை முருகனைப் போற்றி – தங்கக் காவடி தோளின் மேலேற்றி…. “ – காவடிச்சிந்து மெட்டுக்கள், படித்தவர், பாமரர் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. காவடிச்சிந்து என்றாலே நம் நினைவுக்கு வருபவர், அண்ணாமலை ரெட்டியார்… இங்கு கழுகுமலையில் கடலொத்த வீதிகள் காணப்படுகின்றன. அங்குள்ள கடைகளின் முன்பு முத்துப் பந்தல் போட்டிருக்கிறார்கள். அந்தப் பந்தலின் ஒளியினால் அஷ்ட கஜங்களுடைய தந்தங்களின் ஒளி கூட மழுங்கி விடுமாம்!

View More காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை