ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்த எண்பது வயது துறவி, சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி மற்றும் அவர் நடத்திவந்த ஆசிரமத்தில் பயிலும் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று இரவு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்…. கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட் கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தவர்… மதவெறியாலும் மாவோயிஸ வெறியாலும் மானுடத்தன்மையை இழந்த இருட்சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட நம் சகோதர-சகோதரிகள் அனைவரது ஆன்மாக்களும் நற்கதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறது தமிழ்இந்து.காம்.
View More சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலிஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2
வேதங்களுக்கு கீதையை விட நல்ல பாஷ்யம் இதுவரையில் எழுதப் படவில்லல, இனிமேலும் எழுதமுடியாது. வேதங்களுக்கு மூலப் பொருளான அந்த பகவானே திருவுருவம் தாங்கி வந்து, அவைகளின் பொருளை விளக்கும்பொருட்டுக் கீதையை உபதேசம் செய்தருளினார். இந்த உபதேசத்தைத் தான் தற்கால இந்தியாவும், உலகமும் நாடி நிற்கின்றன…..விக்கிரக ஆராதனையை ஒழிப்பதற்காக நீங்கள் கத்திகளையும், பீரங்கிகளையும் கொண்டு, உலகம் முழுவதும் ரத்தப் பெருக்கெடுத்து ஓடும்படி செய்யலாம்; ஆனால் அவைகளின் அவசியம் இருக்கும் வரை அவை இருந்தே தீரும். அங்ஙனமே பலவிதமான வழிபாடுகளும், மத அனுஷ்டானங்களூம் இருக்கும். அவை ஏன் இருக்கவேண்டும் என்பதை கீதையிலிருந்து தெரிந்துகொள்ளுகிறோம்.
View More ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1
அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்! ஸ்ரீகிருஷ்ணர் பற்றிய சுவாமி விவேகானந்தரின் அழகிய உரையை மகிழ்வுடன் அளிக்கிறோம். “அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை, என்ற கருத்து மனிதனுடைய மத வாழ்க்கையின் சரித்திரத்திலேயே ஓர் உன்னதமான இடத்தைக் குறிக்கின்றது. இது உலக சரித்திரத்தில் முதல் தடவையாக எல்லா அவதாரபுருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீகிருஷ்ணருடைய திருவாயிலிருந்து, இந்திய மண்ணிடையே பிறந்தது … ‘நீ வழிபடாவிடில், நீ நரகத்திற்கு போவாய் அல்லது வேறுவிதமாக கஷ்டப்படுவாய்’ என்று தெய்வம் உரைப்பதாக நம்பி சிலர் பயத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் இருக்கும் வரையில் ஒருவன் கோபிகளுடைய எல்லையற்ற அன்பை எங்ஙனம் உணர முடியும்?”
View More ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1வீடியோ: நூறு கோடி இந்தியர்கள் இப்படி புலம்ப வேண்டுமா? : சுவாமி அக்ஷரானந்தா
புலம்பெயர்ந்த இந்து வம்சாவளியைச் சேர்ந்த சுவாமி அக்ஷரானந்தா, நூறு கோடி இந்தியர்கள் இருந்தும் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா புலம்புவதை கேள்வி கேட்கிறார், எல்லா மதங்களும் ஒன்று என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதை கேள்வி கேட்கிறார். இந்துக்கள் அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய உரை.
View More வீடியோ: நூறு கோடி இந்தியர்கள் இப்படி புலம்ப வேண்டுமா? : சுவாமி அக்ஷரானந்தாசென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்
“தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை ‘சைத்தானின் பிள்ளை’ என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் ‘தமிழர் சமய மாநாடு’ எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது…” –
தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத் தொடர்பு கொண்டு அளித்த தகவல்களின் அடிப்படையில் இது பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகளைத் தொகுத்து அளிக்கிறோம்.
அக அழகும், முக அழகும் – 2
போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது…. சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்?
View More அக அழகும், முக அழகும் – 2அச்சுதனும், அம்பிகையும்
அடர்ந்த வனங்களில் முனிவர்கள்தம் குடில்களில் அவதரிக்கவும் இவர்கள்
தயங்கியதில்லை. அறத்தை நிலைநாட்ட யுகம்தோறும் அவதரிப்பவன் அண்ணன்; அறம் வளர்த்த நாயகியாக ஐயாற்றில் விளங்குபவள் தங்கை.
பெரிது பெரிது பெண்மையின் சக்தி!
பெண் என்பவள் ஆதாரசக்தி, வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது… குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி இந்த சமூகத்துக்கேப் பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள்.
View More பெரிது பெரிது பெண்மையின் சக்தி!Video: ARYAN invasion theory, proven false – INDIA (part 2 of 3)
ஆரியப் படையெடுப்பு என்ற புரளியைப் பயன்படுத்தி எவ்வாறு பாரத மக்களுக்குள் பெரும் பிளவு உண்டாக்கப்பட்டது? மதம் பரப்ப வந்தவர்கள் எவ்வாறு இந்தியாவை மனம் துவளச் செய்வதற்காகச் சரித்திரப் புரட்டுச் செய்தனர்? உண்மை என்ன? இவற்றைப் பற்றியெல்லாம் சான்றுகளோடு அறிய ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ. இவ்வரிசையில் இரண்டாவது பகுதி இது.
View More Video: ARYAN invasion theory, proven false – INDIA (part 2 of 3)பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு
[இந்த நூலை இங்கிருந்து PDF கோப்பாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்]
தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும்.
