அள்ளக் குறையாத அமுதம் – 1

மழைக்காலத்தில் ஒருநாள் இரவு வெகு நேரம் கழித்து நெடுந்தூரம் நடந்து களைத்த வழிப்போக்கர்கள் வந்தனர். அவர்கள் ஆபுத்திரனிடம் “எங்களுக்குப் பசியாக இருக்கிறது. உணவு கிடைக்குமா?” என்று கேட்டனர். மற்றவர்களின் பசியைப் பார்க்கப் பொறுக்காத ஆபுத்திரனுக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. அவனுடைய பிட்சைப் பாத்திரம் அலம்பிக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. என்ன செய்வது?

View More அள்ளக் குறையாத அமுதம் – 1

மகான்கள் வாழ்வில் – 4: ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர். ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணாமுலையம்மனும் புலி உருவில் வந்து காவல் காக்க, தவம் செய்த பெருமைக்குரியவர். இவரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை. பிறப்பால் ஆங்கிலேயரானாலும் ஓர் இந்துவாகவே வாழ்ந்தவர்…

View More மகான்கள் வாழ்வில் – 4: ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

கம்பராமாயணம் – 10 (Kamba Ramayanam – 10)

(பாடல்கள் 31 முதல் 36 வரை) பெரிய மலைகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களின்மேல் பலத்த காற்று வீசுதால் அவை நாலாபுறமும் அலைபடுகின்றன. அவ்வாறு ஆகும் சமயத்தில் அருகிலிருக்கும் மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரியபெரிய தேன்கூடுகளின்மேல் படுவதனால் அவை உடைகின்றன. தேன்கூடுகள் உடைவதனால், அவற்றிலிருந்து பெருகிஓடும் தேன், மலைச் சரிவுகளில் ஓடிவருவது ஏதோ ஒரு நீண்ட பாம்பு மலையின் மேலிருந்து தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது…

View More கம்பராமாயணம் – 10 (Kamba Ramayanam – 10)

மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்

அமரர் நீதியரசர் மு.மு. இஸ்மாயில் எழுதுகிறார் – எப்படி எண்ணற்ற நுண் துகள்களை ஒரு சிறிய ஒளிக்கீற்றின் மூலமாகச் சூரியன் வெளிப்படுத்துகிறதோ அப்படியே மிகப் பெரியவனாக இருக்கிற இறைவனும் அழகும் அற்புதமும் தாண்டவமாடும் இவ்வண்ட கோள முழுமையையும் தன் அருளொளியால் வெளிக்காட்டுகிறான்…

View More மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்

மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1

(பாடலும் விளக்கமும்.) ரஷ்யப் புரட்சியையும் ஃபிஜித் தீவில் தமிழர் படும் பாட்டையும் தனது சொற்களால் அமர கவிதைகளாக்கிய பாரதி பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்தசிங் ‘கால்ஸா’ என்ற தர்மம் காக்கும் வீரர் படையை அமைத்த அற்புத நிகழ்ச்சியையும் எழுதி வைத்திருக்கிறான். தர்மதேவதையின் தாகம் தீர்க்க ஐந்து வீரர்களை பலி கேட்ட குரு கோவிந்தசிங்கின் சோதனை, வரலாற்றின் ஓர் பிரமிக்க வைக்கும் நிகழ்வு…

View More மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1

அமர்நாத் யாத்திரை: பழம்பெரும் பாரம்பரியம்

புனித அமர்நாத் குகையும் அதன் பனிலிங்கமும் இந்தியர்களால் மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்ததும், இந்தியா முழுவதிலிருந்து பல நூற்றாண்டுகளாக யாத்திரீகர்களை ஈர்த்து வந்ததும் பல வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன. அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸம்ஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது. மேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன…

View More அமர்நாத் யாத்திரை: பழம்பெரும் பாரம்பரியம்