பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் விக்கிரகம் அன்று வணங்கப்படுவது. உண்மையில் பிரபஞ்ச மயமாக இருக்கும் விராட் விக்கிரகம்தான் வணங்கப்படுவதாம். அந்த விராட் விக்கிரகம் எதனால் ஆனது? சேதனர்கள் என்னும் ஜீவர்களின் முழுமையும் சேர்ந்து ஒரு பெரிய சரீரம் என்று கருதினால் அந்தச் சரீரத்தில் இருக்கும் ஆத்மாவாக நாராயணன் இருக்கிறார்… பூமிதான் பாதங்கள். த்யு லோகம் என்னும் விண் என்பதுதான் சிரம். ஆகாயம் என்பது நாபி. சூரியன் தான் கண்கள். வாயு மூக்குகள். திக்குகள்தாம் காதுகள். பிரஜாபதியைக் குறியாக உடைய அந்த விராட்டிற்கு மரணம் என்னும் மிருத்யுதான் அபானம். லோகபாலர்கள் அவருடைய கைகள். சந்திரன் மனம். யமன் புருவங்கள்…
View More விஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2
தனிமனித வாழ்வில் அடிப்படை ஒழுக்கத்தை நம்பிக்கைத்தன்மையைப் பேண முடியாத ஒரு நபரினால் எப்படி நாட்டை ஒழுங்காக ஆள முடியும் என்ற இயல்பான கேள்வியைத் தாண்டி, அவரது பிற நேர்மையற்ற குணங்களைக் காணலாம்… கமலஹாசன் இந்தத் தேர்தலில் தனி விமானங்களையும் ஹெலிக்காப்டர்களையும் பயன் படுத்தி வருகிறார். இதற்கான நிதி இவ்வளவு பெரிய செலவுகளுக்கான கணக்கை அவர் காட்டுவாரா? கணக்குக் கேட்டால் மிரட்டுகிறார்… தமிழில் ஒரு மதன் ரவிச்சந்திரன், ஒரு மாரிதாஸ், ஒரு அண்ணாமலையுடன் இவரால் ஐந்து நிமிடங்களாவது விவாதிக்கும் திறன், அறிவு இவருக்கு கிடையாது…
View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1
சென்ற பாராளுமன்ற தேர்தலின் பொழுது பெரும் அளவில் தமிழக நடுத்தரவர்க்க மக்களும், குறிப்பாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கமலஹாசன் கட்சிக்கு வாக்களித்தனர். அதன் காரணமாகவே திமுக கூட்டணி பல தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது… அந்தணர்கள் அடிபட்ட பொழுதெல்லாம் அவமானப் படுத்தப் பட்ட பொழுதெல்லாம் தாக்கப் பட்ட பொழுதெல்லாம் இவர் என்றுமே அதற்காக ஒரு சிறிய கண்டனத்தைத் தெரிவித்தவர் அல்லர். அந்தணர்களில் ஏழைகளுக்குக் கூட மோடி அரசு தரும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர். இவர்…
View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்
கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம்… நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயல்பை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான். இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?..
View More சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்மரிச்சபி படுகொலை: நெஞ்சில் எரியும் தீ
என் மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு குழுவாக நாங்கள் எல்லையைக் கடக்க முயன்றபோதுதான் இந்தக் காயங்கள் எனக்கு ஏற்பட்டன. ஓர் இஸ்லாமிய கும்பல் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கியது…எங்கள் படகுகள் இடது சாரி அரசின் காவலர்களால் தாக்கப்பட்டு ஆற்றின் நடுவில் மூழ்கடிக்கப்பட்டன. அதில் சென்றவர்களும் அப்படியே மூழ்கி இறந்தனர்.. 1970களின் மரிச்சபி படுகொலைகள் இந்தியாவையே உறையவைத்த நிகழ்வு. அதில் பாதிக்கப்பட்டவர்களின் சோகங்களை அவர்கள் வாய்மொழியிலேயே பதிவு செய்துள்ள முக்கியமான ஆவணம் இந்த நூல்..
View More மரிச்சபி படுகொலை: நெஞ்சில் எரியும் தீதமிழகத்துக்கு நயவஞ்சகம் இழைத்தாரா நரேந்திர மோடி?
திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பும் காழ்ப்புணர்வைத் தாண்டி, தமிழர்கள் பிரதமர் மோதி மீது வெறுப்பும் காழ்ப்பும் கொள்வது நியாயம்தானா? அதற்கான ஏதேனும் குன்றிமணி அளவுக்கான காரணமாவது உள்ளனவா? உண்மை நிலவரம் என்ன?.. நன்றி மறப்பது நன்றன்று. உப்பிட்டவரை உள்ளளவு நினை என்றெல்லாம் தமிழர்கள் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள். ஆனால் அதைக் காற்றில் பறக்க விட்டு தமிழகத்தின் மீது பாசத்துடனும் அன்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வரும் ஊழல் கறை படியாத அப்பழுக்கற்ற பாரதப் பிரதமரை அவமதிப்பது என்பது….
View More தமிழகத்துக்கு நயவஞ்சகம் இழைத்தாரா நரேந்திர மோடி?கண்ணனின் கட்டளையற்ற கட்டளையும் நியோ-ஹிந்துத்துவமும்
சுவாமி விவேகானந்தர் உபநிஷதங்களின் சாரத்தை, வேதாந்தத்தின் மகத்துவத்தை மேலைநாடுகளில் முழங்கினார். இதைத் தாங்கொணாத மிஷனரிகள் “இந்தியாவில் இருக்கும் உண்மையான ஹிந்துமதம் பற்றி இவர் பேசவில்லை. மேலைநாட்டு தத்துவங்களைப் படித்துவிட்டு, அதையொட்டி, இவை ஏற்கனவே ஹிந்துமதத்தில் உள்ளன என்று நம்மை ஏமாற்றுகிறார்” என்று பிரசாரம் செய்தனர். பின்பு பால் ஹேக்கர் முதலானோர் தமது நூல்களில் இதனை வளர்த்தெடுத்தனர். சேவை, கர்மயோகம் போன்ற கருத்துக்கள் அனைத்தும் நமது சனாதன தர்மத்தின் அடிப்படையில் என்றும் இருப்பவை. ஆனால் இவற்றை நாம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து கடன் வாங்கினோம். அதனால் தான் பழைய ஹிந்து மதத்தை விட்டுவிட்டு, நியோ-ஹிந்துமதம் எனும் பொய் உருவானது என்பது பல மிஷனரிகளின் வாதம். இதுதான் நியோ-ஹிந்து எனும் கருத்து உருவான இடம்.. ஆனால் இப்போது, சில ஆசாரவாதிகள் காலத்துக்கு ஏற்ப சிந்தனை செய்யும் அனைத்து ஹிந்துத்துவவாதிகளையும் ‘நியோ’ என்று பட்டம் கொடுத்து ஏசுகிறார்கள். நம்மவர்களுக்கு இந்த விபரீதப்பொருள் தெரியுமா என்று எனக்குச் சந்தேகம்தான்… “பழமையை விடமுடியாமல், அதற்காக நிதர்சனத்தைத் தியாகம் செய்யும் அடிப்படைவாதிகள்” என்ற தோற்றம் ஹிந்து தர்மத்துக்குப் பொருந்தாத ஒன்று. அதனைப் பொருந்துமாறு செய்யும் வேலையை ஆசாரவாதிகள் பார்கின்றனர்…
View More கண்ணனின் கட்டளையற்ற கட்டளையும் நியோ-ஹிந்துத்துவமும்சிவமாக்கும் தெய்வம் – 2
திரும்ப முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி ஐயாவுடனான எனது பிள்ளைத்தமிழ் ஆராய்ச்சி அனுபவங்களைத் தொடர்கிறேன்’நீயெல்லாம் தமிழைப் படித்து என்ன செய்து விடப்போகிறாய்?’ எனும் மனப்பான்மை அவருக்கு இருக்கவேயில்லை. முதல் சந்திப்பிலிருந்தே, அறிவியல் புலத்தின் பின்னணியிலிருந்து நான் தமிழை நோக்கிப் பயணித்தது அவருக்குப் பெருத்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது. எனது தமிழார்வத்தை இலக்கிய, ஆன்மீக உண(ர்)வூட்டி வளர்த்தார்…
View More சிவமாக்கும் தெய்வம் – 2பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள் : வீர சாவர்க்கர் நூல் வெளியீடு
வீர சாவர்க்கர் எழுதிய முக்கியமான வரலாற்று நூல் பத்மன் அவர்களின் புதிய மொழிபெயர்ப்பில் விஜயபாரதம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.. பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு.தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர்…
View More பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள் : வீர சாவர்க்கர் நூல் வெளியீடுஒரு ஹிந்துத்துவ வாக்காளனின் கோரிக்கைகள்
சமூக, அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஹிந்துவே, ஹிந்துத்துவ வாக்காளன். ஒரு ஹிந்துத்துவ வாக்காளனாக, எனக்கு மூன்று எதிர்பார்ப்புகள் / கோரிக்கைகள் உள்ளன. அவை மீது கவனம் செலுத்தும் கட்சிக்கே, என் ஓட்டு… இட ஒதுக்கீட்டில், ‘க்ரீமி லேயர்’ அதாவது, பின்தங்கியவர் களில் வசதிபடைத்தவர் நீக்கம் என்ற வழிமுறை, கேலிக்கு உரியதாகவும், நடைமுறை சாத்தியம் இல்லாததாகவும் ஆகி விட்டது… ஹிந்து ஆலயங்கள், மதச்சார்பற்ற அரசின் கையில், பெரும் சுரண்டல் களங்களாக, பாரம்பரியங்களை, கலைச்சொத்துகளை, வழிபாட்டு மரபுகளை ஒழித்து, மதமாற்றிகளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் கருவிகளாக மாறி நிற்கின்றன…
View More ஒரு ஹிந்துத்துவ வாக்காளனின் கோரிக்கைகள்