இந்தப் பயணத்தின் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரை வரவேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்… உலகம் முழுவதும் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்கு புகலிடம் கொடுத்த பாரதத்தின் பிரதமரை இஸ்ரேல் எப்போதும் நன்றியுடனும் அன்புடனும் எதிர்நோக்கி இருந்திருக்கிறது. அதனைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசுத் தலைமை இந்தியாவில் உருவாக நமக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது…
View More 70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…
இந்திய- சீனப் போர் மீண்டும் நிகழுமானால், இரு தரப்பிலும் பலத்த சேதம் நிச்சயம். ஆனால், அது 1962 போல இருக்காது என்பது சீனாவுக்கும் தெரியும். ஆயினும் இந்தியாவைச் சீண்டுவதன் மூலமாக ஆசிய பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த சீனா முயல்கிறது. இனிமேல் அந்த நாடகம் எடுபடாது என்பதை மோடி அரசு வெளிப்படுத்திவிட்டது. அமைதிக்காக கைகுலுக்கும் அதேசமயம், எல்லையில் வீரர்களைக் குவிக்கவும் இந்தியா தயார் என்பது உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
View More டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்
அதிகபட்ச விலைக்கும்(MRP) ஜிஎஸ்டிக்கும் என்ன வித்தியாசம்? ஏன் ஜிஎஸ்டியை சிலர் இப்படி எதிர்க்கிறார்கள்? பிஸ்கட் ஜிஎஸ்டி வரி 18% – உண்மை என்ன? ஜி எஸ் டியிலே சினிமா வரியிலே இவர்களின் கோரிக்கை தான் என்ன, அது நியாயமானதா? ஜிஎஸ்டியின் மிகப்பெரும் நன்மை என்ன?…. முன்னாடி மாநில வரி, மத்தியவரி, கலால் வரி, சுங்க வரின்னு நூத்துக்கணக்கிலே வரி தாக்கல் செய்யனும். இருந்தப்பவும் ஒண்ணும் சொல்லல. கணக்கு காட்டினால் தானே எத்துணை வரி, எம்புட்டு சான்றிதழ் என கவலைப்படணும். அதான் வரியே கட்டப்போறதில்லே. அப்புறம் எத்தனைன்னு எதுக்கு கவலைப்படணும்? இப்போ? வாங்கினாலும் வித்தாலும் எப்படியும் கணக்கு காட்டியே ஆகணும். இல்லாட்டி வாங்கினவரும் வித்தவரும் கணக்கு காட்டியாச்சுன்னா முடிஞ்சது சோலி…
View More ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’
ஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டிஅந்த ஃப்ளெக்ஸ் விளம்பரப் பலகையில் வேறு எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின…. எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம்… இப்பெயர் இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை….
View More ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்
கொங்கு வழக்கில் முட்டுவழி என்பார்கள். அதாவது முதலீடு. நிலத்தின் அளவு அதிகமாகும்போது முட்டுவழி குறைவதும், குறைவான நிலப்பரப்புக்கு முட்டுவழி அதிகமாவதும் இயற்கை. உலகில் எல்லா தொழில்களுக்கும் பொதுவான நியதி இதுதான்… கார்ப்பரேட்டுகள் விவசாயத்தின் எதிரிகள் அல்ல. உண்மையில் அவர்கள் வருகைக்குப்பிறகே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சேலம் தர்மபுரி பகுதியைச்சேர்ந்த மாம்பழ விவசாயிகள் காலம் காலமாக உள்ளூர் வியாபாரிகளால்வஞ்சிக்கப்பட்டு வந்தனர். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் வந்த பிறகுதான் அவர்கள் நிலை மேம்பட்டது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று எந்த கார்ப்பரேட்டுகளை கரித்துக்கொட்டுகிறோமோ, அவர்கள்தான் இனி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்போகிறார்கள்…
View More நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி
ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அதைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்… தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர்…
View More அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்திஉதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2
வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்தியாவைத் துண்டாடுகிறார்கள் என்று ஜெயமோகன் கடுமையான குற்றசாட்டுக்களை வைக்கும் அருந்ததி ராயும், எம்.டி.எம், அ.முத்துக்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையாக நடிப்பார்களே? ஏன் அவர்களைக் கொஞ்சிக் குலாவுவது கிடையாது? ஏன் இவருக்கு மட்டும் சிறப்பு சலுகை?… அணு உலை மீது குற்றம், சந்தேகம் இருந்தால் அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அப்படி சந்தேகம் ஏற்படும் அளவுக்கு விக்ரம் சாராபாயும், அப்துல் கலாமும், டாக்டர் சிதம்பரமும், ராஜா ராமண்ணாவும் பொய்யர்களா அயோக்கியர்களா என்ன? இந்தியா வெற்றிகரமாக ராக்கெட்டுகளையும் சாட்டிலைட்டுகளையும் ஏவவில்லையா? அவர்கள் மீது ஏற்படாத ஒரு நம்பிக்கை இந்தியாவை உடைப்பேன் என்று சொல்பவனின் மீது வந்தால் எது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?….
View More உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2நெருக்கடி நிலை யாருக்கு?
தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..
View More நெருக்கடி நிலை யாருக்கு?தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து
சில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா? தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை?…. 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள்….
View More தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்துபாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்
கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது அதோடு பெரும் அறிஞர். இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்…. அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, இப்போது ராம்நாத் கோவிந்த் – பாஜக அடுத்தடுத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்களையே உயர்பதவிகளுக்கு முன்நிறுத்துகிறது. இது சந்தர்ப்பவாத , தாஜா அரசியல் அல்லவா என்று நம்மவர்களே சிலர் கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு இன்னும் நம் தேச அரசியல் பிடிபடவே இல்லை….
View More பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்