முறிந்த தொடையிலிருந்து ஓடிய ரத்தம் சேற்றோடு கலந்து சிவப்புக் கம்பளத்தில் படுத்திருப்பதைப் போல துரியோதனன் கிடந்தான். அஸ்வத்தாமன் துரியோதனன் அருகே அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டான். கிருபர் ‘நான் சென்று பச்சிலைகள் கொண்டு வருகிறேன், கிருதவர்மரே, நீங்கள் எப்படியாவது ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்!’ என்று பரபரத்தார்… ஒன்றும் புரியாத அஸ்வத்தாமன் முழந்தாளிட, துரியோதனன் தொன்னையிலிருந்து நீரை எடுத்து அஸ்வத்தாமன் தலையில் ஊற்றினான்.
கிருபரின் மார்புக்கூடு விரிந்தது. அவரது மூச்சு கொல்லன் துருத்தி போல பெரிதாக எழுந்தது. அவரது கன்னங்கள் ரத்தம் பாய்ந்து சிவந்தன… பாண்டவர் படைகளின் கூடாரங்களில் விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. நட்சத்திரங்களின் மெல்லிய ஒளி மேகக் கூட்டத்தின் வழியே மங்கலாகத்தான் தெரிந்தது…
வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது
வலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம் – நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்; வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்; மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்; அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்; மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு….
View More வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டதுஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்
ஹிந்து வெறுப்பால் பாகிஸ்தான் என்ற கனவுலகை நோக்கிச் சென்ற முஸ்லிம்கள், கடைசியில் அடிமையானது அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியே போன்ற எதேச்சாதிகார சக்திகளுக்கு மட்டுமே. முன்னேற்றமும், குறைந்தபட்ச நிம்மதியான வாழ்க்கையும் கூட பாக். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களுக்கு அமையவில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை. இந்நூற்றாண்டின் முதல் பதின்மத்தில் மட்டுமே குண்டு வெடிப்பு, தீவிரவாதத் தாக்குதலால் மடிந்த பாகிஸ்தானியரின் எண்ணிக்கை 35,000க்கும் மேல். செல்வம் கொழிக்கும் இஸ்லாமிய அரபு நாடுகள் சிரிய முஸ்லிம் அகதிகளுக்கு இடமில்லாமல் கை விரித்தது அண்மைய நிகழ்வு.. கலிமாவை ஏற்ற மாந்தரிடையே எந்த நிற – மொழி – இன – பிராந்திய வேற்றுமையும் கிடையாது; எல்லாரும் சகோதரரே; தோளோடு தோள் உரசிக்கொண்டு தொழலாம் என்னும் பம்மாத்துகள் எல்லாம் எந்த அளவு உண்மை என்பதை இனியாவது அப்பாவி இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்….
View More ஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்
கடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து மூன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் இரண்டில் சம்பந்தப் பட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி (எ) சுரேஷ் , இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்த சசிகுமார் இருவரும் மர்ம நபர்களால் இரவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.. திண்டுக்கல் மாவட்டத்தின் இந்து முண்ணனியின் மாவட்ட பொறுப்பாளர் சங்கர் கணேஷ் அடையாளம் மறைக்கப்பட்ட நபர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டிருக்கிறார்.. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதம் தீவிரமாக வளர்ந்து வருகிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிந்தே இருக்கக் கூடும். இந்து இயக்கங்களின் முக்கியத் தலைவர்களுக்கு எந்நேரமும் அபாயம் என்ற சூழலும் இதனால் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு அபாயம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு மாநில அரசும், காவல்துறையும் ஏன் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. சம்பந்தப் பட்ட இயக்கங்களும் கூட தங்களது முக்கியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஏன் இவ்வளவு தொய்வு காண்பிக்கின்றன என்பது புரியவில்லை…
View More 2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16
துறவின் மிகக்கடினமான செயல், தான் என்பதை அறவே துறந்து, பசிக்கு உணவுவேண்டி, வேற்று இல்லத்தின்முன் நின்று, அம்மா உணவளியுங்கள் என்று அழைப்பதுதான். மாதவியின் கண்களில் நீர் நிறைந்தது. தான் பிச்சை எடுக்கிறோம் என்ற நினைப்பு மணிமேகலை முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக முகத்தில் புன்னகை மலர, “அம்மா! பத்தினிப் பெண்கள் இடும் பிச்சை, பெரும்பிச்சைகளில் சிறந்த பிச்சை. புண்ணியவதி. சோறு போடம்மா” என்று வேண்டிநின்றாள்.
View More பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்
ஊர்திக்குமுன்னே பலர் முழக்கமிட்டபடி ஆனந்தக்கூத் தாடியவாறே முன்செல்ல, “ஊர்தியைப் பார்த்தவாறு நாம் ஏன் செல்லவேண்டும்? நமது ஆடும் அடியார்களின் ஆட்டத்தை இரசிப்போம்,” என்பதுபோல, பேருருவப் பிள்ளையார் செல்லும் திசையை நோக்காது, தன்னைத் தொடர்பவர்களைக் கண்ணுற்றவாறே அமர்ந்திருந்தது தனிச்சிறப்பாக அமைந்தது. ஊர்வலம் முடிந்ததும், பேருருவப் பிள்ளையார் தனது வழக்கமான இடத்திற்குச் சென்றார். அவரை மீண்டும் காண இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும் என்பதால், அன்றுமட்டும், தன்னிடத்தில் அடியார்கள் தன்னைக் காணட்டும் என்பதுபோல அவரது இல்லம் அன்றுமட்டும் திறந்துவைக்கப்பட்டது
View More அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்பாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15
கப்பல் நங்கூரம் இடப்பட்ட இடத்திற்குத் தாமதமாக வந்த ஆபுத்திரன் கப்பல் கிளம்பிப் போய்விட்டதை அறிந்ததும் திடுக்கிட்டுப் போனான். மனம் நொந்து அலையத் தொடங்கினான். ‘யாருமற்ற தீவினில் இந்த அட்சய பாத்திரத்தினால் என்ன பயன்? வெறுமே என் பசியைப் போக்கவா?’ என்று சிந்தித்தவாறே அங்கிருந்த நீர் நிறைந்த கோமுகி என்ற பொய்கையை அடைந்தான்
View More பாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15பொருனைக்கரை நாயகிகள்
தோழி! என் நெஞ்சம் செங்கனி போன்ற வாயழகில் தன்னை மறந்தது. என் இதயமோ திருமுடிக்கு ஆட்பட்டு விட்டது. சங்கு சக்ரதாரியான அவன் கண்களால் வலைவீசி என்னைப் பிணித்து விட்டான். நானும் அவ்வலையில் அகப்பட்டுக் கொண்டேன். நாளும் விழாக்கள் நடைபெறும் தென்பேரை நாயகனான நிகரில் முகில்வண்ணனிடம் என் நெஞ்சத்தை பறிகொடுத்து என் நாணத்தையும் இழந்துவிட்டேனே!
View More பொருனைக்கரை நாயகிகள்தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்
தியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது… “வெறும் உடல்பலத்தால் என்னபயன்? உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்? சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் – காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா? கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா? ஆடு புல்தின்றால் அது உபவாசமா? வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?…”
View More தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14
பசித்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது. சிசுவின் குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது. ஆவின் பாலை உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால் நக்கிக் கொடுத்தது. இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படப் பசி நேரத்தில் சிசு அழத் தொடங்கியதும் எங்கிருந்தாலும் அதன் குரல்கேட்டு ஓடிவரும் பசு பாலைப் பொழிந்து அதன் பசியைப் போக்கும்.
View More ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14