வ.களத்தூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமியர்களுக்கும், அவர்களுக்கு சாமரம் வீசிய அரசியல் கட்சிகள், ஊடகங்களுக்கும் சம்மட்டி அடியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது… ஜனநாயக நாட்டில், இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவே நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கியம் நிலவுவது உண்மையிலேயே வேதனைக்குரியது. மக்கள்தொகைப் பரவலில் நிகழும் மாற்றங்கள் சமுதாய அமைதியை எவ்வாறு பாதிக்கின்றவ என்பதற்கு இந்த ஊர் மிகப் பொருத்தமான உதாரணம்…
View More வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்Tag: இந்து உரிமைகள்
ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்
ஒரு எளிய ஹிந்து அல்லது இந்தியன் தினம் தினம் ஒரு கூர்மையான வாதத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு சாதரண பேச்சில் பகிரங்கமாக சீண்டப்படுகிறான். இந்த சூழலில், சமூகசேவை, கல்வி, மருத்துவம் தொடங்கி எல்லாமே இந்தியாவில் எப்படி ஒரு அரசியல் கருவியாக, உள்நோக்கம் கொண்டதாக ஆகியிருக்கிறது என்பதை தன் இயல்பான தர்க்கத்தால் முன் வைத்திருக்கிறார் B.R.மகாதேவன், கதைமாந்தர்களின் வழியாக. எப்படிப்பட்ட வாதங்களால் நாம் அன்றாடம் களத்தில் வீழ்த்தப்படுகிறோமோ, அது எல்லாவற்றிற்கும் வெகுசாதாரண மொழியில் பதில் சொல்ல,ஒரு தரப்பை உருவாக்கிக் கொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமானது…
View More ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்
பல நூற்றாண்டுகளாக நமது மாபெரும் புனிதத் தலமாக விளங்கிய அயோத்தி 1528ல் இஸ்லாமியப் படையெடுப்பாளன் பாபரால் சிதைக்கப் பட்டது. இதோ இன்று ஆகஸ்டு 5, 2020 அன்று ஸ்ரீராமனின் பேராலயம் அதே அயோத்தியில் எழப் போகிறது… ஸ்ரீராமஜன்மபூமியில் எழும் இந்தப் பேராலயம் தர்மத்தின் வெற்றியை முரசறைகிறது. ஆபிரகாமிய அதர்ம மதங்களின் ஆக்கிரமிப்பும் அராஜகமும் தொடர நாம் அனுமதியோம் என்று கட்டியம் கூறுகிறது. ஒருங்கிணைந்த இந்து சக்தி ஒளிவீசி உரம் பெற்று வேத தர்மத்தையும் இந்துப் பண்பாட்டையும் பாரதபூமியைம் அன்னிய சக்திகளின் அழிப்புத் தாக்குதல்களிலிருந்து காக்கும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் பிரகடனம் செய்கிறது. இதுவே இந்த நிகழ்வின் முக்கியத்துவம். இதனை உள்ளபடி உணர்வோம். இந்த மகத்தான நிகழ்வு நிகழும் தருணத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமது பாக்கியம். இத்தருணத்தை உள்ளன்புடன், மகிழ்வுடன் நாமும் கொண்டாடி மகிழ்வோம்…
View More அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்
கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்… புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி – கோட்சே குற்றவாளியா?…
View More இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்கிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்
தொடர்ந்து கிறிஸ்துவப் பள்ளிகளிலும், ஹாஸ்டல்களிலும் இந்து மாணவிகள் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள் என்பதான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாது. அவற்றின் வாய் முழுக்க மாட்டிறைச்சி. நம் குழந்தைகளுக்காக நாம்தான் பேச வேண்டும். இந்திய அரசின் சிறுபான்மை சலுகை என்கிற பெயரில் நடத்தப்படும் கல்விப் பாரபட்சக் கொள்கையின் (educational apartheid) கோர விளைவுதான் இது. அரசு கேள்வி கேட்க முடியாது. நாங்கள் சிறுபான்மையினர் என்று ஓமலூர் சுகன்யா கொலை விவகாரத்தில் பிஷப் பதிலளித்தது நினைவிருக்கிறதா? சென்னை ரஞ்சனி, ஓமலூர் சுகன்யா, புதுவை அனந்த வள்ளி, என்று தொடர்கிற வரிசையில் உசிலம்பட்டியின் சிவசக்தியும் சேர்ந்திருக்கிறார்….
View More கிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2
மிசனரிகளின் பொல்லாத செயல்களைக்கண்டும் கேட்டும், நாம் அவற்றைத்தடுக்க எதையும் செய்யாமலிருப்பது முறையோ, தர்மமோ அன்று. நமது செயலற்ற தன்மையின் விளைவாக, நமது சமூகம் ஏற்கனவே தனது மூன்றில் ஒருபங்கு மக்களை இழந்துவிட்டது. இன்னமும் இந்த இழப்பு தொடர்கிறது. நமது செயலற்றத்தன்மை பலதலைமுறைகளுக்கு நமது மக்களின் இகபர சௌபாக்கியங்களை இல்லாததாக்கிவிடும் அபாயம் உள்ளது. ஆகவே, அறிஞர்களாகிய ஹிந்துக்கள் தமது சுய நலத்தினைத் துறந்து, ஒன்றிணைந்து தமது எளியமக்களுக்கு கல்வியறிவு புகட்டுவது மேன்மையான செயலாகும். மதமாற்றம் என்னும் அபாயத்தினைத் தடுத்துநிறுத்துவதற்கும், நமது மக்களின் இகபர நலத்தினைப் பேணுவதற்கும் இது அவசியம் வழிவகுக்கும்….
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2உலக இந்து சம்மேளனம் 2014
இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று… “2009ல் புலிகளுடனான போர் முடிந்த பிறகும் இலங்கையில் வாழும் எண்ணற்ற இந்துக்களின் துயரம் இன்னும் முற்றுப் பெறவில்லை” என்று தனது உரையில் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்… 800 வருடங்களுக்குப் பிறகு தில்லியின் ஆட்சிக் கட்டிலில் ஒரு சுயபெருமிதம் மிக்க இந்து அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோதிக்குப் புகழாரம் சூட்டினார் முதுபெரும் வி.ஹி.ப தலைவர் அசோக் சிங்கல்… உலகம் முழுவதற்கும், ஆத்ம ஞானத்தின், மானுட ஒற்றுமையின் செய்தியை இந்துக்களால் வழங்க முடியும் என்று தலாய் லாமா குறிப்பிட்டார்…50 நாடுகளைச் சேர்ந்த 1800 பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள், கலைப் பிரபலங்கள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், பல்துறை அறிஞர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டின் நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றனர்…
View More உலக இந்து சம்மேளனம் 2014தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்
எப்படி சீக்கியர்கள் தங்கள் குருக்களின் பலிதானங்களை தம் வீரர்களின் தியாகங்களை நினைவு கொள்கிறார்களோ அப்படியே தியாகி குமார பாண்டியனையும், பேராசிரியர் பரமசிவத்தையும், ஆடிட்டர் ரமெஷையும் பலிதானி வெள்ளையப்பனையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பலிதான தினங்கள் இந்து ஒற்றுமைக்கும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் நாம் பிரதிக்ஞை எடுக்கும் தினங்கள் ஆக வேண்டும். இந்நிலையில் நாம் மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது இதைத்தான். காவல்துறை செய்யும் கைதுகளுக்கு அப்பால் இந்துக்களாகிய நமக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்து இயக்கங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்த வழக்குகளின் போக்குகள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களால் இங்கு ஜிகாதி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்தால் நிச்சயமாக இந்து இயக்கங்கள் அந்த வழக்குகளை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு எடுத்து சென்று விசாரிக்க அழுத்தங்கள் அளிக்க வேண்டும்.
View More தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்
இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்… தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் – இராணுவ மயமாக்கப் பட்ட சூழல், திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும், மதமாற்றம்… முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. அந்த அமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை… இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு முழுமையான சமஷ்டி அமைப்பினை ஏற்படுத்துவதாகும். இதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசு செய்வதற்கு மறுத்தால், இந்திய அரசு மற்ற இரண்டு சிக்கலான தெரிவுகளுக்கு செல்வது தான் பிரசினைக்கு தீர்வு காணும் வழிகளாக ஆகும்….
View More இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்
இந்திய அரசியலைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. ஆனால், தொடர்ந்து பல பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியும் இன்னபிற போலி மதச்சார்பின்மை கட்சிகளும் சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் ஒடித்து வளைத்து திரித்து வந்துள்ளனர். இந்த பிரசினையின் சில அம்சங்களை விளக்கும் முகமாக தில்லியைச் சேர்ந்த சமர்த் டிரஸ்ட் என்ற அமைப்பு “தி மெஜாரிடி ரிப்போர்ட்” என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் தமிழ் வடிவத்தை இங்கு வெளியிடுகிறோம் (தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார், பாஞ்சஜன்யம் இதழின் ஆசிரியர்)…
View More இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்