கண்ணைக் கூச வைக்கும்படி வெள்ளைப்பாறைகளிலிருந்தும், வெள்ளை மணற்படுகையிலிருந்தும் சேர்ந்து ஒளிரும் வெளிச்சம். அதனுடன் வெண்புகைபோல் வருடிப்போகும் மஞ்சுப்பொதிகள் தரும் மயக்கம். உண்மையில் அதுதான் தண்மைமிகு தவளமால்வரை….. இன்றும் ஒட்டுமொத்த ஜாவானியரும் வணங்கியிருக்கும் இந்தோநேசியாவின் காவல் தெய்வம் இந்த மணிமேகலா தெய்வமே. அவள் பெயர் ராத்து கிடுல் (Ratu Kidul). அவளே திரை இரும் பௌவத்துத் தெய்வமமான கடலரசி! ஜாவாவின் மேற்கு முனையிலிருந்து பாலியின் கிழக்கு முனைவரை அவளை வழிபடாத இடங்களே இல்லை. இன்றும் இந்தோநேசிய அரசகுடும்பத்தினர் அனுதினமும் அவளுக்குப் படையல் வைத்து வணங்காமல் எந்த வேலையும் தொடங்க மாட்டார்கள்…
View More மணிமேகலையின் ஜாவா – 2Tag: இந்து வரலாறு
மணிமேகலையின் ஜாவா – 1
மணிமேகலை காப்பியத்தில் ஒரு முக்கியமான கட்டம் சாவகம் எனும் ஜாவாவில் நிகழ்கிறது. நாகபுரத்தின் அருகே சோலை ஒன்றில் வந்திறங்கி அங்கே தருமசாவகன் என்ற முனிவருடன் மணிமேகலை தங்கியிருக்க அங்கு வந்து அவளைச் சந்திக்கிறான் ஆபுத்திரன்… சாவகத்தீவில் வரும் முக்கியப்பாத்திரங்களைப் பற்றிய பெயர் முதலான குறிப்புகளோ, இடங்களோ நிச்சயம் ஜாவாவின் மேற்குப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, தேடலைத் தொடங்கினேன். நான் அங்கேயே மேற்குஜாவாவில் வசிக்க நேர்ந்ததும் என் நல்லூழ்…ஆபுத்ரா என்ற பெயரை மேற்குஜாவாவின் சுந்தானிய இன (Sundanese) மக்கள் அவன் கதையை மறந்து விட்டாலும் இன்றும் பரவலாய் வைத்துக் கொள்கின்றனர்…
View More மணிமேகலையின் ஜாவா – 1இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு
வெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ பாதிரிகளும் இங்கு வந்து கல்வி சேவை செய்யாமலிருந்திருந்தால் இந்த மனுவாத பிராம்மணீய இந்து மதம் நம்மையெல்லாம் கல்வியறிவில்லாத மூடர்களாகவேதான் வைத்திருக்கும். இன்றைக்கு இந்த மண்ணின் கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி கிடைத்திருக்கிறது என்றால் அது கிறிஸ்தவமும் மிஷினரிகளும் போட்ட பிச்சை…. இது பல நேரங்களில் பல மேடைகளில் பேசிக் கேட்ட விஷயம்தான். …… அவர்கள் சொல்வதில் என்ன தவறு என்றுதான் பெரும்பான்மையான ஹிந்துக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்…..ஆனால், உண்மை என்ன என்பதைச் சிறிது ஆழமாக வரலாற்றைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
View More இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு