சென்னை, பிப்ரவரி-3. சுவாமி தயானந்த சரஸ்வதி புத்தகத்தை வெளியிடுகிறார்…அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும் மனித உரிமை அமைப்புகள், கல்வியாளர்கள், சிந்தனை வட்டங்கள், மத அமைப்புகள் ஆகியவை நிழலிருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது…
View More Breaking India புத்தக வெளியீட்டு விழாTag: காலனியம்
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
தோள்சீலைக் கலவரம் நடக்கத் தூண்டிய சமூக-பொருளாதார-அரசியல்-காலனிய நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மிகுந்த ஆதாரத்துடன் ஆசிரியர்கள் அடுக்குகின்றனர்… ஏன் இப்படி ஒரு பொய்யான சித்திரத்தை கட்டமைத்தார் கால்டுவெல்?… ஒசரவிளையில் அமைந்துள்ள இந்த லிங்கஸ்தானமே ஐயா வைகுண்டர் தர்மயுக அரசாட்சி நடத்துதற்குரிய அரியாசனம் எனக் கருதப்படுகிறது… சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் குறித்து ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்துக்கு இருக்கும் புறக்கணிப்பு நிலையைப் பயன்படுத்தி தேச விரோத சக்திகள் அவர்களது உரிமைக்காகப் போராடுவது போல, அவர்களை தங்கள் இந்திய விரோத நிலைப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
View More தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]நம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்
கடவுளை நீங்கள் உணரத் தான் முடியும், அனுபவிக்கத் தான் முடியும். *நம்ப* முடியாது, நம்பவும் கூடாது… எரிச்சலும் பொறாமையும் கொண்ட தேவன்களின் பிள்ளைகளாக இருப்பதைக் காட்டிலும், சிம்பன்சிகளின் பரிமாணப் பங்காளிகளாகவும், கொரில்லாக்களின் தாயாதிகளாகவும் இருப்பது.. ஒரு மூன்று பக்கக் கட்டுரைக்குக் கூட அவர் அமைக்கும் பரந்துபட்ட களமும், தரும் உழைப்பும் சாதாரணமானவை அல்ல. இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருமே அதனை மனப்பூர்வமாக உணரமுடியும்…
View More நம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?
அறியாமையின் காரணமாக நடந்த சமுதாய அடக்குமுறையினால் சிலர் தாழ்த்தப்பட்டிருந்த நிலை அந்நியர்களுக்கு சாதகமாகப் போய்விட்டது… எத்தனை நிகழ்வுகளில் ‘இந்துக்கள்’ என்று இந்த அந்நிய சக்திகளால் வர்ணிக்கப்படுபவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும்… இவர்களில் யார் யார் எந்த நாட்டுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அந்த நாட்டுக்கு ‘டாட்டா’ காட்டி அனுப்பி வைப்போம்.
View More இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்
நான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன… ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம்? மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்… உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள்…
View More சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி
சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன்… முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா அல்லது… இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது…(மூலம்: ஜான் மெக்லிதான்)
View More ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணிமதமெனும் பேய்
”நம் வள்ளலாரோ ஒரு படி மேலே சென்று மதம் ஒரு பேய் என்றே எடுத்துரைத்திருக்கிறார். என்னே வள்ளலாரின் பகுத்தறிவுப் பாங்கு!..”… காலனிய காலகட்டத்தில் மேற்கத்தியர்கள் தங்கள் மதமான கிறிஸ்தவம் இயற்கையிலேயே புனிதமானது, தெய்வீக ஆணையுடையது என்றும், மற்ற மதங்கள் வெறும் கருத்துக் குவியல்கள் என்றும் கருதினார்கள். ஆனால் இந்திய மரபில் மதம் வெறும் நம்பிக்கையை அல்ல, அறிவுபூர்வமாக விவாதித்து பின் உட்கிரகிக்கப் பட்ட கொள்கை என்பதையே குறித்தது என்று அந்தச் சொல்லின் உருவாக்கம் மூலமே புரிந்து கொள்ள முடியும்…
View More மதமெனும் பேய்இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2
ஆப்பிரிக்க எண்ணெய் கிணறுகளின் பங்குகளை வாங்க இந்திய, சீன கம்பெனிகள் போட்டி போடுகின்றன. சீன அரசே தேவையான பணத்தை புரட்டி தருவதால் சீன கம்பெனிகளே போட்டியில் முதலிடம்… ராஜ தந்திரங்களும், தார்மீக நெறிமுறைகளும் ஒருசேர பின்பற்றப் படுவது சாத்தியமல்ல. இது யதார்த்தம்… வர்த்தகத்தின் இலாபத்தின் கணிசமான பகுதி ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை இந்தியா உறுதி படுத்த வேண்டும்…
View More இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1
அமேரிக்கா பல வரலாற்று தவறுகளை செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், கம்யூனிஸ்டுகள் அட்டூழியங்களை மட்டுமே செய்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். தவறுகளையும், அட்டூழியங்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதை இந்தியர்கள் கைவிட வேண்டும்… இந்தியாவின் இறையாண்மை, இந்தியர்களின் முன்னேற்றம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்குத்தான் நாம் ஒரு அரசை பதவியில் அமர்த்துகிறோமே தவிர, மற்ற நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவும் நம் நாட்டின் தேவைகளை மறப்பதற்காகவும் அல்ல….
View More இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….
View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி