கொலைக்கு முன்பு, தங்களது பகுதிக்குள் வந்து இஸ்லாமிய மதப்பிரசாரம் செய்ய முயன்ற முஸ்லிம் மதவெறியர்களிடம் இந்தியன் என்ற உணர்வுடனும் இயல்பான நட்புடனும் அவர் பேசி வாதம் செய்ததன் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நியாயமான, அறம் சார்ந்த நிலைப்பாட்டுக்காக ஒருவர் கொலைசெய்யப் படலாம் என்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. இந்தக் கொலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து, விசாரணை நடத்தி உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்…
View More மதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலைTag: கும்பகோணம்
கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள வேதாரண்யம், திருத்துறைபூண்டி, பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ஆர்எஸ்எஸ் – சேவா பாரதி புயல் நிவாரண பணி முகாம்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொருளாகவும், பணமாகவும் உதவி செய்ய விரும்புவோருக்கான தொடர்புகள் கீழே… புயலுக்கு பின் முதலில் களத்திற்கு வந்த சேவாபாரதி சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து பணியை துவக்கியது. பெட்ரோலால் இயங்கும் ரம்பங்கள் திருப்பூரிலிருந்து வாங்கி அனுப்பப்பட்டது. அதோடு 10,000 எம் ஏ எச் திறனுள்ள பவர் பேங்க் 200 முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டு அங்கு நிவாரணப்பணியில் களத்தில் இருப்பவர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் இயங்குபவர்களுக்கும் வழங்கப்பட்டது. பழைய ப்ளெக்ஸ்கள், தார்பாய்கள் வாங்கப்பட்டு தற்காலிக முகாம்கள்,உடைந்த கூரைகள் மீது போட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் மிக முக்கியமாக உணவுப்பொருட்களை அனுப்பும் துவங்கியது…
View More கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்மகாமகம்: ஓர் அனுபவம்
தண்ணீரை இறைத்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்பலைகள், மஞ்சள் கரைந்து விழும் மங்கலப் பெண் முகங்கள், இணைந்து தீர்த்தமாடும் தம்பதிகளின் இல்லற நேசம், முதியவர்களை கவனத்துடன் அழைத்து வரும் இளையவர்களின் சிரத்தை, இறைநாமங்களைக்கூறிக் கொண்டு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நீர்மொண்டு ஊற்றுக் கொள்ளும் பக்தி என எல்லாம் கலந்து அந்த ஆறு ஏக்கர் மகாமகக் குளம் ஒரு தெய்வீகக் களியாட்டக் களம் போலத் தோற்றமளித்தது… மகாமகக் குளம் என்று அம்புக் குறி போட்டு அங்கங்கு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகை கூட விடாமல் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு வைத்திருப்பது, மிகவும் அருவருப்பையும் கசப்புணர்வையும் ஏற்படுத்துகிறது…
View More மகாமகம்: ஓர் அனுபவம்இயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்
தஞ்சை மாவட்டத்தின் இயற்கை வழி விவசாயிகள் ஒருங்கிணைந்து தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை…
View More இயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்கும்பகோணம்: விவேகானந்தர்-150, சிந்தனையாளர் கருத்தரங்கம்
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த ஆண்டு சிறப்பு விழா. பிப்ரவரி 3ம்…
View More கும்பகோணம்: விவேகானந்தர்-150, சிந்தனையாளர் கருத்தரங்கம்கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்
நாள்: 25-02-2012, சனிகிழமை பிப்-25, சனிக்கிழமை மாலை 7 மணி. ராயா மகால், காந்தியடிகள் சாலை. பேராசிரியர். சாமி. தியாகராஜன், திரு. கிருஷ்ண பறையனார், திரு.ம. வெங்கடேசன் (எழுத்தாளர்), திரு. ம. ராஜசேகர் (வழக்குரைஞர்), திரு. B.R. ஹரன், (பத்திரிக்கையாளர்) திரு. அரவிந்தன் நீலகண்டன் (நூலாசிரியர்) கலந்து கொள்கின்றனர்…
View More கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு
முகலாயப் படையெடுப்பாளர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புகுந்தார்களாம். அங்கே தூணில் அமைந்திருக்கிற அஷ்புஜ அக்னி அகோர வீரபத்திரரின் வனப்பையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் கண்டு… கர்நாடக நாட்டுப்புறவியலில் “வீரகசே” என்ற கூத்து மரபு உண்டு.. இலங்கையில் யாழ்ப்பாணத்து கட்டுவன் பகுதியில் வீரபத்திரக் கூத்து அப்பகுதியில் வதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் ஆடப்பட்டு… குளிர்ச்சியான இடத்தில் மட்டுமே வசிக்கும் தேள்கள் இவருக்கு மாலையாகின்றன. சிலந்திப்பூச்சி இவருடலில் விளையாடி மகிழ்கிறது…
View More வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடுசதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்
உடலை மணல்மூடி தியானத்தில் லயித்திருந்தபோது அவரது தலை மண்வெட்டியால் வெட்டப் பட்டு ரத்தம் வந்தது – நவாப் படைகளிலிருந்து தப்பிக்கவும், நதிக்கரைகளைப் பாதுகாக்கவும் முயன்றபோது படைகளால் தாக்கப் பட்டிருக்கலாம்… ”வர்ணாஸ்ரமங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்தவன் நான். சாஸ்திரங்களில் விலக்கப்படுபவை பற்றிய விதிகளையும் உதறித் தள்ளியவன்”…
View More சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்சைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி
இன்றைக்கும் ’மேல்சாதி’ தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் சக ஹிந்து தலித் சகோதரர்கள் செல்வதைத் தடுக்கும் சாதீய வெறி மிருகங்கள் இருக்கும் அதே தமிழ்நாட்டில் தான், வேறொரு நகரத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் இல்லாமல்… சக மனிதர்களின் உரிமைகளை மறுக்கும் எருமைத் தலையர்க்கு பாடம் புகட்டி நல்வழிப் படுத்தும் தேவியின் திரிசூலம் இந்துத்துவம்.
View More சைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளிசமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்
பல தலைமுறைகள் தவம் செய்து பின்னர் பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தான். ஆனால் ஸ்ரீ தர அய்யாவாளோ தலித் சேவை மூலம் தனது வீட்டு கிணற்றிலேயே கங்கையை பிரவாகமெடுத்து வர செய்தார். ஹிந்துத்துவ ஞான கங்கை ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு இதயத்திலும் சாதியமெனும் அழுக்குகளை நீக்கி சமுதாய ஏற்றம் பெற உழைப்போம். அதற்கு இந்த கங்காவதரண மகோத்ஸவம் நமக்கு உத்வேகமளிக்கட்டும். கார்த்திகை அமாவாசை (2010 டிசம்பர் 5, ஞாயிறு), திருவிசநல்லூர், தஞ்சை மாவட்டம்…
View More சமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்