அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்

மே-23 அன்று ஆலய கோபுர கலசங்கள் சேதப்படுத்தப்பட்டதும், இறை மூர்த்தங்களின் உடைமைகள் திருடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் இருப்பது அதிர்ச்சிகரமான செயல். அற நிலையத்துறை சார்பாக எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் விடப்பட்டுள்ள ஆலயத்திற்கு பக்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலரும் முழு போதையில் சுய நினைவின்றி இருந்திருக்கிறார். காவல்துறை கடைசியில் கோவிலில் ஒளிந்திருந்த நபரை கைது செய்தனர். நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடி மற்றும் உடலில் அங்கங்கே டாட்டூ குத்திக்கொண்டு முழு ஆரோக்கியத்தோடு திட்டமிட்டு கோவில் கதவை திறந்து இறை மூர்த்தங்களை சேதப்படுத்திய “மனநலம் குன்றியதாக” அறிவிக்கப்பட இருக்கும் கூலி சமூக விரோதியான அந்த நபரை காவல் துறையினர் பத்திரமாக பாதுகாத்து அழைத்து சென்றனர்… திமுக ஆட்சி வந்த உடன் திருக்கோவிலின் திருக்குளத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டு வெற்றிகரமாக மத மாற்ற பணிகளை ஆலயத்திற்குள்ளேயே செய்யும் பெந்த கோஸ்தே சர்ச்சின் அடாவடிகள். அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அற நிலையத்துறை அதிகாரிகள் என்று அலங்கோல நிலையில் இருக்கிறது உண்மை நிலை…

View More அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்

அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?

சுதந்திரத்திற்குப்பின் காங்கிரஸ், திராவிட கட்சிகள் கோவிலுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நான் விவாதிக்க தயார் இல்லை. எல்லோருமே ஏதோ ஒன்று முயன்றுள்ளார்கள். ஆனால் பல ஆயிரம் வருடம் காப்பாற்றப்பட்ட இந்த நிலம் – கோவில் – சிலை – கல்வெட்டுகள் எல்லாம் கடந்த 50 வருடத்தில் சூறையாடப்பட்டதன் அளவீட்டை கவனியுங்கள். இது முழுக்க முழுக்க நிர்வாக கோளாறாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் நடந்தது என்பதை பிரித்துப் பார்க்க நமக்கு ஒரு ஆய்வு தேவையில்லை. எனவே, ஜக்கி வாசுதேவ் சொல்கிற ஒரு புள்ளிக்கு நாம் வர வேண்டும். இதில் ஹிந்து பெருமக்களுக்கும், இந்த கலாச்சாரத்திற்கும் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தருகிற வலிமையான செய்தி ஒன்று உள்ளது. “அண்ணா,எங்கள் ஊருடைய பழைய பெயர் என்ன?” என கேட்டார்கள். அப்போதும் ஆநாங்கூர்தான் என்றோம். ஆனால் அவர்கள் நம்பவில்லை..

View More அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?

தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?

இந்த நிகழ்வானது பாரத நாடெங்கும் தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு புனிதநீராடல் விழாக்களிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.. இந்த அனைத்து மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் கோயில் நிர்வாகங்கள், ஆன்மீக அமைப்புகள கூடிப் பேசி பரஸ்பர ஒத்துழைப்புடன் இந்த விழாக்கள் நடந்தேறுகின்றன. முதலமைச்சர்களே கூட கலந்து கொள்கிறார்கள். அத்தகைய நல்ல முன்னுதாரணத்தை கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தின் போது தமிழ்நாடு அரசும் கடைப்பிடித்தது. இப்போது என்ன ஆயிற்று?.. “குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகமான பக்தர்கள் செல்ல பாதைவசதி இல்லை; இடவசதியும் இல்லை” என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார் ஒரு அரசு அதிகாரி. 1990களில் கூட கோயிலுக்கு முன்பாக மனதைக் கொள்ளை கொள்ளும் மணல்மேடு இருந்தது. அதனை முழுவதுமாகத் தோண்டி மணல் கொள்ளையர்கள் அழித்த பிறகு, இப்போது சேறும் சகதியும் முட்புதர்களும் பரவிய குப்பை மேடாக ஆகி விட்டிருக்கிறது. அட, இந்த விழாவை முன்னிட்டாவது அதைத் தூய்மை செய்து பயன்பாட்டுக்கு ஏற்றபடி ஆக்கலாம் என்று இந்த ஆணையருக்கு புத்தி போகவில்லை. அரசின் கையாலகாத் தனத்தை முரசறைவது தான் அவருக்குத் தெரிந்திருக்கிறது…

View More தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?

சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்

சிதம்பரத்தில் நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம். 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது நந்தனார் மடம் . சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர். ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர்… என்ன ஒரு காட்சியது. ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்‌ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயில் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார்… எப்படி சீர் செய்வது? 20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும். இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை…

View More சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்

சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

2004ல் பிடிபட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே 16 கோடி. அது கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது போன்ற தகவல்களை எல்லாம் கேட்பது, வாசகர்களின் அறிவுக்கு அதீதமான விஷயம். எனவே, நாங்கள் அதையெல்லாம் சொல்ல மாட்டோம். 2004ல் தப்பித்த தீனதயாளன் 1965லும் பிடிபட்டு தப்பித்தவர். இப்போதும் அவர் பிடிபடவில்லை.
93 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவை அனைத்தின் மதிப்பும் 50 கோடிகள் மட்டுமே… கரப்ஷன் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட துறைகள், சிலைகடத்தலின் போது சேர்த்து கடத்தப்பட்டதால் அவை எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் செல்வக் குவிப்பு குறித்துக் கேள்விகேட்க எந்தத் ‘துறையும்’ இல்லை…

View More சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

மேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்

அது போன்ற ஒரு கோயிலை நான் இதுவரை பார்த்ததில்லை. 10 அடி கருங்கல் அடித்தளத்திற்கு மேலே சுமார் 20 அடி உயர செங்கல் விமானம் விண்ணை முட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. அந்த அற்புததை தேடி அருகே ஓடினோம், மக்கள் அந்த இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கால் கூட வைக்க முடியவில்லை! இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை… வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். “சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி “. அடடா ராஜராஜனின் கல்வெட்டு! தஞ்சை கோயிலை எழுப்பிய ராஜ ராஜனின் 11 ஆம் ஆண்டில் இந்த கோயில் எழுப்பட்டிருக்க வேண்டும்! மேட்டு மருதூர் என்ற இந்த ஊர் அன்று “மாதான மருதூர்” என்று அழைக்கப்பட்டுள்ளது, இறைவன் பெயர் “ஆராவமிதீஸ்வர்”…

View More மேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்