சிதம்பரத்தில் நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம். 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது நந்தனார் மடம் . சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர். ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர்… என்ன ஒரு காட்சியது. ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயில் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார்… எப்படி சீர் செய்வது? 20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும். இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை…
View More சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்Tag: சிதம்பரம்
மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே
பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்…
View More மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையேஎப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை
தமிழ் இசை மூவரில் ஒருவர் மாரிமுத்தா பிள்ளை. தில்லை ஈசனிடமே பேரன்பு பூண்ட அடியார். அவனைத் தன் ஆண்டானாகவே கொண்டவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தான் அடியானாகிப் பாடுகிறார். ஆயினும், தமது அன்பின் உரிமையினால் தில்லை ஈசனை இகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல்களே அனேகம் ஆகும்… “சாதியும் தாயும் தந்தையும் இல்லார் தனியர் என்றேனோ, பெண்ணால் – பாதியுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட புலையர் என்றேனோ, சாதி – பேதமாய்ப் பிள்ளைக்குக் குறவர் வீட்டினில் பெண்கொண்டீர் என்றேனோ”… இவரது பாடல்களில், ‘காலைத் தூக்கி’, ‘ஏதுக்கித்தனை மோடி,’ எனும் பதம் முதலிய சில இன்றும் பரதநாட்டியத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன…
View More எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளைமறக்கொணா இருவர்
திருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை, “தில்லை மூதூர் ஆடிய திருவடி”, என்றும்,”தில்லையுட் கூத்தனே” என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம். அது, சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல். ‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள். எனவே, சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும். அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு; பிண்டமாகிய உடலிலும் உண்டு. அண்டத்திலுள்ளது, பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது , ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும்…
View More மறக்கொணா இருவர்எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்
இசையில் ஒன்றி, அதன் ஊடாக சேவடி தூக்கி ஆடுகின்ற ஐயனின் ஆனந்த நடனத்தையும் அம்மை சிவகாமி அதை ஒயிலாக நின்று வியந்து ரசிப்பதையும் நமது மனக்கண்ணில் கண்டு புளகாங்கிதம் எய்த வைக்கும் பாடல்! வளமை பொருந்திய சொற்களின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. ஆடவல்லான் மீது இவ்வளவு அழகிய ஒரு பாடலா? யார் இயற்றியது எனத் தேட வைத்த பொருள் நயம்… சீர்காழி முத்துத் தாண்டவர் இசைக் கருவிகள் செய்யும் இசை வேளாளர் பரம்பரையில் வந்தவர். அன்னை பார்வதியின் அருளினால் நோயிலிருந்து குணமாகி, அவள் ஆணைப்படி சிதம்பரம் சென்றார். அங்கு தில்லை அம்பலத்தில் நாளின் தொடக்கத்தில் கேட்கும் சொற்களைக் கொண்டு நாள்தோறும் நடராஜன் மீது ஒரு பாடல் இயற்றலானார்… முதன்முதலாகப் பாடல்களை பல்லவி, அனுபல்லவி, சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடும் முறையை இவர்தான் நடைமுறைப் படுத்தினார் எனக் கூறப்படுகிறது…
View More எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்சிதம்பர தரிசனம்
தில்லையில் தங்கியிருந்த காலத்தில் குமரகுருபரர் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்று மூன்று மணிகள் சேர்ந்த மாலையைப் போல மூன்று வகை செய்யுட்களால் ஆன இந்நூல் காட்டும் சிதம்பர தரிசத்தை இக்கட்டுரையில் காண்போம்…. உடுக்கை ஏந்திய தமருகக் கரம் உலகங்களை சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது…. இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?….
View More சிதம்பர தரிசனம்ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்
நந்திதேவருக்கும், ப்ருங்கி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் கொம்புகளும் கால்களும் உண்டு… ஆனால், ஆதிசேடனின் அம்சமான பதஞ்சலிக்கு கால்கள் எங்கே…? கொம்புகள் எங்கே..? ஆக, மூவரும் பதஞ்சலியை கொஞ்சம் கேலி செய்தார்களாம். பதஞ்சலி முனிவரோ.. “எனக்கு காதும் கண்ணும் ஒன்றே எனவே. இறைவன் ஆடுவதை பார்க்கிற போதே, அவனது திருவடிகளின் தாளலயத்தையும் உணர்கிறேன். அதற்கு ஏற்றாற் போல, கொம்பும் காலும் இல்லாத ஸ்தோத்திரம் ஒன்று செய்கிறேன்.” என்று அழகான ஒரு ஸ்தோத்திரம் பாடினாராம்.. அதன் படியே, கால் போடும் தீர்க்கமான எழுத்துக்களும், கொம்பு போடுகிற ஏ,ஓ போன்ற உயிர் சார் எழுத்துக்களும் இல்லாமல் பதஞ்சலி முனிவர் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தை படைத்திருக்கிறார்…
View More ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்
எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்? இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன? எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன? … பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்…. எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்….
View More அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்வேண்டாம் இவருக்கு குரு பூஜை
அந்த மகத்தான தேசபக்தரை சிறைவைத்து செக்கிழுக்க செய்து சித்திரவதை செய்த வெள்ளைக்காரன், அவரை உதாசீனம் செய்த காங்கிரஸ் மேலிடம்… இவர்களெல்லாம் அவருக்கு செய்த கொடுமைகள், அவமானங்கள் போதாதா? இந்த ஆழமான தமிழறிஞரைசாதிய சிறையில் அடைத்து இழிவு படுத்தி அவருக்கும் குருபூஜை போட்டு என்றென்றைக்கும் அவரை சாதிய செக்கிழுக்க வைக்க வேண்டுமா? போதும் வாழும் போது அவர் பெற்ற சிறைவாசமும் அவர் அனுபவித்த கொடுமையும்.
View More வேண்டாம் இவருக்கு குரு பூஜைஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்
இருபதாம் நூற்றாண்டிலும், தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் சுவாமி சகஜானந்தர். உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப்பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு எதிர் பிரச்சாரத்தை செய்த சூழலிலும், அவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர்… எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழிலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார்… 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார்…. கோயில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது குறித்தும், தாழ்த்தப் பட்டவர்கள் பெயரால் கிறிஸ்தவ மிஷன்களுக்கு அரசு எந்த நிதி உதவியும் வழங்கக் கூடாது என்றும் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் புரட்சிகரமானவை… தமிழகத்தின் மாபெரும் தலித் இயக்க முன்னோடி, இந்து சமுதாய சிற்பி சுவாமி சகஜானந்தர் குறித்த விரிவான கட்டுரை இது…
View More ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்