வேதப் பாக்கள் வனங்களில் தான் உருப்பெற்றன. ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. நைமிச வனம்,காம்யக வனம், த்வைத வனம், தண்டக வனம், மது வனம், தாருகா வனம் என்று பல பண்டைய வனப் பெயர்கள்.. ஆனைக்கா, கோலக்கா, கோடிக்கா, நெல்லிக்கா, குரக்குக்கா, வெஃகா, தண்கா எனும் அழகான பெயர்கள் வனம் சார்ந்த தலங்களைக் குறிப்பவை… நெருங்கிய வனப்பகுதி நாட்டுக்கு ஓர் அரணாகவே திகழ்ந்தது. தமிழ் மன்னர்கள் பனையையும், வேங்கையையும், ஆரையும் காவல் மரமாகக் கொண்டிருந்தனர்… காடுறை வாழ்க்கை ஆன்மிகத்துக்குத் துணை புரிவதாக நம்பினர்; வானப்ரஸ்தம் எனும் ஒருநிலையும் வரையறுக்கப் பட்டது. ..
View More வனங்களும் நமது பண்பாடும்Tag: சுற்றுச்சூழல்
பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்
பிஷ்னோய் பழங்குடியினர் மான்களையும், எருமைகளையும், குரங்குகளையும் பிற அரிய விலங்குகளையும் மட்டும் பாதுகாக்கவில்லை, மரங்களையும் உயிரினும் மேலாக பாதுகாக்கிறார்கள். உலகின் ஆதி சுற்றுச் சூழல் போராளிகள் பிஷ்னோய்களே. கஜோரி என்றொரு வகை மரம் அங்கு புனிதமாகக் கருதப் படுகிறது. அது பஞ்ச கால மரமாகக் கருதப் படுகிறது. கடும் பஞ்ச காலத்திலும் கூட அதன் மரப் பட்டைகளைத் தின்று உயிர் பிழைத்து விடலாம்… ஒரு முறை ஒரு கஜோரி மரத்தை வெட்டுவதற்காக மன்னன் படைகளை அனுப்பி வைத்த பொழுது முதலில் எங்களை வெட்டி விட்டு மரங்களை வெட்டுங்கள் என்று அந்த மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மன்றாடியுள்ளார்கள். படையினர் அவர்களைக் கொல்லக் கொல்ல மொத்தம் 393 பேர்கள் அங்கு அந்த மரத்தைப் பாதுகாப்பதற்காக உயிரை விட்டிருக்கிறார்கள். இதை பிஷ்னோய் பழங்குடி மக்களின் மூத்தவர் ஒருவர் குழந்தைகளுக்குக் கதையாகச் சொல்கிறார்…
View More பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி
பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்… தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே….
View More தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடிஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்….
View More ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?பியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை
சேலத்தில் மேம்பாலப் பணியை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக சேவகர் பியூஷ்…
View More பியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கைகத்தி – திரைப்பார்வை
இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு, நான் தங்களின் திரைப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். தங்களின் உணர்வுகளையும், கோப தாபங்களையும் முழமையாக மதிக்கிறேன். அர்த்தமற்ற சினிமாத்தனமான விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய விமர்சனம் ஆழமானது… ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்த முதல் விஷயம் முருகதாஸ் புதிதாக கம்யூனிஸம் பேசுகிறார்… எதற்கெடுத்தாலும் முதலாளிகளை குறைசொல்லாமல் அவற்றால் நமக்கு வரும் இலாபத்தை எண்ணிப் பார்ப்போம். மக்கள் போராட்டங்களை பெரிதுபடுத்தி அதை ஊக்கப்படுத்தாமல் அரசாங்கத்திற்கு துணை நிற்போம். இறுதியில் சென்னைக்கு செல்லும் ஏரி தண்ணீரை முடக்கும் காட்சி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது…உங்கள் படத்தின் வசனத்தையே மேற்கோள் காட்டி கூறுகிறேன், “போலி மதச்சார்பின்மை என்பது மிகப்பெரும் சிலந்தி வலை”. அதில் சிக்கிய சிறுபூச்சியாக நீங்கள் மாறிவிடாதீர்கள்…
View More கத்தி – திரைப்பார்வைபட்டாசுடன் கொண்டாடுங்கள்!
உலகெங்கும் பெரும் அளவில் விளையாட்டு நிகழ்வுகள் என்றாலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றாலும் மாபெரும் வான வேடிக்கைகள் அவ்விழாக்களின் அடையாளமாக இருக்கின்றன. ஆனால் வெகுமக்கள் தாங்களாகவே ஒவ்வொரு இல்லத்திலும் வானவேடிக்கை நடத்தும் சிறப்பு உலகிலேயே தீபாவளித் திருநாளுக்கு மட்டுமே உரித்தானது. இதை நாம் இழக்கலாமா…உண்மையில் பட்டாசுகளும் மத்தாப்புகளும் விளைவிக்கும் ஒலி ஒளி அளவுகளுக்கு மிக மிகச்சிறிய அளவிலேயே வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகளை பணிக்குப் பயன்படுத்துவது ஒரு சமூக அவலம். இதற்கான தீர்வு தயரிப்புப் பொருட்களை தவிர்ப்பதால் நிச்சயம் வந்துவிடாது…
View More பட்டாசுடன் கொண்டாடுங்கள்!நிலமென்னும் நல்லாள்
தண்டிப்பதற்காக நாணேற்றிய வில்லுடன் நின்ற ப்ருதுவைப் பார்த்து பூமி கேட்டாள் – “என்னை நீ கொன்று விட்டால், எங்கு வாழ்வார்கள் உன் மக்கள்?” ப்ருது மனம் தெளிந்தான்… சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள்? என்று வேண்டினான். அவர்களுக்குத் தங்கள் செயல் புரிந்தது. அதற்குப் பரிகாரமாக, மரங்களின் மகளான மாரீஷாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்… நச்சு வேதிப் பொருட்களைக் கொட்டி மண்ணை அழிக்கிறோம். விளைநிலத்தில் எரிபொருள் குழாய்களைப் பதிக்கிறோம். பொன்விளையும் பூமியைப் பெட்ரோல் கிணறுகளாக்க எண்ணுகிறோம்….
View More நிலமென்னும் நல்லாள்ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி
ஹரித்வாரில் உள்ள சாந்தி சதன் ஆசிரமத்தில் மூன்று மாதங்களாக உண்ணா நோன்பு இருக்கிறார் அந்த 81 வயது முதிய துறவி சுவாமி ஞான ஸ்வரூப் ஸானந்த். ஒரே விஷயத்திற்காக அவர் அறிவித்திருக்கும் ஐந்தாவது கால வரையற்ற உண்ணா நோன்பு இது… கட்டுப் பாடற்ற, அசுரத் தனமான அணைத்திட்டங்களும் மின் உற்பத்தி நிலையங்களும் கங்கை நதியையும் இந்தப் பிரதேசத்தின் சூழலியலையும் முற்றிலுமாக அழித்து விடும் என்று அவர் கருதுகிறார்… சாது பழமைவாதியும் அல்ல, முன்னேற்றத்திற்கு எதிரியும் அல்ல. பூர்வாசிரமத்தில் ஜி.டி.அகர்வால் என்ற சூழலியல் பொறியாளர் (Environmental Engineer) அவர்… “2010ம் ஆண்டு எங்களது தொடர்ந்த போராட்டத்தால் மூன்று அணைக்கட்டுத் திட்டங்கள் நிறுத்தப் பட்டன. ஆனால் இப்போது அலகநந்தா நதியில் 5 மின் திட்டங்களை மறுபடியும் அறிவித்துள்ளனர். அன்னை கங்கை கட்டற்றுப் பாய்பவள். அவளது பிரவாகத்தை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது” என்கிறார் ஸ்வாமி ஸானந்த்…
View More ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவிவிவசாயிகளைப் பாதுகாப்போம்
விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் சிக்கல். இதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசித்ததின் விளைவாக இப்புத்தகத்தை எழுதியிருக்கும் சு.சண்முகவேல் அடிப்படையில் ஒரு விவசாயி. விளைச்சல் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே கண்டவர். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது….ஐந்து அருமையான செயல்திட்டங்களை இந்நூல் முன்வைக்கிறது. ‘வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல’ என்று நூலை வாழ்த்தியுள்ளார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்…
View More விவசாயிகளைப் பாதுகாப்போம்