அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது.. அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது… இந்தப் புத்தகத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜே.சாய் தீபக் ஆகிய இரண்டு சிந்தனையாளர்களும் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளனர். புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசும் அந்த இரண்டு முன்னுரைகளையும் கீழே தருகிறோம்..
View More அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்Tag: தமிழக அரசியல்
தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2
முதல் பகுதியைப் படிக்க தமிழகத்தை சூழ்ந்துள்ள முஸ்லீம்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எல்லை மீறிய…
View More தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2தமிழகத்துக்கு நயவஞ்சகம் இழைத்தாரா நரேந்திர மோடி?
திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பும் காழ்ப்புணர்வைத் தாண்டி, தமிழர்கள் பிரதமர் மோதி மீது வெறுப்பும் காழ்ப்பும் கொள்வது நியாயம்தானா? அதற்கான ஏதேனும் குன்றிமணி அளவுக்கான காரணமாவது உள்ளனவா? உண்மை நிலவரம் என்ன?.. நன்றி மறப்பது நன்றன்று. உப்பிட்டவரை உள்ளளவு நினை என்றெல்லாம் தமிழர்கள் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள். ஆனால் அதைக் காற்றில் பறக்க விட்டு தமிழகத்தின் மீது பாசத்துடனும் அன்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வரும் ஊழல் கறை படியாத அப்பழுக்கற்ற பாரதப் பிரதமரை அவமதிப்பது என்பது….
View More தமிழகத்துக்கு நயவஞ்சகம் இழைத்தாரா நரேந்திர மோடி?ஒரு ஹிந்துத்துவ வாக்காளனின் கோரிக்கைகள்
சமூக, அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஹிந்துவே, ஹிந்துத்துவ வாக்காளன். ஒரு ஹிந்துத்துவ வாக்காளனாக, எனக்கு மூன்று எதிர்பார்ப்புகள் / கோரிக்கைகள் உள்ளன. அவை மீது கவனம் செலுத்தும் கட்சிக்கே, என் ஓட்டு… இட ஒதுக்கீட்டில், ‘க்ரீமி லேயர்’ அதாவது, பின்தங்கியவர் களில் வசதிபடைத்தவர் நீக்கம் என்ற வழிமுறை, கேலிக்கு உரியதாகவும், நடைமுறை சாத்தியம் இல்லாததாகவும் ஆகி விட்டது… ஹிந்து ஆலயங்கள், மதச்சார்பற்ற அரசின் கையில், பெரும் சுரண்டல் களங்களாக, பாரம்பரியங்களை, கலைச்சொத்துகளை, வழிபாட்டு மரபுகளை ஒழித்து, மதமாற்றிகளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் கருவிகளாக மாறி நிற்கின்றன…
View More ஒரு ஹிந்துத்துவ வாக்காளனின் கோரிக்கைகள்தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்
பதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்… பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்கும் குற்றத்தை பாஜக மீண்டும் மீண்டும் செய்யும் என்கிறேன்….
View More தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?
கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வியாபித்திருக்கும் மொண்ணைத் தனத்தையும் தேக்கத்தையும் உடைத்தெறியக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கிறது… எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது… திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது…
View More 2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்
தலைமைத்துவம் தமிழ் மரபில் நான்கு குணங்களைக் கொண்டது – அஞ்சாமை, ஈகை, விவேகம், செயலூக்கம். திராவிட இயக்க அரசியல் இந்த நான்கையும் எப்படி சித்தரிக்கிறது என பார்க்கலாம்… யார் ஒன்றுமே செய்ய மாட்டார்களோ அவர்களுக்கு நேராக செய்வது நல்லது என்ற நோக்கில் திராவிடம் மத்திய அரசை நோக்கி புஜம் மடிப்பது மோஸ்தரானது. பொதுவாக திருப்பி்அடிக்கும் தரப்புகளிடம் குனிந்தும், ஒன்றும் செய்யாதென உறுதி படுத்தப்பட்ட தரப்பிடம் கொந்தளிப்பதும் திராவிட மரபு…
View More தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்காலா: திரைப்பார்வை
ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்… மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்…இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்…
View More காலா: திரைப்பார்வைஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்
முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்? கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா? நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா? கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல…
View More ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்
ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம். உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்தில் ஒரு செயல்திட்டத்தை [ ஸ்கீம் ] உருவாக்கச்சொன்னது. அவ்வளவுதான். இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு.. அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இதற்குத் தயாராக இல்லை. கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் மட்டுமல்ல, தமிழகமே அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை… காரணம் , அணைகள் வாரியத்திடம் சென்றால் அணைகளில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கு மட்டுமே விநியோகிக்கப்படும்… இருக்கும் ஏரி , குளங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு ,குடிநீர் தேவைக்காக பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்கு குழாய் மூலம் நீர் எடுத்துச்செல்லும் வேலையெல்லாம் நடக்காது. மேலும் அணையை திறந்துவிட மாண்புமிகு முதலமைச்சர் தாயுள்ளத்துடன் உத்தரவிட்டார் என்று செய்தி வெளியிட்டு புளகாங்கிதப்பட்டுக்கொள்ளவும் முடியாது…
View More காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்