பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்…
View More மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையேTag: தாண்டவம்
மறக்கொணா இருவர்
திருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை, “தில்லை மூதூர் ஆடிய திருவடி”, என்றும்,”தில்லையுட் கூத்தனே” என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம். அது, சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல். ‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள். எனவே, சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும். அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு; பிண்டமாகிய உடலிலும் உண்டு. அண்டத்திலுள்ளது, பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது , ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும்…
View More மறக்கொணா இருவர்சிதம்பர தரிசனம்
தில்லையில் தங்கியிருந்த காலத்தில் குமரகுருபரர் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்று மூன்று மணிகள் சேர்ந்த மாலையைப் போல மூன்று வகை செய்யுட்களால் ஆன இந்நூல் காட்டும் சிதம்பர தரிசத்தை இக்கட்டுரையில் காண்போம்…. உடுக்கை ஏந்திய தமருகக் கரம் உலகங்களை சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது…. இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?….
View More சிதம்பர தரிசனம்மாங்கனி தந்த அம்மை
“இந்த மாங்கனி நான் கொடுத்தனுப்பிய மாங்கனி அன்று. இதன் ருசி வேறாக இருக்கிறது. மூன்று உலகங்களிலும் இது போன்ற மாங்கனி கிடைப்பதரிது. இதை எங்கே வாங்கினாய்?” என்று கேட்க புனிதவதி திகைத்துப் போனாள். என்றாலும் நடந்ததை நடந்தபடி சொல்வது தன் கடமை என்று உணர்ந்து உண்மையைச் சொன்னாள்… புனிதவதி என்ன செய்தாள்? இனியும் இவனுக்காக இத்தனை நாள் சுமந்து கொண்டிருந்த இந்த அழகையும் தசைப் பிண்டமான் இந்த உடலையும் நீக்கி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். ஆலங்காட்டு அப்பனிடம் அப்பனே! உன் தாள்கள் போற்றும் பேய் வடி வத்தை எனக்கு அருள வேண்டும்” என்று வேண்டினாள்…. புனிதவதியார் பேயுருவோடு வட திசையிலுள்ள பல இடங்களுக்கும் யாத்திரையாகச் சென்றார். எல்லா இடங்களையும் கடந்த பின் சூலபாணி யார் வீற்றிருக்கும் கைலை மலையை அடைய எண்ணி னார். ஐயன் வீற்றிருக்கும் மலையைக் காலால் மிதிக்கலா காது என்று காலால் நடப்பதை விட்டுத் தலையால் நடக்க லானார். இப்படித் தலையால் நடந்து கைலை மலையின் உச்சியை அடைந்தார்….
View More மாங்கனி தந்த அம்மைதாண்டவம் [சிறுகதை]
அவரது கலை ஆளுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், விரல்களை மடக்கிக் காட்டும் பேருண்டப் பட்சி முத்திரைதான் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும்… பரதநாட்டியத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது… கோபமும், பீபத்சமும், சிருங்காரமும் எல்லாம் ஒருவித கலாபூர்வமான அழகியல் வெளிப்பாடாக இருக்கவேண்டுமே தவிர அப்பட்டமாக இருக்கக் கூடாது என்பது நாங்கள் படித்து உள்வாங்கியிருந்த பரதக் கலை கோட்பாடு… தி மடோன்னா முத்ரா… தி ரைஸன் கிரைஸ்ட் அபிநயா… தி சர்ச் முத்ரா…
View More தாண்டவம் [சிறுகதை]பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்
சத்தியத்தை – சிவத்தை – சுந்தரத்தை, சுடுகாட்டு அரங்கின் மைய நடனமாக அனுபவிக்கின்றது அம்மையின் மனம்.. புழுதி அள்ளி அவிக்க முயல்கின்றது பேய்! பூச்சுக்கள் உதிர்கையில், சாயம் வெளுக்கையில், புழுதி அள்ளி அவிக்க முயலும் கைகளும் நம் கைகளே என்பது புலனாகின்றது… ஒப்பனைகளின் அழிவில் பேயரங்கமும், அதன் மைய நிகழ்வாம் அப்பனின் ஆட்டமும் தெரிகின்றன. அந்த ஆட்டமே பிரபஞ்சத்தின் இயக்க மையம்; இலட்சிய மையம்.
View More பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
நாராயணன் என்றாலே, ‘அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அவனில் எல்லாம் இருக்கின்றன’ என்பது பொருள். அவனைப் பிரம்மம் என்பர். .. நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.
View More அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்