ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாகத் தெரிகிறது. ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். அப்படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான். .. தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர்….
View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2Tag: தாய்லாந்து
அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்
ஒன்றே பரம்பொருள் எனினும் பரம்பொருள் நாட்டங்களும் தேட்டங்களும் பல திறத்தின. திருவுருவங்களில் பரம்பொருள் ருசி கண்டவர்க்கும் காண முயல்வோர்க்கும் அநுகூலமான, அழகிய திருவடிவம் விநாயகப் பெருமானின் விசித்திர வடிவம். இத்திருவுருவம் ஏழு தேசங்களின் அஞ்சல் பூக்களில் எழிலுடன் இடம் பெற்றுள்ளது. பாரதம், நேபாளம், ஸ்ரீலங்கா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, செக் – என்பன அத்தேசங்கள்.
View More அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்
பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது… சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள்… தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?
View More நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!
மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் “இஸ்லாமுக்கு எதிரானவை” என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன…
View More ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!