பாரதி: மரபும் திரிபும் – 8

மதிமாறனின் பாட்டனார்கள்- திராவிட இயக்கப் போர்வாள்கள், “…அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தியவன் பாரதி” என்று கூறி மதிமாறனின் முகத்தில் அறைகிறார்கள்… 1924இல் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சென்ற அத்துனை பேரும் (ஈவெரா உள்பட) பாரதியாரின் பாடலையே பாடிச் சென்றனர்… ஆனால் எல்லாச் சித்தர்களுமே சிவனை ஏற்றுக்கொண்டவர்கள், கடவுள் உண்டு என்பதை நம்புபவர்கள் என்பதை மட்டும் மதிமாறன் சொல்ல ம(றைத்து)றந்துவிட்டார்… அழுகணிச் சித்தரின் கண்ணம்மாவைதான், கடத்தி வந்து பாரதி தன் காதலியாக்கிக் கொண்டார் என்று மதிமாறன் குற்றம் சுமத்துகிறார்… வார்த்தைக்கு வார்த்தை, கம்பன், குறளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறான்…

View More பாரதி: மரபும் திரிபும் – 8

பாரதி: மரபும் திரிபும் – 3

”நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப் பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப் பட்டது… சூழ்ச்சிக் கொள்கையை மக்கள்முன் வைத்துத்தான் கபடநாடகம் ஆடி நீதிக்கட்சிக் காரர்கள் ஆட்சிக்கு வந்தனர் என்கிறார் எம்.சி.ராஜா… .’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்… நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்– ஆதரவாக இருந்ததினால்– பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்– மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார்.

View More பாரதி: மரபும் திரிபும் – 3

பாரதி: மரபும் திரிபும் – 2

இவர்கள், இவரின் தலைவர் ஆகியோரெல்லாம் காந்தியத்தின் மீது கடும்தாக்குதலை நடத்தினால்கூட பொறுத்துக் கொள்வார். ஆனால் பாரதி விமர்சிக்கலாமா காந்தியத்தை? வந்ததே கோபம் மதிமாறனுக்கு. உடனே பேனாவை எடுத்தார். பார்த்தீர்களா பாரதி, காந்தியை, காந்தியத்தை விமர்சித்துவிட்டு, பின் அவரையே பாராட்டுகிறார் என்று நமக்கு விளக்குகிறார்… காந்தியைப் புகழ்ந்து இப்படி எழுதும்போதே ஈவேராவுக்குக் கூச்சமாகவும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல் இருந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, அரசியல் செய்ய வேண்டி இருக்கிறதே என்று அவரது மனம் அமைதிப்படுத்தியிருக்கும்…

View More பாரதி: மரபும் திரிபும் – 2

பாரதி: மரபும் திரிபும் – 1

மதிமாறனின் இந்தப் புத்தகத்துக்கு மட்டுமே பதில் எழுதப்படுவது அல்ல இந்தக் கட்டுரைகளின் நோக்கம்… வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டுப் பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்?… ஆண்டுதோறும் பல்கலைக்கழகப் பட்டம் பெறும் பிராமணரல்லாத இளம் பட்டதாரிகளுக்கு வரவேற்பு நடத்தி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி, அவர்களது சமுதாயக் கடமையை நினைவுறுத்துவதும் அந்த அமைப்பின் பணிகளில் ஒன்றாக இருந்தது… முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி மசோதாவைக் கொண்டு வந்தபோது பிராமணரான சத்தியமூர்த்தி மட்டும் எதிர்க்கவில்லை. மதிமாறன் போற்றிப் பாராட்டுகின்ற நீதிக்கட்சியினரும் முதலில் ஆதரிக்க மறுத்தனர்; அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தனர்…

View More பாரதி: மரபும் திரிபும் – 1

செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்

தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?… பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் – காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? (மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்)

View More செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்

மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்

பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை… மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.. பாதிரியாரின்பால் இரக்கம் உண்டாகும்படி பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது மிகவும் திட்டமிட்டு நடத்தப் பட்ட செயல்பாடு..

View More மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை… ‘நம்மவர்’ – ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.

View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)